பணம் என்ன மரத்துலயா சார் காய்குது? புதுசா கார் வாங்குறப்ப வெட்டியா செலவு பண்ணாம காச மிச்சப்படுத்த ஈஸி வழி!
சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு, ஒரு கார் சமூகத்தில் உங்களது அந்தஸ்தை உயர்த்தும், இதனால் முதன் முறையாக கார் வாங்கும் பலர் சிறுக சிறுக பணம் சேமித்து காரை வாங்குவார்கள். இப்படியாகக் காரை வாங்கும் போது அதன் விலை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கலாம். பலர் புதிய கார் வாங்கும் போது அதிகம் செலவாகத் தான் செய்யும் என்ற நினைப்பில் இருப்பார்கள்.
ஆனால் புதிதாக கார் வாங்கினாலும் அதைக் குறைந்த செலவில் வாங்கமுடியும். சில முடிவுகளை நாம் சரியாக யோசித்து எடுத்தால் மட்டும் போதும் ஏகப்பட்ட ரூபாய் மிச்சமாகும். அது எந்த கார் பிராண்டாக இருந்தாலும் சரி புதிய கார் வாங்கும் போது இந்த முறையைப் பின்பற்றினால் நிச்சயம் செலவைக் குறைக்கலாம். இது எப்படி எனக் காணலாம் வாருங்கள்.

செல்ஃப் இன்சூரன்ஸ்
ஒரு கார் வாங்கும் போது அதற்கு இன்சூரன்ஸ் கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் இன்சூரன்ஸ் இல்லாமல் ஒரு காரை ஷோரூமிலிருந்து வெளியே எடுக்க முடியாது. ஆனால் எந்த நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம் தான். கார் ஷோரூம் ஊழியர்கள் பரிந்துரை செய்யும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பிரிமியம் தொகை அதிகமாக இருக்கலாம்.
அதனால் மார்கெட்டில் எந்த இன்சூரன்ஸ் குறைவான பிரிமியத்தை வழங்குகிறது. உங்களுக்குத் தேவையானது எது என்பதை நீங்களே தேடி தேர்வு செய்வதன் மூலம் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தலாம். இன்சூரன்ஸ் எடுக்கும் போது ரிட்டன் டூ இன்வாய்ஸ் பாதுகாப்பு, தண்ணீர்/ சாவி பாதுகாப்பு, அனைத்து விதமான டேமேஜ் கவர் பாதுகாப்பு மற்றும் 0 சதவீத டிப்ரிசியேஷன் கவர் ஆகியவற்றைத் தேர்வு செய்யுங்கள்.
நோ கிளைம் போனஸ்!
இன்சூரன்ஸ் நிறுவனம் இதற்கு முன்னர் தங்கள் வாடிக்கையாளர்கள் எந்த வித கிளைம் செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு அடுத்த இன்சூரன்ஸ் எடுக்கும் போதோ அல்லது புதுப்பிக்கும் போதோ அவர்களது சரியான டிரைவிங் ஸ்டைலை ஊக்கப்படுத்த புதிய இன்சூரன்ஸ் அல்லது புதுப்பிக்கும் போது பிரமியம் தொகையில் தள்ளுபடியை வழங்குகின்றனர். நீங்கள் இதற்கு முன்னர் கிளைம் செய்யாமல் இருந்தால் அதைப் பயன்படுத்தி பிரிமியத்தை குறைக்க முடியும்.
குறைந்த வட்டிக் கடன்
இன்று கார் வாங்கும் பெரும்பாலானோர், வங்கிக் கடன் மூலமே வாங்கி வருகின்றனர். குறிப்பிட்ட அளவு பணத்தைக் கையிலிருந்து கட்டிவிட்டு மீதம் உள்ள பணத்திற்கு வங்கிக் கடனை பெற்று மாதம் மாதம் இஎம்ஐ மூலம் கடனை அடைத்து வருகின்றனர். இப்படியாகக் கடன் வழங்கும் வங்கிகள் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான வட்டியில் கடன் வழங்குகிறது. இப்படியாக கார் வாங்க நினைத்தால் குறைவான வட்டியில் கடன் வழங்கும் வங்கியைத் தேர்வு கடனை பெறுவது காருக்காக செலவு செய்யும் பணத்தில் கொஞ்சத்தை மிச்சம் செய்யும்.
நீட்டிக்கப்பட்ட வாரண்டி
ஒரு கார் தயாரிப்பாளர் காரை விற்பனை செய்யும் போது காருக்கான வாரண்டியையும் வழங்குவார். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் காரில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதை இலவசமாக கார் தயாரிப்பு நிறுவனமே மாற்றித் தரும். இப்படியாக சில நிறுவனம் கார் வாங்கும் பணத்தில் கொஞ்சம் கூடுதல் செலுத்தினால் காரின் வாரண்டி காலத்தை நீட்டித்து வழங்குவதாகத் தெரிவிக்கும்.
இது கேட்க நன்றாக இருந்தாலும் உங்களுக்கு அதிக செலவை இழுத்துவிடும் ஒரு இடமாகக் கூட இருக்கலாம். அதனால் நீங்கள் வாரண்டியை எவ்வளவு காலம் நீட்டிப்பதற்கு எவ்வளவு வழங்குகிறீர்கள். அதே காலத்தில் காரில் ரிப்பேர் ஏற்பட்டால் அதைச் சரி செய்ய எவ்வளவு செலவாகும் எனக் கணக்கிட்டுப் பாருங்கள் சில கார்களின் ரிப்பேர் செலவு குறைவாக இருக்கும் இப்படி இருந்தால் வாரண்டி நீட்டிப்பு திட்டத்தில் சேராமல் இருப்பதே நல்லது.
ஆக்ஸசரீஸ்
ஒரு காரை வாங்கிவிட்டால் அத்தோடு கதை முடிந்துவிடப் போவதில்லை அந்த காருக்கு சில ஆக்ஸசரீஸ்களையும் வாங்க வேண்டும். உதாரணமாக ஃப்ளோர் மேட், சீட் கவர் என உள்ளிட்டவற்றையும் வாங்கி பொருத்தினால் தான் காரை சாதாரணமாகப் பயன்படுத்த முடியும். ஆனால் இப்படியாக ஆக்ஸசரீஸ்களை தங்களிடமே வாங்கி சொல்லி கார் ஷோரூம் ஊழியர்கள் உங்களை வலியுறுத்தலாம்.
ஆனால் இந்த ஆக்ஸசரீஸ்கள் வெளி மார்கெட்டில் ஷோரூமில் உள்ள விலையைவிடக் குறைவான விலையிலேயே கிடைக்கும். அதனால் அதையும் வெளிமார்கெட்டிலும், ஷோரூமிலும் விலையை செக் செய்துவிட்டு எங்கு குறைவாக இருக்கிறதோ அங்கே வாங்கி பொருத்திக்கொண்டால் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
இப்படியாக ஒரு புதிய காரை வாங்கும் போது இந்த விஷயங்கள் எல்லாம் நம் கையில் இருக்கிறது. அதைச் சரியாகக் கையாள்வது மூலம் நாம் கார் வாங்கும் போது செலவை குறைத்து ஏராளமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். இந்த இடங்கள் எல்லாம் ஷோரூம் ஊழியர்கள் உங்களுக்கு ஆசை வார்த்தை கட்டி செலவை அதிகரிக்க வைக்கும் இடங்களில் இங்குக் கவனமாக இருங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








