99% பேர் கார் ஓட்டும் போது இந்த தவறை செய்வார்கள்! பனி காலங்களில் இதில் கவனமா இருங்க!
தற்போது இந்தியா முழுவதும் பணிக்காலம் மிக அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பணி நேரங்களில் கார் கண்ணாடிகளில் பனி தொடர்ந்து சாலையில் செல்ல முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இப்படியான நேரங்களில் கார் கண்ணாடியில் படரும் நீக்குவது எப்படி? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
பனி நேரங்களில் கார் கண்ணாடிகளில் படரும் பனித்துளிகள் ஓட்டுநருக்கான விசிபிலிட்டியை குறைக்கிறது. இதனால் அவரால் சாலையில் வரும் வாகனங்களை கவனித்து வாகனம் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. தற்போது அதிகமான பனி இருப்பதால் சாலையில் அதிகமான விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக குளிர் நேரங்களில் கார் ஓட்டி செல்பவர்களுக்கு கார் கண்ணாடியில் படரும் பனி மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

கார் கண்ணாடியின் உட்புறமாக பனி படர்வதால் விஷன் பாதிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி கார் டிரைவர்கள் கார் கண்ணாடியை துடைத்தபடியே பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. பலர் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். கார் ஜன்னல் கண்ணாடி கதவுகளை எல்லாம் திறந்து விட்டால் இந்த பிரச்சனை சரியாகும் என திறந்து விடுகிறார்கள் ஆனால் இதனால் வெளியில் இருக்கும் குளகர் காருக்குள் வந்து காரில் இருக்கும் பயணிகளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் சில வாகன ஓட்டிகள் தங்கள் கார் ஜன்னல் கண்ணாடிகளை திறக்காமல் காரில் பயந்து கொண்டிருக்கும் ஒரே ஒரு துணியை வைத்துக்கொண்டு தொலைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள். இதுவும் தொந்தரவாக இருக்கும் இப்படியாக பயணம் செய்வது கவனசிதறல்களை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை சரி செய்ய சில கார் ஏசியில் உள்ள ஹீட்டர்களை பயன்படுத்துகிறார்கள். சூடான காற்றை காரின் கண்ணாடியில் செலுத்துவதன் மூலம் இந்த பனி விலகிவிடும் என சிலர் நினைக்கிறார்கள்.

ஆனால் இதுவும் தவறான விஷயம் இப்படி செய்வதால் பனி இன்னும் சற்று அதிகமாக தான் ஆகுமே தவிர குறைவாக வாய்ப்பு இல்லை. அப்படி என்றால் இதை எப்படி சரி செய்வது என்று நீங்கள் கேட்கலாம். இதை சரி செய்வதற்கு முன்னர் இது ஏன் ஆகிறது என்பதை முதலில் நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் காருக்கு வெளிப்புறமும் காருக்கு உட்புறமும் ஒரே மாதிரியான வெப்பநிலை இல்லை என்றால் இப்படியான சூழ்நிலை ஏற்படும். காருக்கு வெளியே அதிக குளிர் இருக்கும் போது காருக்குள்ளே அதிகமான வெப்பம் இருந்தால் இது போன்ற கார் கண்ணாடியில் பனி படரும் என்பது தான் அறிவியல்.

பிரச்சினை சமாளிக்க வேண்டும் என்றால் நீங்கள் காரில் ஏசியை தான் ஆன் செய்ய வேண்டும் ஹீட்டரை ஆன் செய்யக்கூடாது. ஏசியை ஆன் செய்தால் காருக்குள்ளே இருக்க வெப்பம் ஓரளவு குறைந்துவிடும். இதனால் வெளியில் உள்ள வெப்பமும் காரின் உள்ளே இருக்கும் வெப்பமும் ஓரளவு சரியாக இருக்கும். இதனால் உங்கள் கார்களில் கண்ணாடி பகுதியில் பனி படர்வது நிறுத்தப்படும்.
இதனால் உங்களுக்கு வாகனத்தில் செல்லும்போது தெளிவான விஷன் கிடைக்கும் நீங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து வாகனத்தில் பயணம் செய்யலாம். இதுதான் சரியான வழிமுறை ஆனால் குளிர் காலத்தில் வெளியிலேயே ஏற்கனவே குளிர் காருக்குள்ளும் ஏசியை ஆன் செய்ய வேண்டுமா? என சிலர் கேட்கலாம். காரின் கண்ணாடிகளை இறக்கி விட்டால் வெளியில் உள்ள குளிரும் உள்ளே இருக்கும் சமநிலை ஏற்பட்டு இந்த பனி படர்வது தவிர்க்கப்படும்.
இதனால் நீங்கள் குளிர் காலங்களில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். இப்படியாக உங்கள் காரின் முன் பக்க கண்ணாடியில் பனி படந்தால் உடனே ஏசியை ஆன் செய்யுங்கள். அல்லது ஜன்னல் கண்ணாடிகளை இறக்குங்கள். தேவையில்லாமல் துணியை வைத்து துடைப்பது காரின் ஹீட்டரை ஆன் செய்வது எல்லாம் வீண் முயற்சிதான்.
குளிர்காலங்களில் வாகனங்களின் கண்ணாடியை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியம் கண்ணாடிகளில் தூசுகள் அதிகமாக இருந்தால் இப்படியாக பனி படறும் போது அது உங்களின் விஷனை பாதிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதனால் கார் கண்ணாடிகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருந்தால் அப்பொழுதுதான் உங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் ஏற்படாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் பயணிக்கும் போது சிறந்த விஷன் என்பது ஓட்டுனருக்கு தேவைப்படும் அதனால் கார் விண்டு ஸ்கிரீனில் பனி படராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பனி நேரங்களில் இது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதனால் மேலே சொன்ன டிப்ஸ்களை ஃபாலோ செய்து பணி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களுக்கு மிக முக்கியமான அவசியமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









