தப்பி தவறி கூட இந்த தப்ப பண்ணாதீங்க! மலைப்பகுதியில் காரில் போகும்போது செய்யக்கூடாதவை!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று சுற்றுலா பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த விபத்தில் மூலம் நாம் முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டியது மலைப்பகுதியில் நாம் வாகனம் ஓட்டும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? முக்கியமாக மலையிலிருந்து கீழே இறங்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன? இதுகுறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று மாலை தென்காசியில் இருந்து சுற்றுலா சென்ற 54 பயணிகளை கொன்ற சுற்றுலா பஸ் மலையிலிருந்து கீழே இறங்கும்போது மரப்பாலம் என்ற பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த விபத்து குறித்து மக்கள் அதிகமாக பேசி வரும் நிலையில் மலையில் இருந்து நாம் வாகனத்தில் கீழே இறங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என காணலாம்.

குறைவான கியர்: மலையிலிருந்து நாம் கீழே இறங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் நாம் எப்பொழுதும் குறைவான கியரிலேயே வாகனத்தை இயக்க வேண்டும். அப்படி இயக்கினால் வாகனத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது எளிமையாக இருக்கும். குறைவான கியரில் வாகனம் ஓடும் போது அதன் இன்ஜின் பிரேக்கிங் மெக்கானிசம் விரைவாக காரை நிறுத்துவதற்கு உதவும்.
நீங்கள் மேனுவல் கியர் காரை ஓட்டுகிறீர்கள் என்றால் இரண்டு அல்லது மூன்று என்ற கியரில் மட்டுமே வாகனத்தை இயக்கினால் நல்லது ஆட்டோமேட்டிக் காரை நீங்கள் இயக்கினாலும் நீங்கள் காரின் கியரை குறைத்து வைத்திருப்பது நல்லது. குறைவான கியரில் வாகனம் இயங்கும்போது இன்ஜின் அதிகமாக செயல்பட்டாலும் அது காரின் வேகத்தை அதிகப்படுத்தாது.

பிரேக்குகளை கண்காணியுங்கள்: மலைப்பகுதியில் இருந்து நீங்கள் கீழே இறங்கும்போது அதிகமாக பிரேக் பிடிக்க வேண்டியது இருக்கும். அதனால் நீங்கள் பயணத்தை துவங்கும் முன்பே உங்கள் வாகனத்தின் பிரேக்குகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒரு தடவை செக் செய்து கொள்ளுங்கள். அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் முன்னரே சரி செய்துவிட்டு கிளம்புவது நல்லது. பாதி வழியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இப்படியான விபத்துக்கள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
அதே நேரம் மலைப்பகுதியில் தேவையான அளவு மட்டுமே பிரேக் பயன்படுத்துங்கள். நீங்கள் பிரேக்கில் அதிக அழுத்தம் கொடுப்பதால் தேய்மானம் ஏற்பட்டு அதிக சூடு ஏற்பட்டு பிரேக் ஃபெயிலியர் கூட ஆக நேரிடும். இதனால் கூட விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தேவையான இடங்களில் தேவையான அளவுகளில் மட்டும் பிரேக் பயன்படுத்துவது நல்லது.

நியூட்ரலில் போடாதீர்கள்: மழையில் இருந்து இறங்கும்போது பெரும்பாலான பகுதி இறக்கமாக இருப்பதால் பலர் எரிபொருளை சேமிக்க வேண்டும் எனக்கு கருதி வாகனத்தை நியூட்ரலில் போட்டு பிரேக் கிளட்ச் மற்றும் ஆக்ஸிலரேட்டர் ஆகியவற்றில் இருந்து காலை எடுத்து விடுகின்றனர். கார் இறக்கமான பகுதியில் ஈர்க்கும் வேகத்துடன் செல்கிறது. பலர் இதனால் எரிபொருள் செலவு மிச்சமாகும் என கருதுகின்றனர். ஆனால் இது ஆபத்தான பழக்கமாகும்.
இப்படி செய்வதால் கார் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எப்பொழுதும் கார் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றால் பிரேக் கிளட்ச் ஆக்சிலரேட்டர் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் காரை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் நிறுத்த முடியும்.
தேவை இல்லாமல் கிளட்ச்சில் பயணிக்காதீர்கள்: பலருக்கு காரை நியூட்ரலில் போட்டு பயணித்தால் ஆபத்து கருதி காரை ஸ்டார்ட் செய்து முதல் கியரில் என்கேஜ் செய்து விட்டு பின்னர் அழுத்திப் பிடித்துக் கொண்டு எந்தவித ஆக்சிலேட்டரும் கொடுக்காமல் காரை இறக்கத்தில் ஓட்டி வருகின்றனர். இதுவும் கிட்டத்தட்ட காரை நியூட்ரலில் ஓட்டுவதற்கு சமமான விஷயம் தான். இப்படியாக செய்வதும் ஆபத்து நிறைந்ததாக இருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் கார் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.
இந்த மாதிரியான நேரங்களில் சில நேரம் பிரேக் லாக் அல்லது ஸ்டேரிங்ளாக கூட ஏற்பட வாய்ப்புள்ளது கார் ஆனில் இருக்கிறதா ஆப்பில் இருக்கிறதா என நீங்கள் உணரும் அடுத்த நொடிக்குள் விபத்து ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இப்படியான செயல்களை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் மலைப்பாதைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இப்படியான பல தவறுகளை செய்து வருகின்றனர். இதில் சிலர் அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் சிக்காமல் தப்பி விடுகின்றனர். ஆனால் இது எல்லா நேரத்திலும் கை கொடுக்காது எப்பொழுதும் கார் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே விபத்துக்களை தவிர்க்க முடியும். என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









