இந்த அறிகுறி எல்லாம் உங்க கார்ல தெரியுதா? உடனே காரை வித்துடுங்க! இல்லேன்னா பர்ஸ் காலியாகிடும்

ஒரு கார் அதன் ஓனருக்கு அதிகை செலவை இழுத்துவிடும் பாரமாக கூட மாற வாய்ப்பு உள்ளது. இப்படியாக நீங்கள் பயன்படுத்தும் கார் உங்களுக்குச் செலவை இழுத்துவிடப் போகிறது என்பதைக் கண்டறிய முடியும். இது எப்படி என்ற விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஒரு வாகனம் என்பது தொடர்ந்து தேய்மானகும் ஒரு சொத்து தான் அது எந்த அளவிற்குத் தேய்மானமாகிறதோ அதை விட அதிகமாக அதிலிருந்து நாம் பலனைப் பெறுவது மூலம் தான் ஒரு வாகனத்தை லாபமான பொருளாக மாற்ற முடியும். அதே போலக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு வாகனம் அதன் உரிமையாளருக்கு அதிகமான செலவை இழுத்துவிடும் பொருளாக மாறிவிடும்.

Symptoms To Sell Your Car

அந்த வாகனத்திற்குச் செலவு செய்வதை விட புதிய வாகனத்தையே வாங்கிவிடலாம். இப்படியாக ஒரு வாகனம் அதன் உரிமையாளருக்கு அதிகமாகச் செலவை இழுத்துவிடப் போகிறது என்பதை எப்படிக் கணிக்க முடியும். அதற்கான அறிகுறிகள் எல்லாம் என்னென்ன? எந்த நேரத்தில் வாகனத்தை விற்று விட வேண்டும். அந்த கட்டத்திற்கு மேல் வாகனத்தை வைத்திருந்தால் உங்களுக்குச் செலவு அதிகமாகும்?

ஸ்பேர் தட்டுப்பாடு: ஒரு குறிப்பிட்ட வாகனம் பழைய மாடலாக மாறும் போது அதன் சப்போர்ட் சிஸ்டம் குறைந்து கொண்டே வரும். அடுத்தடுத்த தொழற்நுட்பம் வர வர அதை நோக்கி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நகரத் துவங்கிவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் உங்கள் வாகனத்திற்கு ஸ்பேர் கிடைக்காமல் தட்டுப்பாடாகும். இது உங்கள் வாகனத்தை விற்பனை செய்வதற்கான அறிகுறி.

Symptoms To Sell Your Car

இப்பொழுதே தட்டுப்பாடு வந்துவிட்டால் இது போல ஸ்பேர்கள் வருங்காலத்தில் கிடைப்பது கஷ்டமாகும் தட்டுப்பாடு ஏற்பட்டால் விலை அதிகமாகும். விலை அதிகமானால் உங்களுக்கு காருக்கான ரிப்பேர் / பராமரிப்பு செலவு அதிகமாகும். இதைக் கணக்கிட்டால் உங்களுக்கு நஷ்டம் வரும். இதனால் உங்கள் காருக்கான ஸ்பேர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என தெரிந்தவுடன் காரை செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனை செய்துவிட்டோ அல்லது எக்ஸ்சேஸ் செய்துவிட்டு புதிய காரை எடுத்துக்கொள்வது சிறந்தது.

1லட்சம் கி.மீ: ஒரு காரின் ஆயுள் காலம் என்பது அதன் வாரண்டி காலத்தைத் தாண்டியது என்றாலும், அது எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பொருத்தும் இது மாறுபடும். எவ்வளவு காஸ்ட்லியான வாகனமாக இருந்தாலும் அதன் அதிகபட்ச பயன்பாடு 1 லட்சம் கி.மீ தான். அதனால் நீங்கள் உங்கள் காரை 1 லட்சம் கி.மீ பயன்படுத்திவிட்டால் அதை மாற்றிவிடுவது தான் நல்லது.

Symptoms To Sell Your Car

தேய்மான அளவு: ஒரு காரின் மதிப்பு என்பது புதிதாக வாங்கப்பட்டு ஷோரூமிலிருந்து வெளியே வந்தவுடனேயே 5 சதவீதம் குறைந்துவிடும். அதன்பின் படிப்படியாக வாகனத்தின் தேய்மானம் அதிகமாகி காரின் மதிப்பு குறையும். நீங்கள் பயன்படுத்தும் காருக்கு மார்கெட்டில் எப்படிப்பட்ட பெயர் இருக்கிறது. அதற்கு டிமாண்ட் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்து இது மாறுபடும். அதனால் உங்கள் காருக்கு தேய்மானம் மிக வேகமாக ஆனால் அதாவது மார்கெட்டிலும் உங்கள் காருக்கு பெரிய வெல்யூ இல்லாமல் நீங்களும் அதிக காலம் அந்த காரை பயன்படுத்தினால் அதை உடனடியாக விற்பனை செய்து விடுவது நல்லது. நீண்ட காலத்திற்குப் பிறகு மிகச் சொற்ப பணத்திற்குத் தான் உங்கள் வாகனம் விலை போகும். அதை வைத்து புதிய காரை வாங்க முடியாது.

கார் மாடல் நிறுத்தப்படுவது: நீங்கள் பயன்படுத்தும் கார் மாடலை அதன் தயாரிப்பு நிறுவனம் நிறுத்திவிடுவது உங்கள் காரை விற்பனை செய்வதற்கான நேரம் வந்ததற்கான அறிகுறி. ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மாடல் காரை தயாரிப்பதை நிறுத்திவிட்டால் அதன் பிறகு அந்த காருக்கான மதிப்பு செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் மிக வேகமாகக் குறைந்துவிடும். அதனால் மாடல் நிறுத்தப்பட்ட செய்தி வந்ததுமே உங்கள் காரை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கிவிடுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வாகனம் என்பது நிச்சயம் அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பை பொருத்தே ஓனருக்கு செலவை வைக்கும். முடிந்தளவிற்கு ஓனருக்கு செலவு வரக்கூடாது என்றால் சரியான தருணத்தில் காரை மாற்றுவது தான் நல்ல முடிவு, கார்கள் செண்டிமென்ட் எல்லாம் பார்க்காமல் சரியான நேரத்தில் சுதாரித்துக்கொண்டு வாகனத்தை மாற்றிவிடுவது நல்லது தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 6, 2023, 18:30 [IST]
English summary
How to find the right time to sell your car to escape from losing money
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X