Electric Vehicle Tax Exemption:இப்ப எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் ரூ1.5 லட்சம் வருமான வரி விலக்கை பெறலாம்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மறு ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை நிதியாண்டாகக் கணக்கிடப்படுகிறது. அனைத்து கணக்குகளும் இந்த நிதியாண்டின் அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்போகிறவர்களுக்குக் கடைசி வாய்ப்பாக இந்த நிதியாண்டு இருக்கிறது. அவர்கள் ரூ1.5 லட்சம் பணத்திற்கான வரியைச் சேமிக்கும் கடைசி வாய்ப்பு இது.

மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட்டின் போது ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு வருமான வரியிலிருந்து பிரிவு 80EEB பிரிவின் கீழ் ரூ1.5 லட்சம் வரையிலான பணத்திற்கு வரி விலக்கை அறிவித்திருந்தது.

இன்னும் 6 நாள்ல எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் ரூ1.5 லட்சத்தை வருமான வரி விலக்கை பெறலாம்!

மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்காக வருமான வரி விலக்கில் ஒரு பிரிவையே உருவாக்கியது. இந்த பிரிவின் கீழ் வரிவிலக்கைப் பயன்படுத்தக் கடைசி காலகட்டம் இது தான் வரும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் நீங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் ரூ1.5 லட்சம் வரை வருமான வரியிலிருந்து விலக்கு பெற முடியும்.

இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி இந்த வருமான வரி விலக்கு கிடைக்கும். ஆனால் இந்த விலக்கைப் பெற இந்த வாகனத்தைத் தனி நபரின் பெயரில்தான் வாங்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் பெயரிலோ, அல்லது இந்து கூட்டுக் குடும்பத்தின் பெயரிலும் அல்லது வேறு வகையிலோ வாங்க முடியாது.

இந்த ரூ1.5 லட்சத்திற்கான வருமான வரி விலக்கு என்பது கடன் மூலம் வாகனத்தை வாங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அவர்கள் கடனை திரும்பச் செலுத்துவதில் ரூ1.5 லட்சம் மதிப்பிலான வட்டிக்கான வரியை மட்டுமே குறைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த சலுகை பழைய வரி விதிப்பு முறையின் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் தான் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் இருப்பவர்களுக்கு கிடையாது!

இவி வாங்குவதால் மற்ற பயன்கள்

1. பசுமை வரி : இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு வாகனமும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட வேண்டும். இப்படியாகப் புதுப்பிக்கப்படும் போது பசுமை வரி விதிக்கப்படும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பசுமை வரி கிடையாது. சுற்றுச் சூழலை மாசு படுத்தாத போது இதற்கு ஏன் பசுமை வரி?

2. குறைந்த ஜிஎஸ்டி : பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மத்திய அரசு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வெறும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியைத் தான் செலுத்த வேண்டும்.

3. மாநில அரசு மானியங்கள்: ஒவ்வொரு மாநில அரசுகளும் ஒவ்வொரு விதமான மானியங்களை எலெகட்ரிக் வாகனங்களுக்காக வழங்குகின்றன. டில்லி, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், கர்நாடக ஆகிய மாநிலங்களில் மானியங்கள் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் நினைப்பது என்ன : எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கத் தான். மத்திய மாநில அரசுகள் பல்வேறு மானியங்களை வழங்கி வருகின்றன. இப்படியாகச் செய்வது விற்பனையை ஓரளவிற்கு அதிகரித்தாலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் பேட்டரியின் விலை குறைக்கப்பட வேண்டும். இந்தியாவிற் தற்சார்பு பேட்டரிகள் உருவாக்கப்பட வேண்டும். லித்தியம் அயான் பேட்டரிக்கு மாற்றாக சோடியம் அயான் பேட்டரிக்கான ஆய்வுகளை மேம்படுத்த வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 24, 2023, 16:00 [IST]
English summary
How to get one and half lakhs rupees income tax exemption on the purchase of electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+