இதை மட்டும் செய்யுங்க உங்க காரின் அடிப்பாகத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமா காப்பாத்திடலாம்
உங்கள் வாகனம் குறைவான உயரத்தால் தரையில் உரசுகிறதா? வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸை எப்படி உயர்த்துவது எனக் காணலாம் வாருங்கள். முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை மிக அதிகமாக நடந்து வருகிறது. மக்கள் பலர் சொந்தமாக வாகனங்களை வைத்திருக்க விரும்புகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன் வீட்டிற்கு ஒரு ஸ்கூட்டர்/பைக் இருந்தாலே பெரிய விஷயம் பல வீடுகளில் எந்த வாகனமும் இல்லாமல் இருந்தது.

ஆனால் இன்று பெரும்பாலான வீடுகளில் ஸ்கூட்டர்/ பைக் கண்டிப்பாக இருக்கும் எனச் சொல்லிவிடலாம். பலர் கார்களை நோக்கி நகரத் துவங்கிவிட்டனர். பெருநகரங்களில் பெரும்பாலான மக்கள் சொந்தமாக கார் வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் கார் ஓட்டுவதில் இருக்கும் பெரும் சிக்கல் கிரவுண்ட் கிளியரன்ஸ் தான். இந்தியாவில் பெரும்பாலான சாலைகள் முறையான பாரமரிப்புஇல்லாமல் இருக்கிறது. ஆங்காங்கே குழிகள் மேடு பள்ளங்கள், எல்லாம் இருக்கின்றன.

இதனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக உள்ள கார்களை வைத்திருப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர் காரில் வேகமாகச் செல்வதால் காருக்கு அடிப் பாகத்தில் அடி படுகிறது.

பல சிறிய கார் வைத்திருப்பவர்கள் இந்த பிரச்சனையைப் பரிதான பிரச்சனையாகப் பார்க்கின்றனர். இதனால் அவர்கள் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களை நோக்கிச் செல்கின்றனர். சமீப காலமாக இந்தியாவில் அதிகமாக மக்கள் எஸ்யூவி கார்களை விரும்ப இதுவும் ஒரு முக்கியமான காரணம். இதனால் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களில் எஸ்யூவி ரக கார்கள் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் நாம் இந்த பதிவில் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ள கார்களில் எப்படி கிரவுண்ட் கிளியரஸை அதிகப்படுத்துவது என பார்க்கப்போகிறோம். இதனால் மக்கள் தேவையில்லாமல் காரில் செல்லும் போது காரின் அடிபாகம் தரையில் உரசிச் சேதமடைவதைத் தடுக்க முடியும். முக்கியமாக காரில் உள்ள மற்ற உதிரி பாகங்கள் இதனால் சேதமடையாமல் போதை தடுக்க முடியும். காருக்கான பராமரிப்பு செலவையும் குறைக்க முடியும்.

காயில் ஸ்பிரிங் அசிஸ்டர்ஸ்
கார்களில் காயில் ஸ்பிரிங்கிற்கு அசிஸ்டர்களை பொருத்துவது, கிராவுண்ட் கிளியரன்ஸ் பிரச்சனையைத் தீர்க்க எளிமையான வழி, இது காயில் ஸ்பிரிங்களுக்கு இடையே பொருத்தப்படும். இதுவும் பாலியூரித்தேனால் ஆன காயிலாகும். இதைப் பொருத்துவதன் மூலம் கார் பள்ள மேடுகளில் போதும் போது சஸ்பென்ஸன் செயல்பாடு குறையும்.

இதனால் கார் ஏறி இறங்காது. இதனால் கிரவுண்ட் கிளியரன்ஸ் சஸ்பென்ஸனால் குறையாமல் இருக்கும். இதனால் சேதாரத்தைத் தவிர்க்கலாம். காயில் சஸ்பென்சன் கொண்ட கார்களில் எல்லாம் இந்த காரில் அசிஸ்டர்களை பொருத்தலாம். மொத்தம் 3 விதமான போசிஸன்களில் காயில் ஸ்பிரிங்கள் பொருத்தப்படும்.

ஸ்டிஃப்பர் சஸ்பென்சன்
ஸ்டிஃப்பர் சஸ்பென்சன் என்பது உங்கள் காரில் உள்ள சஸ்பென்சனை மொத்தமாக மாற்றி வேறு ஸ்டிஃப்பரான சஸ்பென்சனை பொருத்துவது தான். இந்த முறைக்குச் செலவு அதிகம் ஆகும்.

இப்படியாக ஸ்டிஃப்பர் சஸ்பென்சனை பொருத்துவது வாகனம் பள்ள மேடுகளில் ஏறி இறங்கும் போது வாகனம் குலுங்குவது குறையும். இதில் சில பிராண்ட்கள் சஸ்பென்சனை டியூன் செய்யும் வசதிகளை வழங்குகின்றனர். இதனால் உங்களுக்குத் தேவையான அளவு ஸ்டிஃப்ட்னஸை இந்த சஸ்பென்சனில் பெற முடியும்.

உயரமான டயர் மற்றும் ரிம்கள்
உங்கள் காரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் வெறும் சஸ்பென்சனை மட்டுமல்ல, காரின் டயர்களின் உயரத்தையும் பொருத்து தான் அமைகிறது. இதனால் உங்கள் வாகனத்தில் இருக்கும் வீலை விடப் பெரிய வீலை பொருத்தினாலும் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கும்.

ஆனால் இப்படியாகப் பொருத்தும் போது புதிய வீல் வாகனத்தின் ஃபென்டரில் அது உரசாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் புதிய அலாய் அல்லது ரிம்களை வாங்கும் போது நல்ல கம்பெனியின் தயாரிப்பாகப் பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








