ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

புதிய கார்களில் வழங்கப்படும் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவதற்கு தேவையான டிப்ஸ்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

இன்றைய காலகட்டத்தில் கார்களில் பல்வேறு அதிநவீன வசதிகள் வழங்கப்படுகின்றன. நாம் வாங்கும் புதிய காரில், இத்தகைய வசதிகள் இடம்பெற்றிருந்தால் நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில் தற்போதைய அதிநவீன வசதிகள் சில சமயங்களில் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தியும் விடுகின்றன. அதாவது இந்த புதிய தொழில்நுட்ப வசதிகளை எப்படி பயன்படுத்துவது? என்பது வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

இதையெல்லாம் பயன்படுத்தும் திறமை நமக்கு இல்லை என்று ஒரு சில வாடிக்கையாளர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு கூட சென்று விடுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. வாடிக்கையாளர்களால் புரிந்து கொள்ள முடியாத தொழில்நுட்ப வசதிகளை கார் உற்பத்தி நிறுவனங்கள் ஒருபோதும் வழங்காது. அதாவது புதிய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவது மிகவும் எளிமையான ஒரு விஷயம்தான்.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

எனவே இனி தாழ்வு மனப்பான்மையுடன் புதிய தொழில்நுட்ப வசதிகளை அணுகாதீர்கள். அவற்றை நம்பிக்கையுடன் கையாளுங்கள். உங்கள் புதிய காரில் வழங்கப்பட்டிருக்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பான டிப்ஸ்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

திறந்த மனநிலையுடன் இருங்கள்!

ஒரு சிலர் புதிய வசதிகளை பயன்படுத்தும்போது குழப்பம் அடைந்து விடுகின்றனர். அல்லது இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது? என்பது தெரியாமல் பயந்து கொள்கின்றனர். இதை இரண்டையும் நீங்கள் செய்ய கூடாது. அதற்கு பதிலாக கற்று கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்கள் காரின் வசதிகளை எப்படி பயன்படுத்துவது? என்பது தொடர்பான விபரங்கள் அனைத்தையும் நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

எதற்காகவும் கூச்சப்படக்கூடாது. கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் காரின் ரேடியோவை பயன்படுத்துவது கூட கடினமான காரியமாகதான் இருந்தது. ஆனால் இன்று தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. எனவே அனைத்தும் எளிமையானதுதான். கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால், நிச்சயம் உங்களால் அனைத்து வசதிகளையும் சிறப்பாக பயன்படுத்த முடியும்.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

போதுமான அவகாசம் கொடுங்கள்!

ஒரு சிலருக்கு ஒரு சில விஷயங்கள் உடனடியாக நடக்காவிட்டால் விரக்தி ஏற்படும். அதனை தவிர்க்க வேண்டுமென்றால், மெதுவாக கற்று கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் உங்களால் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியாது. ஒரு கட்டிடத்தை ஒரே நாளில் கட்டி முடிக்க முடியாது. கால அவகாசம் வேண்டும். அதைப்போலதான் இதுவும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

வீடியோ டுடோரியல்கள் இருக்க பயமேன்!

உங்கள் செல்போனை ப்ளூடூத் மூலம் காரின் ஆடியோ சிஸ்டத்துடன் இணைக்கும்போது பல்வேறு வசதிகளை பெற முடியும். இதுபோன்ற வசதிகளை எப்படி பயன்படுத்துவது? என்பதை வீடியோக்கள் மூலம் கூட நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற டுடோரியல் வீடியோக்கள் தற்போது நிறைய கிடைக்கின்றன. அல்லது காரின் யூஸர் மேனுவலையும் பயன்படுத்தலாம்.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

விற்பனை பிரதிநிதி இருக்கிறாரே!

நீங்கள் கார் வாங்கும்போது விற்பனை பிரதிநிதியிடம் அனைத்து வசதிகள் குறித்தும் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதையெல்லாம் எப்படி கேட்பது? என்ற கூச்ச சுபாவம் இருந்தால், அதை இன்றோடு விட்டு விடுங்கள். கற்று கொள்வதற்கு கூச்சப்பட்டால் எதையும் செய்ய முடியாது. இதுதவிர சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நீங்கள் விபரங்களை பெறலாம்.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் என்றால், டீலர்ஷிப்கள் மற்றும் கார் நிபுணர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் விளக்கங்களை பெறலாம். அதேபோல் நீங்கள் வைத்திருக்கும் அதே காரை வைத்திருப்பவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளலாம். இன்று ஒவ்வொரு கார் உரிமையாளர்களும் முகநூல் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தங்களுக்கென தனி குழுவை ஏற்படுத்தி கொள்கின்றனர்.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

உதாரணத்திற்கு கியா கார்னிவல் கார் என்றால், அந்த காரை வைத்திருப்பவர்கள் தனி குழுவை ஏற்படுத்தி கொண்டு இயங்குகின்றனர். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், அந்த குழுவில் கேட்லாம். அவர்கள் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இந்த விஷயத்தில் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.

ரொம்ப ஈஸி... காரில் அதிநவீன வசதிகளை பயன்படுத்துவது எப்படினு தெரியுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

பாதுகாப்பு முக்கியம்!

ஆனால் நீங்கள் காரை ஓட்ட தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு பட்டனும், ஒவ்வொரு வசதியும் எதற்கு பயன்படுகிறது? என்பதை தெரிந்து வைத்து கொள்வது அவசியம். இல்லாவிட்டால் பாதுகாப்பில் பிரச்னைகள் ஏற்படலாம். அல்லது போக்குவரத்து நெரிசலில் உங்கள் கார் சிக்கி கொண்டு, உங்களுடன், மற்றவர்களுக்கும் பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தொழில்நுட்ப வசதிகளை விரிவாக தெரிந்து கொள்வது உங்கள் சௌகரியத்திற்காக மட்டும் அல்ல. உங்கள் பாதுகாப்பிற்காகவும்தான்.

Most Read Articles
English summary
How to learn advanced features in new car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X