வாகனங்களில் உள்ள கருப்பு நிற பிளாஸ்டிக் பேனல் பழசு போல காட்சியளிக்குதா! இதை புதிதுபோல் ஆக்குவது எப்படி?
வாகனங்களில் அழகுக்காக வழங்கப்படும் அணிகலன்களில் கருப்பு நிற பிளாஸ்டிக் பாடி பேனல்களும் ஒன்றாகும். விரைவில் பொலிவிழக்கக் கூடிய அணிகலனாகவும் இது காட்சியளிக்கின்றது. அதிகப்படியான வெயில் மற்றும் புழுதிகளினால் அவை விரைவில் பாதிப்படைய நேரிடுகின்றன. இது பாதிப்படைவதை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும்.
ஏனெனில், ஓர் பிளாஸ்டிக் பேனல் அதன் பொலிவினை இழக்கிறது என்றால், அதை தாங்கி இருக்கும் அந்த வாகனம் மிகுந்த வயதான தோற்றத்திற்கு மாறுகின்றது என்றே அர்த்தம். குறிப்பாக, மிகவும் பழைய வாகனத்தைபோலவும் அது தென்பட நேரிடும். எனவேதான் வாகன பரமாரிப்பின்போது இந்த பிளாஸ்டிக் பாகத்தை தனி கவனத்துடன் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

இதைச் செய்ய தவறும்பட்சத்திலேயே அந்த பாடி பேனல் தன்னுடைய அழகையும் இழந்து, அந்த வாகனத்தின் அழகையும் இழக்கச் செய்துவிடுகின்றது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட கருப்பு நிற பிளாஸ்டிக் அணிகலன்களை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியுமா? என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது. முடியும், அது எப்படி என்பது பற்றிய டிப்ஸ்களையே இந்த தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
கருப்பு நிற பாடி பேனலை சூடேற்றலாம் (Heating Plastic with Heat Gun or Torch): மெக்கானிக்குகள் சிலர் பொலிவிழந்து பழையதாக காட்சியளிக்கும் கருப்பு நிற பாடி பேனலை புதிதாக தென்பட செய்வதற்காக அதை ஹீட் செய்கின்றனர். இதன் வாயிலாக பிளாஸ்டிக் சூடாகி அதற்கு மேல் தூசிகள் வெளியேறுகின்றன. இதுதவிர, சூடாக்கும் துப்பாக்கி அல்லது டார்ச்சைக் கொண்டும் சிலர் கருப்பு பிளாஸ்டிக் பேனல்களை புதிதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இதனை செய்யும்போது சற்று அதிக கவனம் தேவை என்பதை மறந்துவிடாதீர்கள். ஏனெனில் கவனமின்றி அதிக நேரம் ஒரே இடத்தை சூடாக்க நினைத்தால் அந்த இடம் புதிதாக மாறுவதற்கு பதிலாக அதிக சூட்டினால் ஓட்டை அல்ல அலங்கோலமாக மாற நேரிடலாம். எனவே முன் அனுபவம் இன்றி இந்த செயலில் ஈடுபட வேண்டாம் என்பதே எங்களின் வேண்டுகோள் ஆகும்.
பாடி பேனல் ரீ-ஸ்டோரர் (Trim Restorer): பழைய நிலைக்கு மாறி இருக்கும் கருப்பு நிற பாடி பேனலை புதிய நிலைக்கு மாற்ற இதுவே மிக சிறந்த வழியாகும். நீண்ட நாள் பலனை வழங்கக் கூடியதாகவும் இது காட்சியளிக்கின்றது. சந்தையில் இதற்கென கெமிக்கல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதை வீட்டிலேயே உங்களால் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலே பார்த்த வழிகள் மட்டுமின்றி இன்னும் சில யுக்திகளும் உள்ளன. அந்தவகையில், பல மாதங்களுக்கு நிரந்தரமாக கருப்பு நிற பிளாஸ்டிக் பேனலை புதிதுபோல் மீட்டெடுக்க முதலில் அந்த பிளாஸ்ட்ரிக் ட்ரிம்களை சுத்தமாக வாஷ் செய்து எடுக்க வேண்டும். ஆல்கஹாலை இதற்காக பயன்படுத்தலாம். ஐசோப்ரொபைல் ஆல்கஹாலே மிக சிறந்த ஒன்றாகும்.
இதை செய்த பின்னர் மைக்ரோஃபைபர் துணியை வைத்து அந்த பேனல்களை முழுமையாக துடைத்து எடுக்க வேண்டும். இந்த நிலையிலேயே பெருமளவில் அந்த கருப்பு நிற பேனல் புதிதுபோல் மாற தொடங்கிவிடும். இதைத்தொடர்ந்து, ரீஸ்டோரர் பூச்சை கருப்பு நிற பேனல் முழுவதும் பூச வேண்டும்.

கூடுதலாக பூசப்பட்ட இந்த பூச்சை காய்ந்த துண்டைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் காய்ந்து அது ஓர் பிரச்னையாக மாறுவது தவிர்க்கப்படும். பின்னர் 6 மணி நேரம் அதை காயவிட வேண்டும். இவ்வாறு செய்யும்பட்சத்தில் ஷோரூமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதைப் போல அது மாறிவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதேபோல் காரின் பிளாஸ்டிக் பேனலை சோப்பு போட்டு வாஷ் செய்யும் முன்னர் வழக்கமான வண்ணம் கொண்ட பகுதிகளை டேப் போட்டு ஒட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்த பின்னர் அந்த கருப்பு நிற பேனல்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் தேவையில்லாமல் காரின் பெயிண்ட் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications









