உங்க இஷ்டத்துக்கு நிறுத்தாதீங்க... பைக்கை பார்க் செய்யும் போது இதையெல்லாம் செக் பண்ணுங்க...

பைக்குகளை பொது இடங்களிலும் சரி, பார்க்கிங் பகுதிகளிலும், எப்படி பார்க் செய்ய வேண்டும்? எது சரியான முறை? விரிவாகக் காணலாம்.

நம்மில் பலர் பைக்குகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அதை பொது இடத்திலும் பார்க்கிங் பகுதியிலும் சரியாக முறையில் பார்க் செய்வதில்லை. பலருக்கு எது சரியான முறை என்றே தெரிவது இல்லை. இந்த பதிவில் இது குறித்துத் தான் விரிவாகக் காணப்போகிறோம்.

நீங்கள் பைக்கை பொது இடத்தில் பார்க் செய்யும் போது பைக்கின் பின்பக்க வீல் ரோட்டின் பகுதியில் இல்லாமல் உட்புறமாகவும் முன்பக்க வீல் ரோட்டில் பகுதியில் இருக்கும்படி பார்க் செய்ய வேண்டும். பைக்கை ரோட்டிலிருந்து 45 டிகிரி கோணத்தில் இருக்கும் படி அதாவது நேராக இல்லாமல் சற்று கோணலாக நிறுத்த வேண்டும். இப்படியாக நிறுத்தும் போது அருகில் ஏதாவது பைக் நின்றால் அதிலிருந்து சரியாக 1 மீட்டர் இடைவெளி விட்டு நிறுத்த வேண்டும். இப்படி நிறுத்தினால் பைக்கை எளிதாக எடுக்க முடியும்.

பைக்கை சென்டர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும் போதும் சரி, சைடு ஸ்டாண்டு போட்டு நிறுத்தும் போதும் சரி நீங்கள் நிறுத்தும் இடம் சரியாக கிரிப்பில் இருக்கிறதா அல்லது சற்று வழுக்கலான பகுதியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து கொள்ளவும், நல்ல கிரிப் இருக்கும் பகுதியில் ஸ்டாண்டை போட்டு நிறுத்தவும் தண்ணீர் இருக்கும் பகுதி அல்லது ஈரமான பகுதிகளில் நிறுத்த வேண்டாம் பைக் ஸ்டாண்ட் வழுக்கி பைக் கீழே விழ நேரிடும்.

பார்க்கிங்கில் நிறுத்தும் போது பைக்கை எடுத்துச் செல்லும் போது நேராக எடுத்து செல்லும் படி பார்க் செய்வது தான் சிறந்தது. அதே போல குறிப்பிட்ட பார்க்கிங்கில் கார் பார்க்கிங்கும் சேர்ந்து இருந்தால் கார் சென்று வர போதுமான இடம் இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு பார்க் செய்யவும்.

இடம் இருக்கிறது என்பதற்காகச் சிலர் கார் செல்லும் பாதையின் ஓரமாக பார்க் செய்துவிடுவார்கள். ஆனால் இதைக் கவனிக்காமல் கார் ஓட்டுநர்கள் காரை திருப்பும் போது அல்லது பார்க்கிங்கிற்கு கொண்டு வரும் போது உரசவோ தட்டவோ செய்யலாம் இதனால் காரை விட பைக்கிற்கு தான் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

அதே போல நீங்கள் பைக்கை பார்க் செய்யும் இடம் மேடாகவோ அல்லது பள்ளமாகவோ இல்லாமல் சமதளமாக இருக்கிறதா என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள். மேடு பள்ளமாக இருந்தால் நீங்கள் நிறுத்தி சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு பைக் பாரம் தாங்காமல் நகரவோ அல்லது கீழே விழுந்துவிடவோ செய்யும் கவனமாக இருக்கவும்.

அதே போல பைக்கை மலைப்பகுதிகளில் பார்க் செய்யும் போது பைக்கை கியரில் பார்க் செய்வது நல்லது? கார்களை பார்க் செய்யும் போது நாம் பார்க்கிங் பிரேக்கை பயன்படுத்துகிறோம். ஆனால் பைக்கில் பார்க்கிங் பிரேக் கிடையாது. அதனால் நாம் பார்க்கிங் பிராக்கிற்குப் பதிலாக கியரில் பைக்கை நிறுத்துவதால் பைக் நகராமல் இருக்கும். இது மலைப்பகுதிகளில் மட்டுமல்ல சரிவான பகுதிகள் மேடுகளில் பைக்கை நிறுத்தும் போது இதைப் பின்பற்றலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 10, 2022, 18:15 [IST]
English summary
How to park your two wheeler properly
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+