நாளுக்கு நாள் பெட்ரோல் வண்டியில மைலேஜ் குறைஞ்சிக்கிட்டே வருதா? எல்லாரும் சொல்லும் குற்றச்சாட்டுக்கு சில டிப்ஸ்

இ20 பெட்ரோல் (E20 Petrol) பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், சமீப காலமாக இதுகுறித்து சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. 20 சதவீதம் எத்தனால் (Ethanol) கலக்கப்பட்ட இ20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், சில வாகனங்களில் மைலேஜ் குறைவதாகவும் மக்களிடம் இருந்து புகார்கள் வர ஆரம்பித்துள்ளன. அதிலிலும் குறிப்பாக, பழைய பிஎஸ்4 (BS4) மற்றும் பிஎஸ்3 வாகனங்களில் இந்த பிரச்சனைகள் அதிகமாக இருப்பதாக இணையத்தில் பலர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தற்போது உற்பத்தி செய்யப்படும் அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்ட பிஎஸ்6 வாகனங்கள் இ20 பெட்ரோலை ஏற்கும் வகையில் ஓரளவிற்கு மாற்றப்பட்டு விட்டன. ஆனால் பழைய வாகனங்களால் இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை. அத்தகைய பழைய பிஎஸ்4, பிஎஸ்3 வாகனங்களை வைத்திருப்பவர்களா நீங்கள்? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

tips for using e20 petrol older bs4 and bs4 vehicles

காரில் மெட்டீரியல்களை சோதிக்கவும்: பெட்ரோல் டேங்க்கில் இருந்து என்ஜின் வரையில் உள்ள எரிபொருளை கொண்டு செல்லும் குழாய், சீல்கள் மற்றும் காஸ்கெட்கள் உள்ளிட்டவை இ20 பெட்ரோலை ஏற்கக்கூடியவை ஆக இல்லாமல் இருக்கலாம். ஆதலால், அவற்றை தகுந்து மெக்கானிக்குகளிடம் கொடுத்து ஆராய்ந்து, தேவைப்பட்டால் புதிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் ஆக மாற்றிக் கொள்ளலாம். ஃபுளோரோகார்பன்-சார்ந்த ரப்பர்களை புதியதாக பொருத்தலாம்.

எரிபொருள் வடிக்கட்டிகளை (Fuel Filters) மாற்றலாம்: எத்தனால் ஆனது பெட்ரோல் டேங்கில் ஏற்கனவே படிந்து கிடக்கும் மாசுக்களை கிளறிவிடும். அவை எல்லாம் சேர்ந்து எரிபொருள் வடிக்கட்டியை அடைக்கலாம். ஆதலால், ஒவ்வொரு 5,000- 7,000கிமீ தொலைவு பயணத்திற்கும் ஒருமுறை எரிபொருள் வடிக்கட்டியை மாற்றுவது நல்லது.

tips for using e20 petrol older bs4 and bs4 vehicles

முடிந்தவரையில் பெட்ரோல் டேங்க் முழுமையாகவே இருக்கட்டும்: பொதுவாகவே எத்தனால் ஆனது காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால்தான், வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் அதிகமாக துருப்பிடிப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் உருவாகும் இரும்பு துகள்கள் பெட்ரோல் உடன் கலந்து என்ஜினுக்கு சென்று பழுதுகளை ஏற்படுத்துவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க, நீண்ட நேரத்திற்கு வாகனத்தை நிறுத்தி வைக்கும்போது முடிந்தவரையில் எப்போதும் பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பி வைத்து துருப்பிடித்தலுக்கு இடம் கொடுக்காமல் தவிர்க்கலாம்.

எரிபொருள் சேர்ப்புகள்: எத்தனாலால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கக்கூடிய வேதியியல் மூலக்கூறுகளை தகுந்த மெக்கானிக்குகளின் ஆலோசனை கேட்டு பெட்ரோல் உடன் கலந்து பயன்படுத்தலாம். அதேபோல், அதிக எத்தனால் பயன்பாட்டால் என்ஜின் ஆயில் அதிகமாக தேவைப்படலாம். ஆதலால், என்ஜின் ஆயிலை மாற்றுவதை வழக்கத்தை காட்டிலும் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.

tips for using e20 petrol older bs4 and bs4 vehicles

எரிபொருள் பம்ப்பை அவ்வப்போது சோதிக்கவும்: எரிபொருளை பம்ப் செய்யும் எலக்ட்ரிக் பம்ப்கள் பழைய கார்களில் எத்தனாலினால் சரியாக இயங்காமல் போகலாம். கார் ஸ்டார்ட் ஆகுவதற்கு சிரமப்படுவது, புதியதாக இரைச்சல்கள் ஏற்படுவது மற்றும் முந்தைய அளவிற்கு இயக்க ஆற்றல் கிடைக்காமல் போவது உள்ளிட்ட அறிகுறிகள் மூலம் இதனை அறியலாம்.

எரிபொருள் ஸ்டெபிளைசர் (Fuel Stabilizer)-ஐ பயன்படுத்தலாம்: வாகனத்தை பெட்ரோல் உடன் நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்க போகிறீர்கள் எனில், எரிபொருள் உடன் ஸ்டெபிளைசரை பயன்படுத்தலாம். ஸ்டெபிளைசரை எரிபொருள் உடன் கலந்த பின் வாகனத்தின் என்ஜினை சில நிமிடங்களுக்கு இயக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், எரிபொருள் செல்லும் குழாயில் பசை போன்று ஸ்டெபிளைசர் ஒட்டிக் கொள்ளும் என்பதால் துருப்பிடித்தல் ஏற்படுவதை தடுக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, அவ்வப்போது இன்ஜெக்டரை மாற்றுவது, பயணத்தை துவங்குவதற்கு முன் வாகனத்தின் என்ஜினை 30- 60 வினாடிகளுக்கு ஓட விடுவது போன்ற வழிமுறைகளையும் பின்பற்றலாம். இந்த தொகுப்பில் நாம் பார்த்திருப்பதில் பெரும்பாலான டிப்ஸ் பழைய கார்களுக்கு தான் பொருந்தும் என்றாலும், இவற்றை பழைய பைக்குகள் மற்றும் 3-வீலர்கள் வைத்திருப்பவர்களும் பின்பற்றி பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 30, 2025, 23:21 [IST]
English summary
How to protect older bs3 and bs4 vehicles while using ethanol blended petrol
மேலும்... #car tips #auto tips #petrol engine
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X