காருக்கு எங்கிருந்து பிரச்சனை வரும்னே தெரியாது! ஹோலி வர போகுது... செலவில் சிக்காமல் தப்பிக்க தயாராக உள்ளீர்களா

ஹோலி (Holi), இந்தியாவில் மக்கள் பலரால் பெரிய அளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று. இந்த வருடம், மார்ச் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுப்படுவர் என்றாலும், ஹோலி என்றதுமே நம் அனைவருக்கும் முதலாவதாக நினைவிற்கு வருவது வண்ண பொடிகள் ஆகும். ஆதலால், இந்த பண்டிகையின்போது வாகனங்கள் பாதிக்கப்படுவதற்கும், பழுதாகுவதற்கும் வாய்ப்புள்ளது. அதனை தவிர்ப்பது எவ்வாறு என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பாதுகாப்பான இடத்தில் பார்க் செய்யவும்: வீட்டில் தனியாக பார்க்கிங் ஏரியா உள்ளது என்றால் பிரச்சனையே இல்லை. அதில் உங்களது கார், பைக்குகளை நிறுத்தி அந்த இடத்தை யாரும் நுழைய முடியாத அளவுக்கு பூட்டி விடுங்கள். பார்க்கிங் பகுதியை பூட்டும் வசதி இல்லை அல்லது தனியாக பார்க்கிங் பகுதி இல்லாதவர்கள் தங்களது வாகனங்களை கவர்களினால் முழுவதுமாக மறைத்துவிடுங்கள்.

protect your car from holi

ஹோலியின்போது வாகனத்தை பயன்படுத்த: ஹோலி பண்டிகையின்போது எங்கேயினும் வெளியே செல்வதற்கு நிச்சயமாக ஏதேனும் ஒரு வாகனம் தேவைப்படும். அதற்கு முடிந்தவரையில் 2-வீலரை பயன்படுத்த பாருங்கள் (முகத்தில் வண்ண பொடிகளை ஏற்க தயாராக இருந்தால்). 2-வீலர்களில் பைக்கை காட்டிலும் ஸ்கூட்டரை ஹோலி சமயத்தின்போது பயன்படுத்தலாம். காரை பயன்படுத்த விரும்புபவர்கள், வண்ண பொடிகள் காரின் பெயிண்ட் மீது ஒட்டிக் கொள்ளாமல் இருக்க மெழுகு படலத்தை காரின் பெயிண்ட் மீது கொடுக்கலாம்.

டெஃப்லன் கோட்டிங் (Teflon Coating)-ஐ கொடுக்கலாம்: சாதாரணமான மெழுகு படலத்தை காட்டிலும் டெஃப்லன் கோட்டிங் ஆனது இன்னும் சிறந்ததாக இருக்கும். குறிப்பாக, உங்களது கார் சமீபத்தில்தான் வாங்கப்பட்ட புத்தம் புதிய கார் என்றால், டெஃப்லன் கோட்டிங் தான் ஏற்றதாக இருக்கும். வழக்கமான மெழுகு படலத்தை காட்டிலும் டெஃப்லன் படலத்தை கொடுப்பது சற்று செலவுமிக்கதாக இருப்பினும், அது நீண்ட காலத்திற்கு வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எப்போதும் காரின் ஜன்னல்கள் மூடி இருக்கட்டும்: கார் பார்க் செய்யப்பட்டு இருக்கும்போது மட்டுமின்றி, காரை ஓட்டும்போதும் ஜன்னல் கண்ணாடிகளை மூடியே வைத்திருங்கள். இதனால், வெளிகாற்று கிடைக்காது என்பதால், உங்களது காரின் ஏசி-இல் பிரச்சனை இருந்தால் அதனை உடனே சரிச்செய்துக் கொள்வது நல்லது.

protect your car from holi

கார் இருக்கைகளை பாதுக்காக்கவும்: ஹோலி கொண்டாட்டத்திற்கு இடையே காரை பயன்படுத்தும்போது வண்ண பொடிகளை பூசப்பட்ட கை, கால்கள் மற்றும் ஆடைகள் உடன் அப்படியே காரினுள் அமர வேண்டியதாக இருக்கும். ஆதலால், ஹோலி பண்டிக்கைக்கு முந்தைய நாளில் காரின் இருக்கைகள், டேஸ்போர்டு மற்றும் பின்பக்க பூட் ஸ்பேஸ் பகுதியை ஏதேனும் கவரினால் மூடிவிடுவது நல்லது. குறைந்தப்பட்சம், காரின் இருக்கைகளை ஏதேனும் துணிகளால் மூட முயற்சிக்கவும்.

டேஸ்போர்டை பாதுகாக்கவும்: டேஸ்போர்டை முழுவதுமாக மூட முடியாது என்பதால், அதன் பிளாஸ்டிக் பேனல்கள் மீது மெழுகு படலம் அல்லது எண்ணெய் படலத்தை கொடுக்கலாம். அப்போதுதான், வண்ண பொடிகளை பண்டிகை முடிந்த எளிதாக நீக்க முடியும். அதேபோல், லெதர் இருக்கைகள் உங்களது காரில் இருந்தால் அவற்றை துணியால் மூடுவதற்கு பதிலாக, லெதர் பாதுகாப்பானை பயன்படுத்தலாம்.

பண்டிகை முடிந்த பின் வாஷிங்: ஹோலி பண்டிகை முடிந்த பின் நிச்சயமாக எந்தவொரு வாகனத்தையும் கழுவி சுத்தம் செய்வது நல்லது. வழக்கமான வீட்டு உபயோக பவுடர்களுக்கு பதிலாக, கார் க்ளீனிங் பவுடர்கள் அல்லது திரவங்களை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. கார் வாஷிங்கில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனத்திடம் கொடுத்து காரை சுத்தம் செய்வது இன்னும் சிறந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட இந்த வழிமுறைகளை எல்லாம் பின்பற்ற முன்கூட்டியே ஆரம்பித்துவிடுவது நல்லது. பண்டிகை நாளில் முடிந்தவரையில் சொந்த வாகனங்களை வீட்டின் ஓரமாக பூட்டி வைத்துவிட்டு டாக்ஸி, ஆட்டோ போன்ற பொது வாகனங்களை பயன்படுத்துவது சிறந்தது. ஆனால், உங்களது வசிப்பிடத்திற்கு அருகே ஹோலி பண்டிகை வண்ண பொடிகளால் விமர்சையாக கொண்டாடப்படும் என்றால்தான் இந்த முன்னெச்சரிக்கைகள் எல்லாம் தேவைப்படும்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 9, 2025, 7:00 [IST]
English summary
How to protect your car and bike from holi colour stains
மேலும்... #car tips #car maintenance #car cleaning
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+