கார் டயர் பஞ்சருக்கு யாரையும் எதிர்பார்க்க வேண்டாம்... சிம்பிளான ட்ரிக்ஸ்!! இதை செய்து பாருங்க

அவ்வப்போது கார் ஓட்டுபவர்களுக்கு கார் டயர் பஞ்சர் ஆகுவது எந்த அளவிற்கு மோசமான விஷயம் என்பது தெரிந்திருக்கும். அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்றால், அவர்கள் போடும் பில் நம் எல்லாருக்குமே தெரியும். சரி பணம் செலவாகினாலும் பரவாயில்லை என நினைத்தால், சில சமயங்களில் உங்களால் மெக்கானிக் கடையை அணுக முடியாமல் போகும். அதாவது, மெக்கானிக் கடை எதுவும் அருகில் இல்லாமல் இருக்கலாம். அல்லது மெக்கானிக் கடை வரையில் கூட காரை கொண்டு செல்ல முடியாமல் போகலாம்.

அடர்ந்த காடு அல்லது நெடுஞ்சாலைகளில் சென்றுக் கொண்டிருக்கும்போது கார் டயர் பஞ்சராகினால் உங்களால் உடனடியாக உதவி பெற முடியாமல் போகலாம். இதனாலேயே அவசரத்துக்கு காரில் எப்போதும் ஸ்பேர் சக்கரம் இருப்பது நல்லது. ஆனால் உங்களது நேரம் நன்றாக இல்லையென்றால், அந்த ஸ்பேர் சக்கரம் கூட பஞ்சரான நிலையில் இருக்க வாய்ப்புண்டு.

how to repair tyre puncture

ஆதலால், எவரது உதவியுமின்றி உங்களது பிரச்சனையை நீங்களே சரி செய்யும் விதமாக கார் டயர் பழுதை சரி செய்ய தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். இது நீங்கள் நினைக்கும் அளவிற்கு ஒன்றும் கடினமான விஷயம் கிடையாது. கார் டயர் பஞ்சரை நீங்களாக சரி செய்ய வேண்டுமெனில், முதலில் உங்களிடம் ரிப்பேர் கிட் மற்றும் டயரில் காற்று நிரப்பும் கருவி இருக்க வேண்டியது அவசியமாகும். இவற்றை நீங்கள் டயர் கடைகளில் அல்லது ஆன்லைனில் வாங்கலாம்.

ரிப்பேர் கிட்டில் டயரில் துளையிடும் கருவி, டயரில் ஏற்பட்ட துளையை அடைக்க உதவும் ஸ்ட்ரிப், இந்த ஸ்ட்ரிப்பை வெட்ட உதவும் மற்றும் அதனை டயரினுள் நுழைக்கும் கருவிகள் உள்ளிட்டவை இருக்கும். முதலில், டயரில் பஞ்சர் ஏற்பட்டுள்ள இடத்தை கண்டறியவும். இதற்கு சோப்பு நீரை பயன்படுத்தலாம். ஒரு சில பஞ்சர்களில், பஞ்சர் ஏற்படுத்திய பொருள் டயரிலேயே சிக்கிக் கொண்டிருக்கும். அத்தகைய பொருட்களை மிகவும் கவனமாக டயரில் இருந்து வெளியே எடுக்கவும்.

how to repair tyre puncture

பஞ்சருக்கு காரணமான அந்த பொருள் உடைப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், அத்தகைய பொருட்களை வெளியே எடுக்க கையை பயன்படுத்த வேண்டாம். அதற்கென இருக்கும் கருவியை பயன்படுத்தவும். பஞ்சரான இடத்தை கண்டறிந்த பின், அங்கு ஏற்பட்டிருக்கும் துளை மிகவும் சிறியதாக இருப்பின், ஸ்ட்ரிப்பை உள்ளே நுழைக்கும் அளவிற்கு துளையை சற்று பெரியதாக்கிக் கொள்ளவும்.

பின்னர், பஞ்சர் ஸ்ட்ரிப்பை 2ஆக மடித்து டயரினுள் நுழைக்கவும். இதற்கும் வெறும் கையை பயன்படுத்தாமல், அதற்கான ஸ்பெஷல் கருவியை பயன்படுத்த வேண்டும். ஸ்ட்ரிப்பின் 4இல் 3 பகுதி வெளியே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர், வெளியே இருக்கும் ஸ்ட்ரிப்பை கவனமாக வெட்டி நீக்கவும். இதன்பின்னரே, டயரில் தேவையான அளவிற்கு காற்று நிரப்ப வேண்டும்.

how to repair tyre puncture

இத்துடன் வேலை முடியவில்லை. சரி செய்யப்பட்ட இடத்தில் சோப்பு நீரை தெளித்து நீர்குமிழ்கள் ஏற்படுகிறதா என்பதை சரிப் பார்க்கவும். ஒருவேளை நீர்குமிழ்கள் ஏற்படுகின்றன எனில், நீங்கள் செய்த வேலையில் எங்கேயோ தவறு உள்ளது என அர்த்தம். அத்தகைய நேரங்களில் நீங்கள் எல்லாவற்றையும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு முன்பாக, ஏற்கனவே பொருத்திய ஸ்ட்ரிப்பை வெளியே எடுக்க வேண்டிவரும். அல்லது, அருகில் இருக்கும் மெக்கானிக் கடைக்கு காரை கொண்டு செல்லலாம்.

நீர்குமிழ்கள் ஏற்பட்டாலும், டயரில் பொருத்தப்பட்ட ஸ்ட்ரிப் வெளியேறும் காற்றின் அளவை சற்று குறைத்திருக்கும் என்பதை மறவாதீர்கள். பயப்பட வேண்டாம், மேற்கண்ட முறைகளில் பஞ்சரை சரி செய்தால் காற்று வெளியேறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே ஆகும். ஆனால் எப்படியிருந்தாலும், இவ்வாறு ஸ்ட்ரிப்பை பயன்படுத்தி பஞ்சரை சரி செய்வது தற்காலிகமான ஒன்றே. அதாவது, அதன்பின் கட்டாயமாக நீங்கள் மெக்கானிக் கடைக்கு காரை கொண்டு செல்ல வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாக்கை உபயோகப்படுத்தி சக்கரத்தை மாற்றுவது நாம் நினைப்பதை காட்டிலும் கடினமாகும். அதனுடன் ஒப்பிடுகையில், நாம் இந்த தொகுப்பில் பார்த்துள்ள செயல்முறை மிக எளியதாகும். டயரில் கை வைப்பதற்கு முன் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அதாவது டயரில் பஞ்சர் ஏற்பட்டால் மட்டுமே அதனை சரி செய்ய முயலுங்கள். டயரின் பக்கவாட்டு சுவரில் பிரச்சனை என்றால் முழுவதுமாக டயரை மாற்றியே ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 28, 2024, 22:55 [IST]
English summary
How to repair car tyre puncture do it yourself check all details here
மேலும்... #car tips #car tyre
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X