காருக்கு பூஜை போட்டால் மட்டும் பத்தாது! மெக்கானிக் ஷாப் போகாமலேயே இதையெல்லாம் கண்டுப்பிடிச்சிடலாம்!!

காரில் பிரச்சனை ஏற்படுவது எந்தவொரு கோடீஸ்வரருக்கும் கூட கவலையளிக்க கூடிய செய்தியே. அதற்கு பணத்தை செலவழிக்க போகிறோம் என்பதை விட, காரின் பாகங்களை மாற்ற வேண்டியிருக்குமே அவற்றிற்கான பார்ட்ஸ் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற கேள்விகள் மேலும் தலைவலியை ஏற்படுத்தும். காரில் ஏற்படும் ஒரு சில பிரச்சனைகளை நீங்களாகவே கண்டுபிடித்துவிடலாம். மேலும், அவற்றை உங்கள் வீட்டில் வைத்தே பழுதுப்பார்த்து சரிசெய்ய முடியும். எந்தெந்த மாதிரியான பிரச்சனைகள் அவை? அவற்றை எவ்வாறு கண்டறிவது? என்பதை இனி பார்க்கலாம்.

மின் இணைப்புகளை சரிப்பார்க்கவும்: காரில் ஏதேனும் விளக்குகள் எரியவில்லை என்றால் ஃப்யுஸ் போயிருக்கலாம். ஃப்யுஸின் பணி என்னவென்றால், அதிகப்படிய மின்னோட்டம் மின்சாதன பொருட்களுக்கு செல்வதற்கு முன்பு தடுத்து நிறுத்துவதாகும். பல்புகள் வெடிக்காதவாறு பாதுகாப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை ஓவர்லோடு கரண்ட் கார் பேட்டரியில் இருந்து வெளிவந்து இருந்தால், ஃப்யுஸ் கருகிவிடும்.

repair common car electrical issues

ஆகவே அதனை நீங்கள் மாற்ற வேண்டியிருக்கும். காரினுள் வழங்கப்பட்டிருக்கும் ஃப்யுஸ் பாக்ஸை ஓனர்-மேனுவல் புத்தகத்தின் மூலமாக கண்டுப்பிடிக்கலாம். இதேபோன்று, காரில் இருக்கும் ரீலே பழுதுகள் கூட காரின் மின்சாதனங்களை பாதிக்கலாம். ரீலே-களின் வேலை என்னவென்றால், மின்சாதனத்திற்கு ஏற்ப மின்சாரத்தை மாற்றிக் கொடுப்பதாகும்.

வயரிங் & கனெக்‌ஷன்ஸை சரிப்பார்க்கவும்: கார்களில் வயர் அனைத்தும் அடக்கமாக, பாதுகாப்பாக தான் கொடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும், அதனை தாண்டி வயர்களில் பிரச்சனை உள்ளதா என்பதை ஆராய வேண்டும். வயர்கள் சேதமடைந்து இருந்தால் மின்விநியோகம் தடைப்படுவதற்கு வாய்ப்புள்ளது. வயர் சேதமாகி இருந்தால், அந்த பகுதியை சுற்றிலும் துருப்பிடித்துள்ளதா என்பதை பாருங்கள்.

விளக்குகளை சோதனை செய்யவும்: மேற்கூறப்பட்ட காரணங்களினால் காரை சுற்றிலும் வழங்கப்படும் விளக்குகளில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், ஒவ்வொரு விளக்கையும் ஒவ்வொரு பல்பாக ஒளிர விட்டு சோதனை செய்து பார்க்கவும். வழக்கத்தை காட்டிலும் ஒளி மிக அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ வேறொரு பல்ப்பை பொருத்தி பார்க்கவும்.

ஹார்ன்களை சரி பார்க்கவும்: பல்ப்களை போல, மேற்கூறப்பட்ட பிரச்சனைகளினால் காரின் ஹார்ன் சத்தமும் கேட்காமல் போகலாம் அல்லது விட்டுவிட்டு கேட்கலாம். இத்தகைய நேரத்தில் ஹார்ன் வயர்களை கார் மேனுவல் புத்தகத்தின் உதவியுடன் கண்டுப்பிடித்து, அவற்றை ஜம்பர் வயர்கள் மூலமாக நேரடியாக பேட்டரி உடன் இணைத்து சோதித்து பார்க்கவும். அப்போது ஒளிர்ந்தால், பிரச்சனை மின்சுற்றில்தான் எங்கேயோ உள்ளது என அர்த்தம்.

மல்டிமீட்டரை பயன்படுத்தவும்: காரின் எலக்ட்ரிக்கல் பிரச்சனைகளை கண்டறிவதற்கு மல்டிமீட்டரை பயன்படுத்தவது சிறந்த மற்றும் எளிமையான முடிவாகும். தேவைக்கேற்ப வோல்டோஜை செட் செய்து மல்டிமீட்டரை பயன்படுத்தவும். மானிடரிங் பதிவுகள் மல்டிமீட்டரின் டிஸ்பிளேவில் காட்டப்படும். மல்டிமீட்டரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விளக்க குறிப்புகள் இணையத்தில் நிறைய உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரில் ஏற்படும் சிறு, சிறு பிரச்சனைகளை நாமாக வீட்டிலேயே அடையாளம் கண்டு, சரிச்செய்வது பணத்தை மிச்சப்படுத்துவதுடன், காரை மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டு செல்லும் வேலையையும் தவிர்க்கும். ஆனால், காரின் சிறு, சிறு பிரச்சனைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதுதான் நிறைய பேருக்கு தெரியவில்லை. அதற்கு முதலில் உங்களது காரை பற்றிய விரிவான புரிதல் உங்களுக்கு இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 27, 2024, 8:00 [IST]
English summary
How to repair common car electrical issues by your own check all details here
மேலும்... #car tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+