புக் செய்த ரயில் டிக்கெட்டில் பயண தேதியை மட்டும் மாற்றுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!

ரயில்களில் புக்கிங் செய்த டிக்கெட்டில் புக் செய்த தேதியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் தேதியை மட்டும் மாற்றும் வாய்ப்பை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர். இதற்காகவே ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் வாய்ப்பை ரயில்வே நிர்வாகம் ஐஆர்சிடிசி மூலம் வழங்குகிறது. செல்போன் ஆப் மற்றும் வெப்சைட் மூலம் நமக்கு வேண்டிய ரயிலில் வேண்டிய தேதியில் வேண்டிய டிக்கெட்களை புக்கிங் செய்து கொள்ளலாம். ஐஆர்சிடிசி வெப்சைட் யாரும் தவறாகப் பயன்படுத்தாத அளவிற்கு அதிகமான பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது.

இன்று ஏராளமானோர் குறைவான விலை என்பதால் நீண்ட தூரப்பயணத்தை ரயில்களில் புக்கிங் செய்து பயணம் செய்கின்றனர். இப்படியாக ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே பயணம் செய்வதில் பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை குறிப்பிட்ட தேதியில் பயணம் செய்ய முடியாததே. பலருக்குக் குறிப்பிட்ட தேதிக்கு முன்போ, பின்போ பயணத்தை மாற்ற வேண்டியது வரும். இப்படியான நேரங்களில் ஏற்கனவே புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு புதிதாக டிக்கெட் புக் செய்ய வேண்டும்.

இப்படியாகச் செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே புக்கிங் செய்த டிக்கெட்டிற்கு கேன்சலேஷன் சார்ஜ் கட்ட வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் வெறும் தேதியை மட்டும் மாற்ற வழி இருக்கிறது. பொதுவாக ரயில் டிக்கெட்களை ஆன்லைன் மூலமும் நேரடியாக ரயில்வே கவுண்டரிலும் புக்கிங் செய்யலாம். ஆனால் இப்படியாகத் தேதியை மாற்ற ரயில்வே கவுண்டரில் மட்டுமே வழி இருக்கிறது. ஆன்லைனில் இதைச் செய்ய முடியாது.

நீங்கள் புக்கிங் செய்த டிக்கெட் உடன் ரயில்வே கவுன்டருக்கு சென்று புக்கிங் செய்த தேதியிலிருந்து முன்னரே பின்னரோ மாற்றம் செய்து கொள்ளலாம். இது ரயில் கிளம்புவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வரை செய்து கொள்ள அனுமதியிருக்கிறது. அதன் பிறகு மாற்ற முடியாது. இந்த வாய்ப்பை ஒரு முறை மட்டுமே செய்து கொள்ள முடியும். அதாவது முறை தேதி மாற்றப்பட்ட டிக்கெட்டை மீண்டும் தேதியை மாற்ற முடியாது.

இந்த முறையில் தேதியை மட்டுமல்ல பயணிக்கும் வகுப்பையும் மாற்றிக்கொள்ளலாம். அதாவது ஒருவர் சிலீப்பர் கிளாஸில் புக் செய்திருந்தால் பயணிக்கும் தேதியை மாற்றும் போது அவர் ஏசி வகுப்பிற்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதியும் இருக்கிறது. வெறும் தேதி மட்டும் மாற்ற வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் எதுவும் செலுத்தவேண்டிய தேவையில்லை. ஆனால் வகுப்பை மாற்ற வேண்டும் என்றால் அதற்கான பாக்கி கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும்.

ஆனால் இப்படியாக மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் மாற்றும் தேதியில் கன்ஃபார்ம் டிக்கெட் இருந்தால் மட்டுமே கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்கும் இல்லை என்றால் அப்பொழுது காத்திருப்பு பட்டியல், ஆர்ஏசி என நீங்கள் மாற்றும் நேரத்தில் என்ன நிலைமை இருக்கிறதோ அது தான் கிடைக்கும் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பலருக்கு இப்படிப்பட்ட வசதி இருப்பதே தெரியாது அடுத்த முறை தேதியை மாற்ற இனி டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டாம். இப்படி தேதியை மாற்றிக்கொள்ளுங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Thursday, December 29, 2022, 19:16 [IST]
English summary
How to reschedule your train journey date
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+