எதிர்ல வரும் போது விவஸ்தையே இல்லாமல் ஹைபீம் போட்டு வராங்களா? இதை ஃபாலோ பண்ணுங்க, ஒரு பிரச்சனையும் வராது
ரோட்டில் செல்லும் போது எதிரில் வரும் வாகனங்கள் ஹைபீம் போட்டு உங்கள் கண்ணைக் கூச்சப்பட வைக்கிறார்களா அதிலிருந்து எப்படித் தப்பிப்பது எனக் காணலாம் வாருங்கள். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
எங்கள் தளத்தில் தொடர்ந்து செய்திகளைப் படிக்கும் உங்களுக்கு கார்/பைக் ஓட்டுவது எவ்வளவு பிடிக்கும் என நீங்கள் சொல்லி எங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. வாகனம் ஓட்டுவது என்பது மனதிற்கு ரிலாக்ஸை கொடுக்கும். கவனத்தைச் சிதறடிக்காமல் பாதுகாக்கும். கார் ஒட்டுவது ஒரு சந்தோஷத்தையும் ஒரு புத்துணர்ச்சியையும் கொடுக்கும். இப்படியாக கார் ஓட்டு எல்லாம் நம்மில் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் இந்த கார் ஓட்டுவதிலேயே பிடிக்காத விஷயம் இரவில் கார் ஓட்டுவது தான்.

பகல் நேரம் நல்ல வெளிச்சம் இருக்கும் நாம் பாதுகாப்பாக கார்களை ஓட்டலாம். ஆனால் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டுவது பலருக்குக் கடுப்பான ஒரு விஷயமாகும். இதற்கு முக்கியமான காரணம் எதிரில் வருபவர்கள் பயன்படுத்தும் ஹைபீம் லைட்தான். இரவு நேரங்களில் சாலையில் செல்லும் போது எதிரில் வரும் வாகனம் ஹைபீமை குறைக்காமல் வந்தால் நீங்கள் அதற்காக வாகனத்தின் வேகத்தைக் குறைத்து மெதுவாகச் செல்ல வேண்டும்.
உங்கள் கண் கூசுவதால் எதிரில் வருபவர்கள் தெரியமாட்டார்கள். இப்படியான நேரங்களில் மிகவும் கடுப்பாக இருக்கும். வாகனம் ஓட்டும் ஒரு அனுபவமே கெட்டுப் போய்விடும். ஆனால்
இப்படியாக ரோட்டில் செல்லும் போது ஒருவர் ஹைபீம் அடித்து வந்தாலும் அதனால் ஏற்படும் கண் கூச்சத்திலிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்பதையே இந்த பதிவில் விரிவாகக் காணப்போகிறோம்.
விண்ட் ஷீல்டு
எதிரில் வரும் காரின் ஹைட்லைட் பிரதிபலிப்பை நமக்குக் கடத்துவது விண்ட்ஷீல்டு கண்ணாடி தான். இந்த கண்ணாடி சுத்தமாக இல்லை என்றாலும், எதிரில் வரும் வாகனத்தின் ஹெட்லைட் நமது கண்ணைக் கூச வைத்து விடும். கண்ணாடியில் தூசு மற்றும் அழுக்கு படிந்திருந்தால் அதிகமான வெளிச்சம் உள்ள வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் வாகனத்தின் விண்ட் ஷீல்டை நீங்கள் பயணிக்கும் போது துடைத்துவிட்டுப் பயணிப்பது சிறந்தது.ஒவ்வொரு முறை நீங்கள் பயணத்தைத் துவங்கும் முன்பு விண்ட் ஷீல்டை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். நீண்ட தூரம் பயணிக்கிறீர்கள் என்றால் அவ்வப்போது காரை நிறுத்தி ரெஸ்ட் எடுக்கும் நேரத்தில் சுத்தப்படுத்திக்கொள்வது சிறந்தது.
ஸ்கிராட்ச்களை தவிருங்கள்!
காரின் கண்ணாடியைச் சுத்தப்படுத்தும் போது அதற்கு உரியத் துணியைப் பயன்படுத்திச் சுத்தப்படுத்துவது தான் சிறந்தது. மாறாக வேறு துணிகளைப் பயன்படுத்தினால் கண்ணாடியில் ஸ்கிராட்ச்கள் விழக்கூடும். கண்ணாடியில் ஸ்கிராட்ச்கள் இருந்தால் அதன் மேல் நேரடியாக வெளிச்சம் பட்டால் அது பல மடங்களாகப் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் காரின் கண்ணாடியில் ஸ்கிராட்ச் இல்லாமல் வைத்துக்கொள்வது சிறந்தது. ஒருவேலை ஸ்கிராட்ச் விழந்துவிட்டாலும் உடனடியாக அதன் அளவை முடிந்த அளவிற்குக் குறைப்பது நல்லது இதனால் பாதிப்பு குறையும். ஸ்கிராட்ச் இல்லாத கண்ணாடியே சிறப்பாகப் பார்வையை வழங்கும்.
கிராக் வேண்டாம்
கார் கண்ணாடி சில நேரங்களில் உடைந்த நிலையில் இருக்கலாம். அப்படி இருந்தால் அதில் நேரடியாக ஒளி பட்டால் அந்த ஓளி கண்ணிற்குக் கூச்சம் ஏற்படுத்தும் அளவிற்குப் பிரதிபலிக்கும். இதனால் இப்படியாக கிராக் விழுந்த விண்ட் ஷீல்டுகளை பயன்படுத்தாதீர்கள். இது என்றைக்குமே உங்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். இதனால் கவனமாக இருக்கவும். இப்படியாக கிராக் விழுந்த கண்ணாடியால் பகல் நேரத்தில் கூட உங்களுக்குப் பிரச்சனை ஏற்படலாம்.
எதிரில் வருபவர் ஹைபீமை குறைக்காமல் பயணிப்பது எப்படி தவறோ அதை தவற்றை நீங்கள் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதையும் மீறி உங்கள் கண்ணிற்குக் கூச்சமாக இருக்கிறது என்றால் மார்கெட்டில் ஆண்டி கிளார் கண்ணாடிகள் இருக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். இதனால் எதிரில் வரும் வாகனங்கள் ஹைபீமை பயன்படுத்தினாலும் உங்கள் கண்களுக்கு அது கூச்சத்தை ஏற்படுத்தாது. இந்த தகவல் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








