இனிமே போர் அடிக்காது... விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ்!

விமான நிலையத்தில் காத்திருப்பு நேரத்தை எப்படி பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும் எனப் பலருக்குத் தெரியவில்லை. இதற்கு டிப்ஸ் வழங்குவது குறித்து இந்த பதிவை உங்களுக்கு வழங்கியுள்ளோம். இது குறித்த முழு தகவல்களைக் கீழே காணுங்கள்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

விமான பயணத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் என்றால் காத்திருப்பு நேரம் தான். அடிக்கடி விமான பயணம் செய்பவர்களுக்கு இது பற்றித் தெரியும். ஒரு விமானம் தாமதம் ஆனால் அல்லது கேன்சல் ஆனால் நீண்ட நேரம் பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். விமானம் தாமதமாகக் கிளப்புவது எல்லாம் சாதாரண விஷயமாக இன்று இருக்கிறது.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

இது மட்டுமல்ல கனெக்டிங் விமானங்களுக்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைகளும் அதிகம் ஏற்படும். நாம் கிளம்பும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு நேரடியாக விமானங்கள் இல்லை என்றால் கனெக்டிங் விமானத்திற்காகக் காத்திருக்க வேண்டும். இது தான் மிகப்பெரிய கொடுமையான விஷயம் இப்படியான காத்திருப்பு நேரத்தை எப்படி பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும் எனப் பலருக்கும் தெரியாது. இந்த பதிவில் நாம் அதற்கான டிப்ஸ்களை தான் வழங்கப்போகிறோம்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

போன் பேசுதல்

நீங்கள் விமான பயணத்தின் போது செல்போனில் பேச முடியாது. ஆனால் இப்படியாக நீங்கள் காத்திருக்கும் நேரத்திலேயே நீங்கள் உங்கள் வேலை அல்லது உறவினர்களுடன் பேச வேண்டியதை எல்லாம் பேசி விடுங்கள் விமானங்களில் அதற்கான சாத்தியம் சுத்தமாக இருக்காது என்பதால் இதைத் தான் நீங்கள் முதல் வேலையாகச் செய்ய வேண்டும்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

ஷாப்பிங்

விமான நிலையத்தில் காத்திருப்பு நேரம் முற்றிலும் ஓய்வு நேரம். இந்த நேரத்தில் நீங்கள் விமான நிலையங்களில் உள்ள கடைகளுக்குச் சென்று உங்களுக்குத் தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்து கொள்ளலாம். நீங்கள் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் நபர், உங்களுக்கு ஷாப்பிங் செய்யவே நேரமில்லை என்றால் நீங்கள் விமான நிலைய காத்திருப்பு நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கவே விமான நிலைய காத்திருப்பு பகுதிகளில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

உணவு

விமானங்களில் உணவுகள் வழங்கப்பட்டாலும் அதன் சுவை நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது. அதனால் உங்களுக்குச் சுவையான, உங்களுக்குப் பிடித்த உணவுகளைப் பயண நேரத்தில் சாப்பிட வேண்டும் என நீங்கள் விரும்பினால் விமான நிலையத்தில் நீங்கள் காத்திருக்கும் காலத்தில் நீங்கள் உங்களுக்கு விரும்பிய உணவைச் சாப்பிட்டுக்கொள்ளலாம். நீங்கள் அமைதியாகப் பொறுமையாக அமர்ந்த சாப்பிட இந்த நேரம் உதவியாக இருக்கும்

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

புதிய நண்பர்கள்

பொதுவாக விமான நிலையத்தில் காத்திருப்பு நேரம் என வந்துவிட்டால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உங்களைப் போலவே பல மனிதர்களும் விமானங்களுக்காகக் காத்திருப்பார்கள். அவர்களுக்கும் உங்களைப் போலவே காத்திருப்பு காலத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும். இதனால் நீங்கள் அப்படியா நபர்களுடன் சென்று பேசி உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவர்களது அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டு பேசினால் காத்திருப்பு நேரம் புதிய நண்பர்களைச் சம்பாதிக்கும் நேரமாக மாறி பயனுள்ளதாகக் கழியும்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

சமூகவலைத்தளம்

பலருக்குச் சமூகவலைத்தளங்கள் என்றால் அது நேரத்தை வீணடிக்கும் விஷயம் என்ற கருத்து இருக்கும். ஆனால் நீங்கள் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரம் வீணாகக் கழியும் நேரம் தான். இந்த நேரத்தைக் கழிக்கச் சமூகவலைத்தளங்களைப் பார்ப்பது மூலம் விரைவாக நேரத்தைக் கடத்த முடியும். இன்று ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகச் செயல்படுகின்றன. இதனால் சமூகவலைத்தளங்களில் நேரத்தைக் கடத்துவது சுலபம் தான்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

திரைப்படங்கள்

பொதுவாக விமான நிலையங்களில் இலவசமாக இண்டர்நெட் சேவை வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி நீங்கள் உங்களிடம் வைத்திருக்கும் லேப்டாப் அல்லது செல்போனில் திரைப்படங்களைப் பார்க்கலாம். இதற்காக ஆன்லைனில் எப்பொழுது வேண்டுமானாலும் ஸ்டிரீம் செய்யும் வகையில் பல ஓடிடி தளங்கள் வந்துவிட்டன. இப்படியாகத் திரைப்படங்கள் பார்த்தால் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் நேரம் போய் விடும். காத்திருப்பு காலத்தை நல்ல பொழுது போக்கும் காலமாக மாற்ற முடியும்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

கிளப் லாஞ்ச் மெம்பர் ஷிப்

பொதுவாக விமானம் தாமதமாகும் போது விமான நிலைய இருக்கைகளில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது என்பது அசௌகரியமான ஒன்று தான். நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவராக இருந்தால் நீங்கள் கிளப் லாஞ்ச் மெம்பர் ஷிப்பை விமான நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளலாம் அங்கு உங்களுக்கு சௌகரியமான இருக்கைகள், உணவுகள் எல்லாம் வழங்கப்படும். இந்த இடத்திலிருந்தால் விமான தாமதம் பற்றி கவலையே பட வேண்டாம்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

டிக்கெட் அப்கிரேடு

பொதுவாக விமானங்கள் அதிக நேரம் தாமதம் ஆனால் அல்லது வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் பயணிகளுக்கு டிக்கெட்களை அப்கிரேடு செய்யும் வசதியை வழங்குவார்கள். நீங்கள் விமான கால தாமதத்திற்கான காத்திருப்பு நேரத்திலிருந்தால் நீங்கள் நேரடியா விமான நிறுவன ஊழியர்களிடம் சென்று அடுத்தாக நீங்கள் செல்ல வேண்டிய விமானத்தில் நீங்கள் எகானமி கிளாஸ் டிக்கெட் எடுத்திருந்தால் அதை பிஸ்னஸ் மற்றும் முதல் வகுப்பு டிக்கெட்டாக அப்கிரேடு செய்வது குறித்துப் பேசலாம். அதற்கான ஆப்ஷன் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

தூக்கம்

நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களுக்குத் தூக்கம் என்பது மிகவும் அரிதான விஷயமாகிவிடுகிறது. இதனால் விமான நிலைய காத்திருப்பு நேரத்தில் தூங்க விரும்பினால் அதுவும் நல்ல தேர்வு தான். ஆனால் விமான நிலைய காத்திருப்பு இருக்கையிலேயே அமர்ந்து தூங்குவது என்பது மோசமான ஒன்று, ஆனால் சில சர்வதேச விமான நிலையங்களில் நீங்கள் தூங்குவதற்காகத் தனியாக இடங்கள் வழங்கப்படுகின்றன. சில விமான நிலையங்கள் இதைப் பயணிகளுக்கு இலவசமாகவும், சில விமான நிலையங்கள் கட்டண அடிப்படையிலும் வழங்குகின்றன. நீங்கள் அந்த சேவையைத் தேவை என்றால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

மதுபானம்

சிலர் மதுபானம் குடித்தால் சற்று ரிலாக்ஸாக உணருவார்கள் இதனாலேயே பெரும்பாலான விமான நிலைய காத்திருப்பு பகுதியில் கண்டிப்பாக ஒரு பார் ஒன்று இருக்கும் பயணிகள் விமானங்களுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் சிறிது மது எடுத்துக்கொள்ள விரும்பினால் நீங்கள் தாராளமாக அதைச் செய்யலாம். ஆனால் லிமிட்டாக உங்கள் மானம் போகாத அளவிற்கு நடந்து கொள்ளுங்கள்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

நோட்டமிடுதல்

பெரும்பாலான மக்கள் இதையே செய்கிறார்கள். விமான நிலையம் என்பது உலகின் பல தரப்பட்ட மக்கள் வந்து செல்லும் இடம் இந்த இடத்தில் உங்களுக்குக் காத்திருப்பிற்காக ஒரு ஓய்வு நேரம் கிடைக்கிறது என்றால் நீங்கள் அமர்ந்திருந்து ஒவ்வொரு மக்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள். என்னென்ன விஷயங்களைச் செய்கிறார்கள் அவர்கள் பழக்க வழக்கம் என்ன என்பதை நேரடியாகப் பார்க்க முடியும். பல பயண விரும்பிகள் விமானத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தில் இதைத் தான் செய்கிறார்கள்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

டைரி எழுதுதல்

பலருக்கு டைரி எழுதும் அல்லது பிளாக் எழுதும் பழக்கம் இருக்கும். விமானத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தை அதற்காகப் பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் வாழ்வில் நடந்த விஷயங்கள் அல்லது உங்களுக்குப் பிடித்த விஷயங்களை டைரி அல்லது பிளாக்களில் எழுத இது சிறந்த இடமாகவும் நேரமாகும் இருக்கும். அதை அதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

பெண்டிங் வேலைகளை முடித்தால்

நாம முன்பே சொன்னதுபோல விமான நிலையத்தில் காத்திருக்கும் போது இலவசமாக இன்டர்நெட் வசதி கிடைக்கும் அதைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் அலுவலகத்தில் நீண்ட நாட்களாகப் பாக்கி வைத்திருக்கும் வேலைகளை முடிக்கலாம். உங்களுக்கு வந்திருக்கும் இ-மெயில்களுக்கு ரிப்பிளே செய்யலாம். நீண்ட நாட்களாக நீங்கள் காத்திருப்பில் வைத்திருக்கும் வேலைகளைச் செய்யச் சிறந்த நேரமாக இது இருக்கும்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

பாட்டு

பலர் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரம் இத தான் செய்வார்கள். நாம் வாழ்வில் மன நிம்மதியாக இருக்கும் நேரம் என்பது பயணம் செய்யும் நேரம் தான். இந்த நேரத்தில் பலர் ஹெட்செட்களை போட்டுக்கொண்டு அவரவருக்குப் பிடித்த பாடலை கேட்டு மனதில் சந்தோஷத்தையும் நிம்மதியையும் பெறுவார்கள். இதுவும் நேரத்தைச் சுகமாகக் கழிக்க நல்ல வழி தான்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

வாக்கிங்

இன்றைய ஐடி உலகில் மனிதர்கள் பெரும்பாலான நேரங்களை கணிப்பொறி முன்பு அமர்ந்தே கழிக்கின்றனர். அவர்களிடம் போதுமான அளவு உடற்பயிற்சி இருப்பதில்லை விமான நிலையம் மிகப்பெரிய பகுதியாக இருக்கும் அதனால் நீங்கள் காத்திருப்பு நேரத்தில் விமான நிலையத்தில் ஒரு வாக்கிங் செய்து விட்டு வரலாம் உடலுக்கும் நல்லதாக இருக்கும் விமான நிலையத்தையும் சுற்றி பார்த்து அது எப்படிச்செயல்படுகிறது என்று புரிந்து கொண்டது மாதிரியும் இருக்கும்.

இனிமே போர் அடிக்காது . . . விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தை ப் பயனுள்ளதாகக் கழிக்க செம டிப்ஸ் !

மசாஜ்

விமான பயணம் என்பது மிகவும் அசௌகரியமானது தான். குறிப்பாக எகனாமிக் வகுப்பில் பயணித்தால் உடல் வலியே வந்துவிடும். அதுவும் வெளிநாட்டுப் பயணங்கள் மிகவும் நீண்ட நேரம் விமான பயணமாக இருக்கும் என்பதால் இப்படியாக விமான காத்திருப்பின் நேரத்தில் நீங்கள் மசாஜ் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருப்பு பகுதியில் பெரும்பாலான விமான நிலையங்களில் மசாஜ் சென்டர் இருக்கும். ஆனால் இதற்காக நீங்கள் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 11, 2022, 17:05 [IST]
English summary
How to spend time useful while waiting in airport
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+