செல்ஃப் ஸ்டார்ட், கிக்கர் எதுவும் தேவையில்லை, பைக்கை எளிமையா ஸ்டார்ட் பண்ண இப்படி ஒரு வழி இருக்கா?
உங்கள் பைக்கில் செல்ஃப் ஸ்டார்ட் வேலை செய்யவில்லையா? பைக்கில் கிக்கர் இல்லையா? பைக்கை எளிமையா ஸ்டார்ட் பண்ண ஒரு டெக்னிக் இருக்கிறது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பெரும்பாலான பைக்களில் இன்று செல்ஃப் ஸ்டார்ட் வசதி வந்துவிட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு செல்ஃப் ஸ்டார் வசதிகள் எல்லாம் கிடையாது பைக்கில் கிக்கர் மட்டுமே இருக்கும் பைக்கை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றால் கிக்கரை மதித்துத் தான் ஸ்டார்ட் செய்ய வேண்டும். ஆனால் தற்போது ஒரு பட்டனை அழுத்தினாலே ஸ்டார்ட் ஆகும் ஆப்ஷன்கள் வந்துவிட்டது. இருந்தாலும் சில பைக்களில் கிக்கர் வசதி இருக்கிறது.

ஆனால் 200 சிசிக்கு அதிகமான பைக்களில் நீங்கள் கிக்கரை பார்க்க முடியாது. செல்ஃப் ஸ்டார்ட் மட்டுமே ஒரே ஆப்ஷனாக இருக்கும். இந்த மாதிரியான பைக்கள் எல்லாம் பேட்டரி பிரச்சனையாகி நடுரோட்டில் நின்றுவிட்டால் அவ்வளவு தான் ஸ்டார்ட் செய்யவே முடியாது. இந்த பிரச்சனை பலருக்கு ஏற்பட்டுள்ளது. இப்படியாக ஒரு பைக் கிக்கர் இல்லாமல் செல்ஃப் வேலை செய்யாமல் இருந்தால் அதை எப்படி ஸ்டார்ட் செய்யவேண்டும் தெரியுமா?

பலர் சரியாக பைக்கை பராமரிப்பு செய்யமலோ அல்லது பேட்டரியை கவனிக்காமல்விட்டால் இந்த பிரச்சனை ஏற்படும். இப்படியான பிரச்சனை வரும் போது அவர்கள் நடு ரோட்டில் ஆஃப் ஆன பைக்கை எப்படி ஸ்டார் செய்வது என தெரியாமல் முழிப்பார்கள். பலர் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்பட்டால் பைக்கை தள்ளிக்கொண்டே தான் செல்வார்கள். ஆனால் இப்படியாக நின்ற பைக்கை மீண்டும் ஸ்டார்ட் செய்ய ஒரு டெக்னிக் இருக்கிறது.

இந்த டெக்னிக்கை பயன்படுத்தி கிக்கர் இல்லாமல் பேட்டரி வேலைசெய்யாத பைக்களை ஸ்டார்ட் செய்ய முடியும். இது மட்டுமல்ல இந்த டெக்னிக் கிக்கர் இருக்கும் பைக்கிலும் வேலை செய்யும். ஏதாவது பிரச்சனை காரணமாக கிக்கர் உடைந்துவிட்டாலோ அல்லது ஜாம் ஆகிவிட்டாலோ இந்த டெக்னிக்கை பயன்படுத்தி பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியும்.

இந்த டெக்னிக் மிகவும் சுலபமான டெக்னிக் தான். நீங்கள் பெரிய அளவில் சிரமப்படவேண்டாம். பைக்கை ஒரு இடத்தில் நிறுத்தியே இதைச் செய்யலாம். பைக்கை தள்ளிக்கொண்டே செல்வதை விட இப்படி ஒரு டெக்னிக்கை செய்தால் பைக் சீக்கிரமாகவே ஸ்டார்ட் ஆகிவிடும். இந்த பிரச்சனையை ஆபத்துக் காலத்திற்காகப் பயன்படுத்துவதற்காக மட்டுமே அளிக்கிறோம். இதைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்.

செல்ஃப் ஸ்டார்ட் செய்ய பேட்டரி வேலை செய்யாமல், கிக்கர் இல்லாத நேரத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றால் பைக்கை ரோட்டில் ஒரு ஓரமாக நிறுத்த வேண்டும். பைக்க சென்டர் ஸ்டார்ட் போட வேண்டும். பைக்கின் பின் வீல் கட்டாயம் தரையில் படாதவாறு நிறுத்த வேண்டும். அதன் பின் பைக்கின் வீலை பைக் முன்பக்கம் செல்லும் போது எப்படிச் சுற்றுமோ அப்படி வேகமாகச் சுற்ற வேண்டும்.

முன்னதாக பைக்கின் கிளட்சை பிடித்துக்கொண்டு பைக்கை டாப் கியரில் வைக்க வேண்டும். பின்னர் தான் கிளட்சை பிடித்துக்கொண்டே பைக்கின் பின் வீலை சுற்ற வேண்டும். இதைச் செய்ய இரண்டு பேர் இருந்தால் வேலை சுலபமாக இருக்கும். பைக் வீல் வேகமாகச் சுற்றும்போது கிளட்சை மெதுவாக விட வேண்டும். அப்பொழுது பைக் ஸ்டார்ட் ஆகிவிடும்.

இந்த செயல்முறையில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. பைக்கின் வீலை சுற்றும் போது பைக்கின் செயினும் சேர்ந்து சுற்றுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும் அப்படிச் சுற்றினால் தான் பைக் ஸ்டார்ட் ஆகும். அதேநேரத்தில் பைக்கை டாப் கியரில் வைத்தால் தான் பைக் சுலபமாக ஸ்டார்ட் ஆகும். குறைவான கியரில் இருந்தால் வீல் வேகமாகச் சுற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இந்த டிப்ஸ் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது போன்று உங்களுக்கு கார் பைக் குறித்த சந்தேகங்கள் அல்லது கேள்விகள் ஏதாவது இருந்தால் நீங்கள் கமெண்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதற்கான விடையை நாம் தெளிவாகவும், விரைவாகவும் தர முயற்சி செய்கிறோம்.


Click it and Unblock the Notifications