புது காரை வாங்குறதுக்கு முன்னாடி ஒழுங்கா இதெல்லாம் டெஸ்ட் பண்ணி வாங்குங்க! ஒரு பிரச்சனையும் வராது!

புதுசா கார் வாங்கப்போறவங்க அந்த காரை டெஸ்ட் டிரைவ் பண்ணுவாங்க, இப்படி ஒரு காரை டெஸ்ட் டிரைவ் பண்ணும் போது என்னலாம் செக் பண்ணும்னு பாதி பேருக்குத் தெரியாது. ஓட்டி பார்க்கும் அனுபவம் நல்லா இருந்தா போதும்னு நினைக்கிறாங்க. இப்படி புது கார் வாங்கும் போது டெஸ்ட் டிரைவிங்ல கவனிக்க வேண்டிய விஷயத்தைப் பத்தி பார்க்கலாம் வாங்க

ஒருவர் புதிதாக கார் வாங்கப்போகிறார் என்றால் அவர் வாழ்வில் அடுத்த படிநிலைக்குச் செல்கிறார் என அர்த்தம். இப்படி ஒருவர் ஒரு கார் வாங்கும் போது அந்த கார் குறித்த ஏகப்பட்ட விஷயங்களை முன்பே தெரிந்து வைத்திருப்பார்கள். என்னதான் ஒரு காரைபற்றி நாம் அதிகம் ஆன்லைன் உள்ளிட்ட தளங்களில் படித்தாலும், அதை ஓட்டி பார்த்தால் தான் ஒரு திருப்தி ஏற்படும்.

how to test drive a car

இதனால் கார் விற்பனை செய்யும் ஷோரூமும் டெஸ்ட் டிரைவ் அனுபவத்தைக் காரை வாங்கும் முன்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஆனால் டெஸ்ட் டிரைவ் செய்யும் போது ஒரு காரில் எதை எல்லாம் செக் செய்ய வேண்டும் என பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் காரை ஓட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர். ஒரு காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் போது எதை எல்லாம் செக் செய்ய வேண்டும் எனக் காணலாம் வாருங்கள்.

ஒரு காரை நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்கிறீர்கள் என்றால் அதற்கு முன்பே கட்டாயம் அந்த காரை பற்றிய விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். குறைந்த பட்சம் அந்த மாடலில் எத்தனை வேரியன்ட்கள் இருக்கிறது. ஒவ்வொரு வேரியன்டிற்கும் என்ன வித்தியாசம் என்ற தகவலையாவது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

how to test drive a car

அதன்பின் டெஸ்ட் டிரைவ் செல்வதற்கு முன் நீங்கள் உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைக்கு ஏற்றவாறு 2-3 கார்களையாவது தேர்வு செ்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் ஒரு முறை டெஸ்ட் டிரைவிற்கு செல்லும் போதே உங்களுக்குத் தேவையான அத்தனை காரையும் டெஸ்ட் செய்துவிட முடியும். அதன்பின் உங்கள் வீட்டின் அருகே உள்ள டீலரிடமோ அல்லது ஆன்லைன் மூலமாகவே உங்களுக்கான டெஸ்ட் டிரைவை பதிவு செய்யுங்கள்.

டெஸ்ட் டிரைவிற்காக பதிவு செய்யும் போது உங்களது பெயர், இ-மெயில் முகவரி மற்றும் போன் நம்பர் ஆகிய விபரங்கள் கேட்கப்படும். இதைக் கொடுத்தவுடன் உங்களுக்கான இடத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் டெஸ்ட் டிரைவ்விற்கான நேரம் மற்றும் தேதி உங்களுக்கு வழங்கப்படும்.

how to test drive a car

நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றால் நீங்கள் வாங்க நினைக்கும் வாகனங்களை டெஸ்ட் டிரைவ் செய்ய முடியும். டெஸ்ட் டிரைவ் சென்றதும் பலரும் செய்யும் முதல் தவறு நேரடியாக காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து ஓட்டி பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் முதலில் அதைச் செய்யக்கூடாது.

முதலில் காரின் அளவுகள் உங்களுக்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவையிருக்கும். சிலருக்கு அதிக பொருட்களை ஏற்றிச் செல்ல வசதி வேண்டும், சிலருக்குக் கால்களுக்கு இடைஞ்சல் இல்லாத சீட் அமைப்பு வேண்டும். இப்படி உங்களுக்கான தேவையான அளவுகள் காரில் இருக்கிறதா என செக் செய்யுங்கள். பின்பக்க சீட் வசதியாக இருக்கிறதா? பூட் நீங்கள் நினைத்த அளவிற்கு பெரியதாக இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.

இதை எல்லாம் செக் செய்த பின் டிரைவர் சீட்டில் அமருங்கள். காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு நீங்கள் அமர்ந்திருக்கும் போசிஷன் உங்களுக்கு வசதியாக இருக்கிறதா? ஸ்டிரிங்கை பிடிக்க சௌகரியமாக இருக்கிறதா? சீட்டின் உயரம் உங்களுக்குத் தகுந்தார் போல இருக்கிறதா, ஆக்ஸிலரேட்டர், பிரேக், கிளட்ச் எல்லாம் உங்கள் கால்களுக்கு எட்டும்படி இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு காரை ஸ்டார்ட் செய்து உங்கள் பயணத்தைத் துவங்குங்கள். காரில் செல்லும்போது இன்ஜினின் திறனை ஃபீல் பண்ண முயற்சி செய்யுங்கள். பயணத்தின் போது அனைத்து கியர்களிலும், வேகமாகவும், மெதுவாகவும் பயணித்துப் பாருங்கள். அதே நேரம் கரடு முரடான பாதைகளிலும், நெருக்கடி நிறைந்த ரோடுகளிலும் பயணித்து டெஸ்ட் செய்து பாருங்கள்.

அதன் பின்னர் காரில் உள்ள கண்ணாடிகள் எவ்வளவு தூரம் உதவுகிறது. அதை வைத்து பாதுகாப்பாக உங்களால் காரை ரிவர்ஸ் எடுத்து பார்க்கிங் செய்ய முடிகிறதா? தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது லேன் விட்டு லேன் மாற வசதியாக இருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும். இத்தனையையும் செக் செய்த பின்பு தான் நீங்கள் காரிலிருந்து கீழே இறங்க வேண்டும்.

ஆனால் அதற்கு முன்பு காரில் உள்ள பட்டன்கள், ஏசி வசதி, வைப்பர், மியூசிக் சிஸ்டம் ஆகியவற்றையும் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். காரின் டெஸ்ட் டிரைவை துவங்கும் முன் கார் விற்பனை பிரதிநிதியிடம் காரில் ஏதாவது சிறப்பம்சங்கள் இருக்கிறதா எனக் கேட்டு அதையும் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். இப்படியாக நீங்கள் லிஸ்டில் வைத்திருக்கும் மாடல் மற்றும் வேரியன்ட்களை டெஸ்ட் செய்த பின்பு உங்களுக்குத் தகுந்த காரை புக்கிங் செய்யுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாக டெஸ்ட் செய்து கார் வாங்கினால் தான் கார் வாங்கும் போது ஒரு மன நிம்மதியுடன் வாங்க முடியும். கார் வாங்கிய பின்பு பிரச்சனையும் இருக்காது. பலர் இதை எல்லாம் டெஸ்ட் செய்யாமல் காரை வாங்கிவிட்டுத் தெரியாமல் வாங்கிவிட்டதாகப் புலம்பித் தள்ளுவார்கள். இப்படி டெஸ்ட் செய்தால் புலம்ப வேண்டிய அவசியமே இருக்காது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 13, 2023, 10:39 [IST]
English summary
How to test drive a car know the entire process
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X