உங்கள் காரின் ஆயுளை அதிகரிக்க இதை செய்தால் போதும்..!

கார் தயாரிப்பாளர்கள் சராசரியாக ஒவ்வொரு காரையும் 3,50,000 கி.மீ. மேல் ஓடும் அளவிற்கு டிசைன் செய்துள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் தங்கள் காரை அவ்வளவு அதிகமாக பயன்படுத்துவதில்லை, சுமார் கார் 1 லட்சம் கி.

கார் தயாரிப்பாளர்கள் சராசரியாக ஒவ்வொரு காரையும் 3,50,000 கி.மீ. மேல் ஓடும் அளவிற்கு டிசைன் செய்துள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் தங்கள் காரை அவ்வளவு அதிகமாக பயன்படுத்துவதில்லை, சுமார் கார் 1 லட்சம் கி.மீ. ஓடிய பின்பே அதை வேறு ஒருவருக்கு சிலர் விற்றுவிடுகின்றனர். இந்த செய்தியில் ஒவ்வொரு காரை எப்படி பராமரிப்பது மூலம் எப்படி குறைந்தபட்சம் 3 லட்சம் கி.மீ. வரை எந்த வித பிரச்னையும் இல்லாமல் ஓட்ட முடியும் என்பதை நாம் பார்க்கலாம்.

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

சரியான காரை தேர்வு செய்யுங்கள்

நீங்கள் நீண்ட நாள் சேர்த்து வைத்த பணத்தை வைத்தே காரை வாங்குகின்றனர். உங்கள் காசுக்கு ஏற்ற தரமான காரை நீங்கள் தேர்ந்தேடுக்க வேண்டியது கட்டாயம். உங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப மார்கெட்டில் உள்ள சிறந்த காரை நீங்கர் தேர்ந்தேடுக்க வேண்டியது கட்டாயம்.

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

மேலும் விற்பனைக்கு பின்பான சர்வீஸ் குறித்தும் நீங்கள்கருத்தில் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் தான் உங்கள் காரின் வாழ்நாளிற்கு முக்கியமான அம்சம். அதனால் உங்கள் தேவைக்கு ஏற்ற காரை தேர்வு செய்யுங்கள்

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

மாடிஃபிகேஷனை தவிர்த்து விடுங்கள்

உங்கள் கார்களில் மாடிஃபிகேஷன் செய்வதை தவிர்த்து விடுங்கள். முக்கியமாக பெரிய வில்களை பொருத்துவது. அகலமான டயர்களை பொருத்துவது. இசியூ ரீமேப் செய்வது. ப்ரீ பிளோ எக்ஸாட், உள்ளிட்ட மாடிஃபிகேஷனை கட்டாயம் செய்யாதீர்கள்.

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

நீங்கள் அதிக பெர்பாமெஷன்ஸ் விரும்பினால் பேட்டரி பிட்டிங்கிலேயே அவ்வாறாக வரும் காரை வாங்கி உங்களுக்கு பிடித்த மாதிரி ஸ்டிக்கரிங் செய்து கொள்ளுங்கள். காரின் நீங்கள் செய்யும் சிறிய மாடிபிகேஷன் கூட காரின் வாழ்நாளை பாதித்து விடலாம்.

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

குறைந்த தூர பயணத்தை தவிர்த்து விடுங்கள்

உங்கள் காரை 2 கிலோ மீட்டருக்கு குறைவான தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். குறைந்த தூர பயணத்திற்குள் உங்கள் வாகனம் வார்ம் அப் ஆகாது. பொதுவாகவே காரை நீங்கள் எடுப்பதற்கு முன்பாகவே 1 நிமிடம் ஆன்னில் வைக்க வேண்டும். அப்பொழுது தான் இன்ஜின் வார்ம் அப் ஆகி ஓட தயாராக இருக்கும்.

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

அதே நேரத்தில் காரின் டெம்பரேச்சர் நீடில் பாதி தூரம் வந்து விட்டாத என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். காரை ஸ்டார்ட் செய்தவுடன் ரேஸ் செய்வதை தவிர்க்க வேண்டும். டர்போ சார்ஜ் இன்ஜின் ஆக இருந்தால் காரை ஆப் செய்வதற்கு முன்பாக ஒரு நிமிடம் ஐடியல் ஆக விட வேண்டும்.

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

சரியாக நேரத்திற்கு சர்வீஸிற்கு கொண்டு செல்லுங்கள்

உங்கள் காரை சரியாக கால இடைவெளியில் சர்வீஸிற்கு கொண்டு செல்வது கட்டாயம். உங்கள காரில் உள்ள பல உதிரி பாகங்கள் சாியான இடைவெளியில் லுப்ரிகேஷன் செலுத்த வேண்டும். சில பாகங்களை குறிப்பிட்ட காலை இடைவெளியில் மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

அதனால் நீங்கள் கார் தயாரிப்பாளரின் சர்வீஸ் காலத்தை கட்டாயமா கடை பிடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 10,000 கி.மீ. இடைவெளியில் வீல் அலைமெண்ட் மாற்றுவது, ஒவ்வொரு 1 லட்சம் கிலோ மீட்டருக்கு ஒரு முறை டைமிங் பெல்ட் மாற்றவது கட்டாயமாக செய்ய வேண்டும்.

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

நீட்டிக்கப்பட்ட வாரண்டி

பொதுவாக கார்கள் எல்லாம் தயாரிப்பாளரின் வாரண்டியாக 2 ஆண்டுகள் வரை வாரண்டி தரப்படும் அதே நேரத்தில் நாம் சிறிது பணம் செலவு செய்து அதை 5ஆண்டுகளாக நீட்டிக்கும் ஆப்ஷன் இருந்தால் அதைசெய்து கொள்ளலாம். அதே நேரத்தில் நீங்கள் மாடிஃபிகேஷன் செய்தை தவிர்க்க வேண்டும். அப்பொழுது தான் வாரண்ட்டி கிடைக்கும், மாடிஃபிகேஷன் செய்த காருக்கு வாரண்டி கிடைக்காது.

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

நீண்ட தூர பயணம்

பொதுவாக காரை ஜென்டிலாக கையாளுங்கள்.நீங்கள் தேவையில்லாம் கொடுக்கும் ஸ்டிரஸ், காரின் இன்ஜின் மற்றம் சஸ்பென்ஸ் பகுதிகளின் வாழ்நாளை பாதிக்கும். மேலும் சிறந்த டிரைவிங் பழக்கத்தை நீங்கள் கையாள வேண்டும். உதாரணமாக நீங்கள் சிவப்பு சிக்னலை முன்னரே பார்த்து விட்டாலும் காரை உடனடியாக வேகத்தை குறைத்து கொண்டே லைன் வரை செல்லாமல் ஒரு வேகத்தில் சென்று லைன் அருகில் சென்றதும் பிரேக் பிடிக்க வேண்டும் இதனால் காரின் பிரேக் பேடு வாழ்நாள் நீளும்.

உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

அதே போல ஆக்ஸலரேட்டரை கூட்டும் போதும், குறைக்கும் போதும் மெதுவாக கூட்டி குறைத்தால் உங்கள் காரின் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் வாழ்நாள் நீளும், காரின் டோர்களை மெதுவாக சரியான வேகத்தில் அடைப்பதன் மூலம் டோர்களின் வாழ்நாள் நீளும், குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு காரின் முகப்பு கண்ணாடி முன்பு உள்ள வைப்பரை மாற்றவேண்டும் இதனால் காரின் கண்ணாடியில் ஏற்படும் ஸ்கிராட்ச்களை தவிர்க்கலாம்.

Most Read Articles
English summary
how to make your car life 3 times. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X