இந்த தப்பை நிறைய பேர் செய்றாங்க... பெரிய செலவை இழுத்து விட்டுவிடும் - இதையெல்லாம் ஞாபகத்தில் வெச்சிக்கோங்க!!
நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி அடைந்துக் கொண்டே போகிறது. இதன் வெளிப்பாடாக, கடந்த நூறு ஆண்டுகளில் கார்களை ஓட்டுவது பெரிய அளவில் சவுகரியமாகி உள்ளது. காரை நிறுத்த பெரிய கம்பியை பிடித்து இழுக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்து இன்று சிறிய மென்மையான அசைப்பின் மூலம் காரை நிறுத்துவிடலாம் என்கிற நிலைக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். கார்களில் ஹேண்ட் பிரேக் மிக முக்கியமான கண்டுப்பிடிப்பாகும். இருப்பினும் இப்போதும், ஹேண்ட் பிரேக்கை எவ்வாறு சரியாக உபயோகிப்பது என தெரியாமல் நிறைய பேர் இருக்கின்றனர்.
ஹேண்ட் பிரேக், பொதுவாக காரை அவ்வப்போது நிறுத்தி செல்வதற்கு பயன்படுத்தப் படுகின்றது. இதனால், இதன் தேவை பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில், சிக்னலில் நிற்கும்போதும் அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம், ஹேண்ட் பிரேக் பயன்படுத்தும்போது காரின் என்ஜின் ஆஃப் ஆகுவதில்லை.

காரை திடீரென நிறுத்துவதற்கு முதலில் கால் தான் போகும் என்றாலும், இன்னும் விரைவாக காரை நிறுத்துவதற்கு நமது இடதுகையும் ஹேண்ட் பிரேக் மீது செல்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் மறவாதீர்கள், காரில் அதிவேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்த வேண்டாம். மிகவும் அவசரமான சூழல், விபத்து ஏற்பட போகிறது என்றால் மட்டும் இதனை உபயோகியுங்கள்.
ஏனெனில், அதிவேக பயணத்தின்போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தினால், காரின் பின் சக்கரங்கள் லாக் ஆகுவதற்கு வாய்ப்புள்ளது. இதன் விளைவாக டிரைவர் காரின் கண்ட்ரோலை இழக்க நேரிடும். இதனால், ஏற்கனவே கூறியதுபோல், குறைவான வேகத்தில் நின்று, நின்று செல்ல வேண்டியிருந்தால் மட்டுமே இதனை பயன்படுத்தவும். கால் பிரேக் பெடல் செயல்படவில்லை என்றால், வேற வழியில்லாமல் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தலாம்.

ஆனால், அப்போதும் மென்மையாக அதனை அசைத்து உபயோகப்படுத்த வேண்டும். காரில் எலக்ட்ரானிக் சிஸ்டம் இருந்தால், ஹேண்ட் பிரேக்கை அசைக்க வேண்டியது கூட இல்லை, ஒரு பொத்தானை அழுத்தினாலே போதும். பொத்தானையும் அவசர நேரத்தில் மென்மையாக அழுத்த முயற்சியுங்கள். ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தும் போது சாலையின் மீது முழு கவனம் இருக்கட்டும்.
கார் சறுக்குவது போன்று இருந்தால் ஹேண்ட் பிரேக்கை இன்னும் மென்மையாக பயன்படுத்தவும். காரை நிறுத்துவதற்கு முன்னர் ஹசார்ட் விளக்குகளை ஆன் செய்யவும். இதன் மூலமாக மற்ற வாகன ஓட்டிகள் அலார்ட் ஆகுவார்கள். முடிந்தவரையில், காரை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தவும். அவசர நேரத்தில் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தினால், உங்களது காரின் பிரேக் சிஸ்டம் அல்லது மற்ற பாகங்கள் சேதமடைய கூடும்.
ஆதலால், அவ்வாறான சூழலில் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தினால் உங்களது காரை தகுந்த மெக்கானிக்கிடம் கொடுத்து பழுது பார்ப்பது நல்லது. சம்பவத்தின்போது ஹேண்ட் பிரேக்கை ஆக்ரோஷமாக பயன்படுத்தினால்தான் பழுது ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், ஹேண்ட் பிரேக்கை மென்மையாக பயன்படுத்தவும். கால் பிரேக் பெடல் பழுதாகும் சமயத்தில் பதறாமல் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்துவதுதான் முக்கியமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் முக்கியமான பிரேக் சிஸ்டம் பழுதாகினாலும் இந்த வழிமுறைகளை பின்பற்றி ஹேண்ட் பிரேக்கை உபயோகித்து உங்களது காரை பாதுகாப்பாக நிறுத்தலாம். ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தும்போது உங்களது மனநிலை பதற்றப்படாமல் நிலையாக இருப்பதுதான் அவசியமாகும். மற்றப்படி, குறைவான வேகத்தில் செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை.


Click it and Unblock the Notifications








