இது ஒன்னும் உங்க வீட்டு பால்கனி கிடையாது, சும்மா எட்டியெல்லாம் பாக்காதீங்க! கார்களில் ஏன் சன்ரூஃப் இருக்குது?

இன்று கார்களில் ஏகப்பட்ட புதிய புதிய அம்சங்கள் வந்துவிட்டது. கார் ஓட்டிகளின் வசதிகளுக்காகவும், பயணம் முடிந்தளவு சுலபமாகவும், மக்கள் விரும்பும்படியும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வசதிகள் எல்லாம் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் பொருத்துகின்றனர்.

கார் வாங்கும் முன் மக்களும் கார்களில் உள்ள வசதிகளைத் தெரிந்து கொண்டு கார்களை வாங்குகின்றனர். இப்படியாகச் சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ள வசதி தான் சன் ரூஃப் வசதி. இன்று விற்பனைக்கு வரும் ரூ8 லட்சத்திற்கு அதிகமான விலையுள்ள கார்களில் நிச்சயம் இந்த ஒரு வசதியை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

இது ஒன்னும் உங்க வீட்டு பால்கனி கிடையாது, சும்மா எட்டியெல்லாம் பாக்காதீங்க! கார்களில் ஏன் சன்ரூஃப் இருக்குது?

இந்த அம்சத்தை விரைவில் சிறிய ரக கார்களில் கூடக் கொண்டு வர கார் தயாரிப்பு நிறுவனங்கள் யோசித்து வருகிறது. கிட்டத்தட்ட கார் விற்பனையையே இந்த வசதி தான் முடிவு செய்கிறது. இந்த வசதிகள் இல்லாத கார்கள் விற்பனையில் மந்தைமடையும் சூழ்நிலையும் தற்போது நிலவி வருகிறது.

இப்படி மக்கள் அதிகம் விரும்பும் இந்த சன்ரூஃப் தொழிற்நுட்பம் கார்களில் ஏன் வழங்கப்படுகிறது. அதை எதற்காக எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும். எப்படிப் பயன்படுத்தக்கூடாது. இதனால் கிடைக்கும் நன்மை தீமைகளை பற்றித்தான் இந்த பதிவில் நாம் அலசி ஆராயப்போகிறோம்.

காற்றோட்டம்: இந்த வசதி வழங்கப்பட்டதற்கான முதல் காரணம் உங்கள் கேபின் காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பது தான் சில நேரங்களில் கார்களில் ஏசியை பயன்படுத்த முடியாமல் அதே நேரத்தில் ஜன்னல்களையும் திறக்க முடியாத சூழ்நிலைகளில் இந்த சன்ரூஃப்பை திறந்து காற்றோட்டமாக இருக்க முடியும்.

குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது அங்குள்ள இயற்கை சூழல் மற்றும் கிளைமேட்டை காருக்குள்ளேயிருந்தே அனுபவிக்க இந்த சன்ரூஃப் உதவிகரமாக இருக்கும். ஆனால் இதைப் பயன்படுத்துவதால் வெளியில் உள்ள தூசுகள் எல்லாம் காருக்குள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது கவனமாக இருக்கவும்.

வெளிச்சம்: இந்த சன்ரூம் காருக்குள் நல்ல வெளிச்சத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது. பகல் நேரத்திலும் சரி இரவு நேரத்திலும் சரி வெளியில் உள்ள வெளிச்சம் உள்ளே வர உதவியாக இருக்கிறது. இரவுநேரத்தில் காருக்குள் பயணிக்கும் போதே வானில் உள்ள நட்சத்திரம் நிலா ஆகியவற்றின் அழகையும் கண்டு ரசிக்க முடியும்.

வெப்பம்: இந்த சன்ரூஃப்பை பலர் பல நேரங்களில் வெப்பத்தைக் குறைக்கும் ஒரு வசதியாகக் கூட பயன்படுத்தி வருகின்றனர். கார் வெகு நேரமாக வெயிலில் நின்றால் காருக்குள் வெப்பம் அதிகமாகிவிடும். இதனால் காரின் வெப்பத்தைக் குறைக்க ஏறியதும் ஏசியை ஆன் செய்யக்கூடாது.

மாறாக சிறிது நேரம் கார் ஓடும் போது காருக்குள் வெளியிலிருந்து காற்று வந்து வெளியில் உள்ள வெப்பமும் காருக்குள் உள்ள வெப்பமும் சம நிலையை அடைய வேண்டும். இதற்காகச் சிலர் இப்படியான சூழ்நிலைகளில் சன்ரூஃபை திறந்து விட்டுவிடுவார்கள்.

திறந்தவெளி கார் அனுபவம்: கார்களில் குறைந்த அல்லது மிதமான வேகத்தில் செல்லும் போது பலருக்கு கன்வெர்டட் கார்களில் செல்லும் அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற ஆசையிருக்கும். ஆனால் கன்வெர்ட்டட் கார்களின் விலை மிகவும் அதிகம். இதனால் அவர்கள் இந்த சன்ரூஃபை திறந்து வைப்பது மூலம் இப்படியான அனுபவத்தைப் பெற முடியும்.

எட்டிப்பார்க்காதீர்கள்: இந்த சன்ரூஃபை பலர் காரிலிருந்து வெளியே எட்டிப் பார்க்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படித்ததில் வந்த காட்சிக்குப் பிறகு இதைப் பலர் காரின் மொட்டை மாடி எனப் பெயர் வைத்து சாலையில் செல்லும் போது எட்டிப்பார்த்துக்கொண்டே செல்கின்றனர்.

ஆனால் இது முற்றிலும் தவறான விஷயம் இப்படியாக எட்டிப் பார்க்கும் போது காரின் டிரைவர் பிரேக் பிடித்தால் எட்டிப் பார்த்துக்கொண்டிருப்பவர் முன்னே சென்று முட்டவோ அல்லது காரிலிருந்து தூக்கி வீசப்படவோ வாய்ப்பு இருக்கிறது. கார் 15 கி.மீ வேகத்தில் செல்லும் போது பிரேக் பிடித்தால் கூட இப்படியான விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது. தற்போது இப்படி எப்படிப் பார்த்தபடி பயணிப்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

ரெட்ரோ ஃபிட்டிங்: பலர் இந்த காரின் சன்ரூஃப்களை ரெட்ரோ ஃபிட்டிங்களாக செய்கின்றனர் இதுவும் முற்றிலும் தவறான ஒரு விஷயம் ஆகும். கார் தயாரிப்பு நிறுவனங்களே இந்த சன்ரூஃபை ஃபிட் செய்கின்றனர் என்றால் அவர்கள் பல டெஸ்ட்களை செய்கின்றனர். ஆனால் தனியாக பொருத்துவது காரின் பாடி கட்டமைப்பு இன்ஜினியரிங்கையே மாற்றிவிடும்.

இப்படியாக வெளிமார்கெட்டில் இதைப் பொருத்துவது ஆபத்தை விளைவிக்கும். மேலும் இதில் லீக்கேஜ் நடக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் எலெக்ட்ரிக்கல் பிரச்சனை கூட ஏற்படலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 30, 2023, 16:00 [IST]
English summary
How to use car sunroof know what is illegal
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+