கார் சீட்ல இந்த விஷயத்தை கவனிச்சிருக்கீங்களா? யாருக்குமே தெரியாம இந்த 2 விஷயம் மறைஞ்சு இருக்கும்
நவீன கார்களில் சீட்களில் வென்டிலேஷன் ஆப்ஷன் இருக்கிறது. இந்த ஆப்ஷன் உடன் சீட்கள் தயாரிக்கப்படும் போது சீட்டில் பயணிகள் அமரும் போது உருவாகும் வெப்பம் குறைக்கப்பட்டு அவர்களுக்கு குளிர்ச்சியான அனுபவம் கிடைக்கும். இந்நிலையில் இந்த சீட்டில் வெப்பம் வழங்கும் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த தொழிற்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பதை தான் இங்கே காணப்போகிறோம்.

பொதுவாக கார்களில் நாம் பயணிக்கும்போது சொகுசு வசதிகள் வேண்டும் என நினைப்போம். காரில் செல்லும் போது எந்த விதமான பிரச்சனையும் ஏற்பாடமல் இருக்க பலர் சொகுசு வசதியை விரும்புவார்கள். இன்றைய கார்களில் சொகுசு வசதி என்பது வென்டிலேட்ட மற்றும் ஹீட்டட் சீட்களாக உள்ளன. இன்று இந்த ஆப்ஷன்கள் இருந்தால் அது சொகுசு காராகத்தான் இருக்க முடியும்.
கார்களில் ஹீட்டட் சமற்றம் வென்டிலேட்ட் சீட்டுகள் பயணிகளக்க சொகு வசதியை வழங்குகிறன்றன. இதில் ஹீட்டாவதற்கு எலெக்ட்ரிக் முறையில் வானகத்தின் ஹீட் செய்யப்படுகிறது இதற்கு சீட்டிற்கு அடியில் அதிக எலெக்ட்ரிக் பவரை தாங்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி எலெக்ட்ரிக் மூலம் சூட்டை ஏற்றுகின்றனர். இதன் மூலம் சீட் சூடாகிறது.

அதே நேரம் குளிர்ச்சியை வழங்க சீட்டிற்குள் ஃபேன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காரின் சீட்டின் சுற்றுபுறத்தில் உள்ள காற்றை ஈர்த்து சீட்டின் வழியாக வெளியிடுகிறது. இதனால் காரில் ஏசி போட்டு பயணித்து காரின் ஏசி மூலம் சீட்டை சுற்றியுள்ள காற்று குளிராக இருந்தால் சீட் வழியாக குளிர்ந்த காற்று வரும்.
இதில் குளிர்ச்சியை தரும் தொழிற்நுட்பத்தை கொண்ட சீட்கள் வென்டிலேட்டட் சீட்கள் எனவும், வெப்பத்தை தரும் சீட்கள் ஹீட்டட் சீட்கள் எனவும் அழைக்கப்படுகிறது.சில கார்களில் இரண்டு வசதிகளும் இருக்கிறது. இது எந்த விதமான வெப்ப நிலைகளில் எதை பயன்படுத்த வேண்டும்? இதை நாம் முதலில் புரிந்து வைத்துக்கெள்ள வேண்டும்.

குளிர் நேரங்களில் ஹீட்டட் சீட்கள் தான் சிறப்பானவை, இது பயணிகளை கதகதப்பாக வைத்திருக்கிறது. இதனால் குளிர்காலத்தில் இனிமையான பயண அனுபவம் கிடைக்கும். அதே நேரம் வெயில் நேரங்களில் வெப்பத்தை தணிக்க வென்டிலேட்டட் சீட்கள் தேவைப்படும்.
இந்தியாவில் காஸ்ட்லியான கார்களில் தான் வென்டிலேட்டட் சீட்கள் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதிய செய்யப்படும் கார்களில் தான் பெரும்பாலும் ஹீட்டட் சீட் அம்சங்கள் இருக்கிறது. இந்தியாவின் பெரும்பான்மையான பகுதி அதிக வெப்பம் நிறைந்த பகுதி என்பதால் இந்த பகுதிகளில் ஹீட்டட் சீட்களுக்கான தேவை இல்லை.
இந்த அம்சங்கள் தற்போது சொகுசு அம்சமாக இருந்தாலும் வருங்காலங்களில் இது கட்டாயம் அனைவருக்கும் தேவைப்படும் அம்சமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் எதிர்காலத்தில் வென்டிலேட்டட் சீட்களை அனைத்து கார்களிலும் எதிர்பார்க்கலாம். இந்த அம்சம் மக்களை அதிகம் ஈர்க்கும். அதே நேரம் ஹீட்டட் சீட்களுக்கான தேவை அதிகமாக இருக்காது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான இடங்கள் அதிக வெப்பம் நிறைந்த இடங்களாக இருப்பதால் வாகனங்களில் இது தேவையில்லாத அம்சமாகவே இருக்கும்.
தற்போது வெளிநாட்டிலிருந்து இறக்குதி செய்யப்படும் சில கார்களில் இந்த ஹீட்டட் சீட் அம்சங்கள் இருக்கிறது. இதை பலர் பயன்படுத்தமலேயே இருக்கின்றனர். வெளிநாட்டில் அதிக குளிர் நிறைந்த பகுதிகள் அதிகமாக இருப்பதால் அந்த பகுதிகளில் விற்பனை அதிகமாக இருக்கும் என இ்நத தொழிற்நுட்பம் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு இது ஒரு தேவையில்லாத தொழிற்நுட்பம் தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீட்டட் சீட்கள் இந்தியாவில் குளிர் பிரதேசங்களில் வேண்டுமானால் தேவைப்படலாம். ஆனால் மற்ற இடங்களில் வென்டிலேட்டட் சீட்கள் தேவைப்படலாம். இதனால் இந்த சீட்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இது குறித்த உங்கள் கரத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









