ஓலா மட்டும் இந்த பேட்டரியை உருவாக்கி முடிச்சிட்டால்... வீட்டுக்கு கரண்ட் பில்லே கட்ட தேவையில்ல!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள அதன் தொழிற்சாலையில் பேட்டரிகளை உற்பத்தி செய்ய துவங்கியுள்ளது. '4680 பாரத் செல்' (4680 Bharat Cell) என்கிற பெயரில் ஓலா நிறுவனம் உருவாக்கும் இந்த பேட்டரிகள் மூலம் இந்தியாவில் ஆற்றல்களை பரிமாற்றம் செய்யும் நடைமுறையே மொத்தமாக மாற போகிறது.

எப்படியென்றால், 4680 பாரத் செல் பேட்டரிகளை சூரிய ஒளியின் மூலமாக சார்ஜ் நிரப்பி கொள்ளும் வகையில் வழங்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக, புதுப்பிக்க ஆற்றல் மூலங்களை பயன்படுத்தி வாகனத்திற்கான இயக்க ஆற்றலை பெற முடியும் என்பது மட்டுமின்றி, அவற்றை மின்சாரம் ஆகவும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த முடியும்.

ola 4680 bharat cell batteries

வீட்டு உபயோகத்திற்கு மட்டுமில்லாமல், சூரிய ஒளி மூலம் பெறப்படும் இயக்க ஆற்றல்களை வைகல்-டூ-கிரிட் (Vehicle-to-Grid) தொழிற்நுட்பம் மூலமாக, நேரடியாக மின் கம்பத்திற்கே கூட வழங்கி மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்கின்றனர். இதற்கெல்லாம் இன்னும் சில வருடங்கள் ஆகும் என்றாலும், இந்த அளவிற்கு ஆற்றலை பரிமாற்றம் செய்யக்கூடிய அளவிற்கு ஓலாவின் பேட்டரிகள் அதிக செயல்திறன் மிக்கவை ஆக உருவாக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் உள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஜிகாஃபேக்ட்ரியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த 4680 பாரத் செல் பேட்டரிகள் லித்தியம் மற்றும் இரும்பு கலந்த கலவையாக உருவாக்கப்பட்டு வருகின்றன. லித்தியம்-இரும்பு பேட்டரிகளை மற்ற வாகன நிறுவனங்களும் தயாரிக்கின்றன என்றாலும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் 4680 பாரத் செல் பேட்டரிகளை மட்டும் குறிப்பிட்டு பார்ப்பதற்கு காரணம், அவற்றின் அதிகப்படியான ஆயுட்காலம் ஆகும்.

ola 4680 bharat cell batteries

நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும் தன்மை உடன் உருவாக்கப்படுவதால் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஓலாவின் பேட்டரிகள் கவனிக்கத்தக்க இடத்தை பிடிக்கும் என்பதாலேயே முன்கூட்டியே கணித்து '4680 பாரத் செல்' என பெயர் சூட்டி உள்ளனர். மேலும், விரைவாக சார்ஜ் ஆகக்கூடியதாக உருவாக்கப்படும் இந்த ஓலா பேட்டரிகளின் உற்பத்தியில் முக்கியமாக, அயல்நாட்டு தொழிற்நுட்பங்களின் பயன்பாடு குறைவாக இருப்பதுதான் கவனிக்கத்தக்க அம்சம் ஆகும்.

ஏனெனில், இதன் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை இல்லாமல் போவது மட்டுமின்றி, வெளிநாடுகளில் என்ன நடந்தாலும் அது இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டையும், ஓலா நிறுவனத்தையும் பாதிக்காது. சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை பெற்று பயன்படுத்துவது இன்னும் எளிமையாகி விட்டால், நாட்டிற்கு தேவையான மின்சாரங்களை வழங்குவதில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.

ola 4680 bharat cell batteries

ஏனெனில், பெரிய பரப்பளவிற்கு சோலார் பேனல்களை அமைத்து சூரிய ஒளியை பெற்று அதனை மின்சாரமாக மாற்றுவதை காட்டிலும், சூரிய ஒளி மூலம் ஓலா பேட்டரியை சார்ஜ் செய்து அதனை மின்சாரமாக பயன்படுத்தலாம். இதற்கேற்ப, ஓலா எலக்ட்ரிக்கின் 4680 பாரத் செல் பேட்டரியில் மேம்பட்ட தரத்தில் ஆற்றல்களை சேமித்து வைக்க முடியுமாம்.

அதாவது, அந்த அளவிற்கு அதிக ஆற்றல் அடர்த்தியை தாங்கிக் கொள்ள கூடியதாகவும், மற்ற எலக்ட்ரிக் வாகன பேட்டரிகளை காட்டிலும் விரைவாக சார்ஜ் நிரப்பக் கூடியதாகவும் ஓலாவின் பேட்டரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக, பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக வாகனம் இயங்கும் தொலைவு அதிகமாக இருப்பதுடன், வாகனத்தை ஓட்டும்போது கிடைக்கும் அனுபவமும் புதுமையானதாக இருக்கும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் இந்திய எலக்ட்ரிக் 2-வீலர்கள் மார்க்கெட்டில் நுழைந்த விதத்தை பார்க்கும்போதே இது மார்க்கெட்டில் பெரியதாக சாதனை எதையோ புரிய போகிறது என நினைத்தோம். நாம் எதிர்பார்த்தப்படியே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனையில் ஆதிக்கத்தை செலுத்திவரும் ஓலா நிறுவனம், அதனை தொடர்ந்து பேட்டரி விஷயத்திலும் இந்தியாவில் புரட்சியை நிகழ்த்த தயாராகி கொண்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 27, 2025, 21:13 [IST]
English summary
How will ola 4680 bharat cell batteries can change indian renewable energy sector
மேலும்... #ola #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X