தோதான விலையில் கிடைக்கும் 'யூஸ்டு' ஹூண்டாய் ஐ10!

நானும் கார் ஓட்டுவேன், எனது மனைவியும் கார் ஓட்டுவார். இருவரும் டிரைவ் செய்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த யூஸ்டு கார் வாங்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு நல்ல சாய்ஸ் ஹூண்டாய் ஐ10. விற்பனைக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது ஏராளமான ஐ10 கார்கள் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

மிட்சைஸ் கார்கள் மீது ஏற்பட்டுள்ள மோகம், டீசல் கார்களை வாங்கும் மனப்பான்மை ஆகியவை யூஸ்டு மார்க்கெட்டில் ஐ10 அதிகமாக வருவதற்கு முக்கிய காரணம்.

ஸ்டைலான வடிவமைப்பு, அதிக இடவசதியுடன் கூடிய ஐ10 தற்போது எல்லா யூஸ்டு கார் ஷோரூமிலும் அதிகம் காண முடிகிறது. எனவே, சிறந்த சர்வீஸ் வசதி மற்றும் நியாயமான விலை கொண்ட யூஸ்டு கார் ஷோரூமை பார்த்து ஐ10 காரை வாங்கலாம்.

தற்போது 3 ஆண்டுகள் ஓடிய ஐ10 காரை ரூ.3 லட்சத்துக்கும் குறைவான விலையில் வாங்கலாம். பேரம் பேசினால் இன்னும் கூட விலை குறையலாம். எனவே, பட்ஜெட்டுக்கும் ஏற்றதாக இருக்கும். 1.1 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் கப்பா ஆகிய இரண்டு எஞ்சின் மாடல்களில் ஐ10 கிடைக்கிறது.

உங்களது பட்ஜெட் மற்றும் பயன்பாட்டை கருத்தில்க்கொண்டு ஐ10 காரை தேர்வு செய்து வாங்கலாம். யூஸ்டு காரின் விலையில் தற்போது 95 சதவீதம் வரை பைனான்ஸ் கிடைக்கிறது. இருப்பினும், முடிந்தவரை அதிக முன்பணம் செலுத்தி கடன் தொகையை குறைத்து கார் வாங்குவது சாலச் சிறந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 31, 2012, 12:07 [IST]
English summary
Due to the demand of diesel cars and car owners upgrading to higher models, petrol cars have become very cheap in the used car market. You could have a best buy now with the Hyundai i10 available below Rs 3 lakh in the used car market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+