விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

முன்பதிவு செய்த விமானத்தை தவற விடுதல் நிச்சயமாக எவர் ஒருவருக்கும் ஓர் மோசமான சூழலை உருவாக்கும்.

Recommended Video

Simple One Electric Scooter Tamil Review | 200+ கிலோ மீட்டர் ரேஞ்ச், விரைவான ஆக்ஸலரேஷன், கையாளுமை

ஒருவேளை அத்தகைய சூழலை சந்திக்க நேர்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

விமானத்தில் பயணிப்பது என்பது நம்மில் பலருக்கு மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். ஆனால் அது முதல் சில பயணங்களுக்கு மட்டுமே. முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்ய போகிறோம் என்றால், விமானம் புறப்படும் நேரத்திற்கு 2 - 3 மணிநேரங்களுக்கு முன்பே விமான நிலையத்தில் ஆஜாராகிவிடுவோம். அடுத்த முறை பயணங்களில் இந்த மணிநேரங்கள் சற்று குறையும்.

விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

அதுவே, வணிக விஷயமாகவோ அல்லது அலுவலக விஷயமாகவோ அவ்வப்போது விமானங்களில் பயணிப்பவர்களை பார்த்தீர்கள் என்றால், அவர்களில் சிலர் சரியாக விமானம் புறப்படும் நேரத்திற்கே விமான நிலையத்திற்குள் நுழைவர். அதன் பிறகு அரக்கப்பறக்க லக்கேஜை செக்-அப் செய்துக்கொண்டு, முன்பதிவை காட்டி போர்டிங் பாஸை பெற்றுக்கொண்டு கேட் பகுதிக்கு ஓடுவர்.

விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

அத்தகையவருள் ஒருவரா நீங்கள்? சில சமயங்களில், தவறான முன்பதிவு, விமான நிலையத்திற்கு வரும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளுதல் அல்லது விமானம் புறப்படும் நேரத்தை மறந்துவிடுதல் உள்ளிட்ட காரணங்களினால் முன்பதிவு செய்த விமானத்தை தவறவிட நேரலாம். அத்தகைய நேரங்களில் என்ன செய்வது? ஒன்று, டிக்கெட்டை முன்பதிவு செய்த இணையத்தள பக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.

விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

இது, இன்னும் விமான நிலையத்திற்கே செல்லவில்லை இன்னமும் விமான நிலையத்தை நோக்கிய பயணத்தில் தான் இருக்கிறோம் என்றால் நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாகும். ஏனெனில் முன்பதிவு செய்த நிறுவனத்தால் இதற்கான தீர்வை கூற இயலும். அல்லது முடிந்தவரையில் பேசி முன்பதிவை ரத்து செய்து, கட்டணத்தில் பாதியையாவது பெற முயற்சியுங்கள்.

விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

இவ்வாறு பேசி பார்ப்பதால் எல்லா நிறுவனங்களும் சமரசம் ஆகிவிடும் என்று உறுதியாக கூறிவிட முடியாது. இது விமான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நிறுவனங்களை பொறுத்தது. ஒருவேளை நீங்கள் விமான நிலையத்தின் நுழைவாயில் வரை வந்துவிட்டீர்கள் எனில், நிலையத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமோ அல்லது வாடிக்கையாளர் சேவை முகவரிடமோ பேசி பார்க்கலாம்.

விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

அல்லது உங்களால் முடிந்தால் (அந்த அளவிற்கு விஐபி ஆட்களை தெரிந்திருந்தால்) ஏர்லைன் நிறுவனத்தின் பணியாளரை நேரடியாகவோ அல்லது தொலைப்பேசியிலோ தொடர்பு கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்காக தான் விமானம் காத்துக்கொண்டிருக்கிறது, நீங்கள் வரிசையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள் எனில், உடனடியாக முன்பதிவு நிறுவனத்திற்கு போன் செய்து, தான் விமான நிலையத்திற்குள் இருப்பதை தெரிவித்துவிடுங்கள்.

விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

இதன் மூலமாக அபராதத்தை தவிர்ப்பது மட்டுமில்லாமல், உங்களது பயணம் ரத்து செய்யப்படுவதையும் தவிர்க்கலாம். இருப்பினும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டால் உடனே கோபப்பட்டு வாக்குவாதங்களில் ஈடுப்படாமல் அமைதியாக இருக்க முயற்சியுங்கள். ஏனெனில் இவ்வாறு அமைதி காப்பதன் மூலமாக உங்களது அபராதம் ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாம்.

விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

ஆகையால் விமானத்தை தவறவிட நேர்ந்தாலும் அந்த நேரத்திலும், முன்பதிவு நிறுவனத்துடனும் சரி, அல்லது வாடிக்கையாளர் சேவை முகவருடனும் சரி முடிந்தவரையில் எந்தவொரு பிரச்சனையையும் ஏற்படுத்தி கொள்ளாமல் இருப்பது நல்லது. டிக்கெட் முன்பதிவு செய்த நிறுவனத்தில் இருந்து போதிய பதில் கிடைக்கவில்லை என்றால், மனம் தளராமல் விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகுங்கள். எல்லா அதிகாரிகளும் கல் நெஞ்சக்காரர்களாக இருக்க மாட்டார்கள்.

விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

சிறிதளவிலான கூடுதல் கட்டணத்துடன் வேறொரு விமானத்தில் இருக்கையை முன்பதிவு செய்து தரலாம். ஆகையால் விமானத்தை தவறவிட நேர்ந்தால், அந்த நேரத்தில்தான் மன வலிமையுடன் நம்பிக்கையாக அடுத்தடுத்த வழிகளில் முயற்சி செய்து பார்க்க வேண்டும். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பயணிக்களுக்காக விமான முன்பதிவில் மாற்றங்களை செய்ய அதிகாரிகள் பலருக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்பதையும் இந்த இடத்தில் கூறிக்கொள்கிறோம்.

விமானத்தை தவறவிட நேர்ந்தால், ஏர்போர்டில் இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!! அபராதம் கூடினே போகும்!

இது இல்லாமல், சில சமயங்களில் உங்களது பைகள் விமானத்தில் ஏற்றப்பட்டிருக்கும், ஆனால் நீங்கள் இன்னமும் செக்-இன் -காக வரிசையில் நின்று கொண்டு விமானத்தை தவறவிடலாம். இத்தகைய சம்பவங்களில், ஒன்று உங்களது பொருட்கள் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தில் உங்களுக்காக காத்து கொண்டிருக்கும் அல்லது பாதுகாப்பு காரணங்களினால் மீண்டும் அதே விமானத்தில் திரும்ப எடுத்துவரப்படுமாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 22, 2022, 17:35 [IST]
English summary
If you miss your flight what to do next
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+