கார் வாங்குன புதுசுல கிடைச்ச மைலேஜ் இப்ப கிடைக்கலயா? இதான் அதுக்கு காரணம்!
கார் பயன்படுத்தும் பலருக்கு கார் வாங்கிய புதிதில் கிடைத்த மைலேஜ் தற்போது கிடைப்பதில்லை. இதனால் அதிகமாகச் செலவாகிறது எனப் பலர் புலம்பி வருகின்றனர். இது ஏன் ஏற்படுகிறது? இதற்கு யார் காரணம்? பழைய மைலேஜை மீண்டும் கொண்டுவருவது எப்படி? இது குறித்த விரிவான தெளிவான தகவல்களை இங்கே விளக்கமாகக் காணலாம் வாருங்கள்.
இன்று இந்திய மக்கள் பலர் கார் வாங்கிய பின் மிகப்பெரிய சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை மைலேஜ் தான். கார் வாங்கும் போது கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு மைலேஜ் கிடைக்கும் எனச் சொல்கிறது. ஆனால் அதை ஓட்டும் போது பெரும்பாலானோருக்கு அதை விடக் குறைவான மைலேஜ் தான் கிடைக்கும். சிலருக்கு காரை பயன்படுத்தி சில நாட்களில் கார் வாங்கிய புதிதில் கிடைத்த மைலேஜ் கிடைக்காது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது அதைத் தான் அலசி ஆராயப் போகிறோம்.

கார் வாங்கிய புதிதில் பலருக்கு அந்த கார் கொடுத்த மைலேஜ் சில ஆண்டுகள் அதைப் பயன்படுத்திய பின்பு கொடுக்கவில்லை என்றால் அதற்கு முழுமையான நாம் தான் பொறுப்பு அதைச் சரியாகப் பராமரிப்பு செய்ததது தான் ஒரே காரணமாக இருக்க முடியும். இப்படியாகக் காரை பயன்படுத்தும் பலர் பல நேரங்களில் பராமரிப்பு விஷயத்தில் அசால்டாக இருப்பது நாளடைவில் காரின் மைலேஜையே பாதித்து விடுகிறது. இப்படியா காரின் மைலேஜை நேரடியாகப் பாதிக்கும் விஷயங்களைப் பற்றிக் காணலாம்.
சர்வீஸ்
காரை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்ய வேண்டியது கட்டாயம், குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பு செய்யப்படவில்லை என்றால் அந்த வாகனத்தின் மைலேஜ் நிச்சயம் பாதிப்படையும், ஒரு வேலை நீங்கள் பயன்படுத்தி வரும் காரின் மைலேஜ் குறைவதாக நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் முதலில் காரை சரியான கால இடைவெளியில் சர்வீஸ் செய்துள்ளீர்கள் என யோசனை செய்யுங்கள் இல்லை என்றால் முதல் வேலையாகக் காரை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்று சர்வீஸ் செய்யுங்கள்.
டயர் பிரஷர்
என்னதான் காரை முறையான நேரத்தில் சர்வீஸ் செய்திருந்தாலும் அவர்களுக்கும் காரின் மைலேஜ் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் காரின் டயரில் உள்ள காற்று, கார் டயரில் உள்ள காற்றை ஒவ்வொரு 2 வாரங்களுக்கு ஒரு முறை செக் செய்து சரியான பிரஷரில் டயர் இருக்கிறதா என்பதைச் சோதனை செய்து கொள்ளுங்கள். காரின் டயர் பிரஷர் குறைவாக இருந்தால் காரின் மைலேஜ் நிச்சயம் பாதிக்கப்படும்.
டிரைவிங் முறை
கார் சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யப்பட்டிருந்தாலும், டயர் பிரஷர் எல்லாம் சரியாக இருந்தாலும் காரின் மைலேஜ் குறைகிறது என்றால் காரின் டிரைவிங் முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். காரை நீங்கள் வாங்கிய புதிதில் நீங்கள் எதற்காக எவ்வளவு கால இடைவெளியில் பயன்படுத்தினீர்கள், தற்போது எப்படிப் பயன்படுத்தி வருகிறீர்கள்.
எந்த வகையான சாலையில் பயணிக்கிறீர்கள் என்பதைப் பொருத்து கூட மைலேஜ் மாற்றம் பெறும் உதாரணமாகக் காரை ஆரம்பக் காலத்தில் ஹைவேயில் மட்டும் பயன்படுத்திவிட்டு தற்போது அதைப் பயன்பாட்டைச் சிட்டிக்குள் பயன்படுத்திய பயன்பாட்டுடன் ஒப்பிட்டால் காரின் மைலேஜ் குறைவாகத் தான் இருக்கும். அதனால் எதை எதனுடன் ஒப்பிடுகிறோம் என ஒரு புரிதலுடன் ஒப்பிடுங்கள்.
க்ரூஸ் கண்ட்ரோல்
உங்கள் காரில் க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷன் இருந்தால் அதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுங்கள். நீண்ட தூரம் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது க்ரூஸ் கண்ட்ரோலை பயன்படுத்துங்கள். அதன் மூலம் சீரான வேகத்தில் கார் பயணிக்கும், உங்களுக்கும் பயண அலுப்பு குறையும்.


Click it and Unblock the Notifications








