த்ரோட்டில் பிளேட் கிளீனிங் இவ்ளோ அவசியமா! ஏன் இது அவசியம்னு தெரியுமா? இதோ முழு அலசல்!

கார்களில் த்ரோட்டில் பிளேட் (Throttle Plate) ஒரு முக்கிய அங்கமாகும். இது எந்திரத்திற்கான காற்று உட்கொள்ளலை (Air Intake)-ஐ ஒழுங்குபடுத்துகிறது. மேலும், தேவைக்கேற்ப காற்று உட்கொள்ளலை நிர்வகித்து வாகனத்தின் செயல்திறனையும் அது அதிகரிக்க செய்கிறது. இத்தகைய மிக முக்கியமான பணி அதை விரைவில் பாதிப்படையச் செய்துவிடுகின்றது. அதாவது, விரைவிலேயே த்ரோட்டில் பிளேட் வெளிப்புற காற்றால் அழுக்கு மற்றும் தூசி படிவிற்கு ஆளாகிவிடுகின்றது. இதைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், தூசியும் - அழுக்கும் குவிந்து த்ரோட்டில் பிளேடின் இயக்கத்தை பாதிக்கச் செய்யும்.

இதன் விளைவாக வாகனத்தின் முடுக்கம் இல்லாமலே போககூட வாய்ப்புகள் உண்டு. மேலும், வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கும் அது சிக்கலை வழிவகுக்கும். இதனால்தான் த்ரோட்டில் பிளேட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இது ஒன்றை தவிர்க்கும்பட்சத்தில் பல்வேறு இயந்திர சிக்கல்களை நாம் சந்திக்க நேரிடும்.

Importance of throttle plate cleaning

இதன் வாயிலாக எஞ்சின் செயல்திறனைப் பராமரிக்கவும், எஞ்சினின் நீண்ட ஆயுட் காலத்தையும் உறுதி செய்ய முடியும். மேலும், சில த்ரோட்டில் பிளேட் கிளீனிங்கின் அவசியத்தை உணர்த்தக் கூடிய மற்ற விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

த்ரோட்டில் பிளேட் என்றால் என்ன? : த்ரோட்டில் பிளேட் என்பது வாகனத்தின் இயந்திரத்தின் முக்கிய பகுதியாகும். த்ரோட்டில் பாடிக்குள் அது நிலைநிறுத்தப்பட்டு இருக்கும். இது இயந்திரத்தின் காற்று உட்கொள்ளும் அமைப்பின் ஒரு பகுதியாகும். இது ஒரு தட்டையான, வட்ட வால்வு ஆகும். இது இயந்திரத்தின் எரிப்பு அறைக்குள் காற்றோட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது.

Throttle plate cleaning

ஆக்சலரேட்டரை முறுக்குவதன் மூலம் த்ரோட்டில் பிளேட் திறக்கிறது. அப்போது அதிகம் காற்று உள்ளே நுழையும். அதிகம் காற்று உள்ளே நுழைவதன் வாயிலாக எரிபொருள் எரிப்பு சிறப்பாக நடைபெறும். இது சீராக நடைபெற்றால் மட்டுமே வாகனத்தால் முழுமையான வேகத்தில் இயங்க முடியும். உகந்த ஆற்றல் வெளியீடே எரிபொருள் சிக்கனத்திற்கும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

த்ரோட்டில் பிளேட்டை சுத்தம் ஏன் அவசியம்: காற்றில் அதிகப்படியான தூசும், அழுக்கும் கலந்திருக்கும். இந்த காற்று அப்படியே த்ரோட்டில் வாயிலாக அப்படியே எந்திரத்திற்குள் நுழையும். முன்னதாக காற்று வடிகட்டி வாயிலாக இது ஃபில்டர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், முழுமையாக அது வடிகட்டப்படாது.

எனவே மிகவும் நுண்ணிய தூசி துகள்கள் எந்திரத்திற்குள் நுழைவதை நம்மால் தடுக்க முடியாது. இதன் எதிரொலியாக த்ரோட்டில் பிளேட்டில் அதிகம் மாசும், தூசியும் படர நேரிடுகின்றது. இதை சுத்தம் செய்யவில்லை என்றால் எஞ்சின் உராய்வு ஏற்பட்டு, செயல்பாடு மற்றும் ஆயுட்காலத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும். இதனால்தான் அதை சுத்தம் செய்வது மிக அவசியமாகப் பார்க்கப்படுகின்றது.

மோசமான முடுக்கம்: த்ரோட்டிலில் அதிகம் தூசியும், அழுக்கும் சேரும் எனில் ஆக்ஸிலரேட்டரை கடுமையாக அழுத்தினாலும் மோசமான முடுக்கமே கிடைக்கும். அதாவது, குறைவான வேகத்தையே வாகனம் வழங்கும். உங்கள் வாகனமும் குறைவான வேகத்தில் செல்லும் எனில் அதன் த்ரோட்டில் பிளேட்டை சுத்தமாக உள்ளதா என்பதை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அழுக்காக இருந்தால் அதை உடனடியாக மெக்கானிக்கின் உதவியுடன் சுத்தம் செய்வது நல்லது. இதை செய்யும் தவறும்பட்சத்தில் எஞ்சின் ஒரு நிலையான ஆர்பிஎம்-ஐ சீராக பராமரிக்க போராடலாம்.

மைலேஜ் அடிவாங்கும்: த்ரோட்டில் சுத்தமற்று காணப்படுவதன் இறுதி பின் விளைவாக மைலேஜ் அடிவாங்குதல் இருக்கும். குறிப்பாக, வழக்கமான மைலேஜிற்கு பதிலாக அது எரிபொருளை குடிக்க தொடங்கும். இதற்கு த்ரோட்டிலில் படர்ந்திருக்கும் அழுக்கால் காற்றோட்டம் குறைந்ததே முக்கிய காரணம் ஆகும். இதை சரி செய்யும்பட்சத்தில் வாகனத்தின் பழைய மைலேஜ் திறன் மீண்டும் திரும்பக் கூடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் பராமரிப்பில் மிக முக்கியமான ஒன்றாக த்ரோட்டில் கிளீனிங் இருக்கின்றது. இதை செய்வதன் வாயிலாக காரின் செயல்திறன் மற்றும் மைலேஜ் ஆகியவற்றை சீராக பராமரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே கார் பராமரிப்பில் இதற்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கிலேயே இந்த பதிவு இங்கு வழங்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 5, 2024, 11:58 [IST]
English summary
Importance of throttle plate cleaning for vehicle efficiency
மேலும்... #auto tips #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+