கர்ப்பிணி பெண்கள் கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் விதத்திலும், குடும்ப பாரத்தை பங்கிடும் வகையிலும் இன்று பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால், இன்றைய சூழலில் அவர்கள் பாதுகாப்பாக அலுவலகம் சென்று வருவதில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன.

எனவே, பல பெண்கள் அலுவலகம் செல்வதற்கு கார் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. யாரையும் சார்ந்திராமல், பாதுகாப்பாக சென்று வருவதற்காக பலர் சொந்தமாகவே கார் ஓட்டிச் செல்கின்றனர். இந்த நிலையில், தற்போது கார் வாங்கும் பல பெண்கள் இளைய மற்றும் நடுத்தர வயதுடையவர்களாக இருக்கின்றனர்.

தற்போதைய பணிச் சூழலில் கர்ப்பிணியான பின்பும் தவிர்க்க முடியாத சூழலினால் கார் ஓட்டிச் செல்லும் நிலையில் இருக்கின்றனர். பொதுவாக, கர்ப்ப காலத்தில் பெண்கள் கார் ஓட்டுவதை அறவே தவிர்ப்பது நல்லது. இருப்பினும், சிலர் அவசரம் மற்றும் வேலை பளுவினால் அலுவலகத்துக்கு செல்வதற்காக கார் ஓட்டும் நிலை ஏற்படுகிறது. சாதாரண நேரத்தைவிட கர்ப்ப காலத்தில் கார் ஓட்டும் பெண்களுக்கு அதிக ஆபத்து இருக்கிறது.

 நல்ல சாலை

நல்ல சாலை

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு கார் ஓட்டுவதை தவிர்த்தல் நலம். முதல் மூன்று மாதங்கள் மட்டும் என்றில்லை, மீதமுள்ள காலத்திலும் தேவையேற்பட்டால் ஒழிய ஸ்டீயரிங் வீலை தொடக்கூடாது. அப்படி செல்ல வேண்டிய அவசியம் வந்தாலும், வீட்டிலிருந்து கிளம்பும் முன் அகலமான, மேடு பள்ளங்கள் குறைவான சாலையை தேர்ந்தெடுத்து செல்லுதல் அவசியம்.

பாதுகாப்பான டிரைவிங்

பாதுகாப்பான டிரைவிங்

காரை மெதுவாக செலுத்த வேண்டும். முன்புறம் செல்லும் வாகனத்துடன் மிக நெருக்கமாக செல்ல வேண்டாம். கொஞ்சம் இடைவெளி விட்டு செல்க. மொபைல்போன் பேசுதலையும் தவிர்க்க வேண்டும். முழு கவனத்தையும் சாலையில் செலுத்துங்கள்.

சீட் பெல்ட்

சீட் பெல்ட்

சீட் பெல்ட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். வயிற்றுப் பகுதியின் குறுக்கே இல்லாமல் மார்பகங்களுக்கு இடையில் சீட் பெல்ட்டை போட்டுக் கொள்ள வேண்டும். இதேபோன்று, மற்றொரு பெல்ட் வயிற்றுப் பகுதியின் கீழே வருமாறு அணிந்துகொண்டு சவுகரியமாக இருக்கிறதா என்று சரி செய்து கொள்ள வேண்டும்.

சீட் அட்ஜெஸ்ட்மென்ட்

சீட் அட்ஜெஸ்ட்மென்ட்

இருக்கையை சவுகரியமாக அட்ஜெஸ்ட் செய்துகொண்டு காரை எடுங்கள்.

கொஞ்சம் பின்னால்

கொஞ்சம் பின்னால்

வயிற்றுப் பகுதிக்கு சிரமமில்லாதவாறு இருக்கையை சற்று பின்னால் நகர்த்தி கொள்வது அவசியம். ஸ்டீயரிங் வீலை விட்டு 25 செமீ., இடைவெளி விட்டு அமர்ந்து ஓட்டும்போது சவுகரியமாக இருக்கும்.

ஹேண்ட்பிரேக்கை பயன்படுத்துங்கள்

ஹேண்ட்பிரேக்கை பயன்படுத்துங்கள்

சிக்னல்களில் நிற்கும்போது ஹேண்ட்பிரேக்கை பயன்படுத்தி, கால்களுக்கு சற்று ஓய்வு கொடுங்கள். மேலும், சிக்னலிருந்து கிளம்பும்போது பதட்டப்படாமல் காரை மெதுவாக நகர்த்துங்கள்.

இரவு பயணம் வேண்டாம்

இரவு பயணம் வேண்டாம்

இரவில் பயணம் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். அலுவலகத்திலிருந்து கொஞ்சம் முன்னதாகவே புறப்பட்டு இருளுக்கு முன்னர் வீடு வந்து சேர்வது நலம். இரவில் மேடுபள்ளங்கள், வேகத்தடைகள், ஹெட்லைட் ஒளி என்பதோடு, அவசர உதவி கிடைப்பதிலும் இடைஞ்சல்கள் உண்டு.

நல்லா சாப்பிடுங்க

நல்லா சாப்பிடுங்க

காரில் செல்வதற்கு முன் நன்றாக சாப்பிட்டு செல்வது நலம். மேலும், எளிதாக செரிக்கும் வகையிலான உணவுகளை சாப்பிட்டுச் செல்லுங்கள். கையில் இதேபோன்று தின்பண்டங்களை எடுத்துச் செல்வதும் அவசியம். தண்ணீர் பாட்டில், பழங்களையும் கையில் வைத்துக் கொள்வது நல்லது. இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவும்.

இதெல்லாம் அவசியம்

இதெல்லாம் அவசியம்

காரில் தனியாக செல்லும்போது அதிகப்படியான துணிகள், தலையணை, முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல்போன் ஆகியவை கூடவே இருக்க வேண்டும்.

 பிரேக் எடுத்துக்குங்க

பிரேக் எடுத்துக்குங்க

தொடர்ந்து காரை ஓட்டுவதை தவிர்த்து சாலையின் ஓரத்தில் 5 அல்லது 10 நிமிடங்கள் நிறுத்தி சிறு பிரேக் எடுத்துக் கொண்டு செல்வதும் நலம்.

அறவே வேண்டாம்

அறவே வேண்டாம்

8 மாதங்கள் நிறைவடைந்தவுடன் கார் டிரைவிங்கை அறவே விட்டுவிட வேண்டும்.

டிரைவிங் வேண்டாமே

டிரைவிங் வேண்டாமே

இது தவிர்க்க முடியாமல் கார் ஓட்டும் பெண்களுக்காகத்தான். கர்ப்பிணி பெண்கள் கார் ஓட்டுவதை முழுமையாக தவிர்த்தல் நலம். குறிப்பாக, நெடிய தூர பயணங்கள் கூடவே கூடாது. சில வேளை கார் ஓட்டும்போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அதிர்வுகளால் அபார்ஷன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும், கார் ஓட்டிய பின் சிறு பிரச்னைகள் இருப்பதாக உணர்ந்தால் உடனடிாயாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது உத்தமம்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

கர்ப்பிணி மனைவி, மகளை காரில் அனுப்பிவிட்டு அரைகுறை மனதோடு அலுவலகம் செல்பவர்களுக்கும், தவிர்க்க முடியாமலும், அவசரத்திற்காகவும் கார் ஓட்ட வேண்டிய அவசியம் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இந்த செய்தித் தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2013, 12:42 [IST]
English summary
Pregnancy is always a great thing for every women, but it's also very important to take some precaution during Pregnancy. Here we are giving some important tips for pregnant women drivers. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+