கூலிங் க்ளாஸ் அணிந்து கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டால் கண்கள் பாதிப்பு ஏற்படுமா?
கார் ஓட்டும்போது கூலிங் க்ளாஸ் அணிவது நல்லதா அல்லது விபத்தின்போது அதனால் விபரீதங்கள் ஏற்படுமா என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
கூலிங் க்ளாஸ் அணிந்து கார் மற்றும் பைக் ஓட்டுவது பலருக்கும் வழக்கமாக உள்ளது. கார், பைக் ஓட்டும் பலரும் இதனை ஸ்டைலுக்காக அணிந்து செல்வதாக சிலர் கருதுகின்றனர். மேலும், விபத்து ஏற்படும்போது கூலிங் க்ளாஸ் கண்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருப்பதும் பரவலாக காண முடிகிறது.

ஆனால், கூலிங் க்ளாஸ் அணிந்து கார், பைக் ஓட்டுவது ஸ்டைலுக்கான என்பதைவிட, அதில் பல பாதுகாப்பு விஷயங்கள். பைக் ஓட்டுபவர்களுக்கு தூசி, பூச்சிகளிலிருந்து கண்களை பாதுகாக்கும் கவசமாக கூலிங் க்ளாஸ் அல்லது பகலிரவு கண்ணாடிகள் பயன்படுகின்றன.

மேலும், கார் ஓட்டும்போது சூரிய ஒளி, பிரகாசமான விளக்குகளின் ஒளி காரணமாக, கண்களில் ஏற்படும் கூச்சத்தை தவிர்க்கும் பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல், கார் ஜன்னல்களை திறந்து வைத்து ஓட்டும்போது சில வேளைகளில் சூறாவளி காற்று காரணமாக தூசி, தும்பட்டிகள் கண்களில் விழுந்துவிடும் ஆபத்தையும் தவிர்க்கின்றன.

எல்லாவற்றையும் விட தரமான கண் ஆடிகளை பயன்படுத்தும்போது கண்களின் சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களால் கண்களின் கருவிழி பகுதியில் ஏற்படும் பாதிப்புகளையும் தவிர்க்கும் வாய்ப்புள்ளது. வெளியில் ஏற்படும் அதிகப்படியான வெளிச்ச மாற்றம் காரணமாக கண்களில் பாதிப்புகள் ஏற்படுவதையும் தவிர்க்கும்.

கூலிங் க்ளாஸ் வாங்கும்போது புற ஊதாக்கதிர் வீச்சு பாதிப்பு தடுக்கும் அம்சம் கொண்டவற்றை பார்த்து தேர்வு செய்து வாங்க வேண்டும். குறிப்பாக, புற ஊதாக்கதிர்கள் ஏ மற்றும் பி வகை கதிர்வீச்சை தடுக்கும் அம்சம் கொண்டதாக தேர்வு செய்ய வேண்டும். இதுபோன்ற கூலிங் க்ளாஸ்களில் UV-40 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
Recommended Video


இவை பிரதிபலிப்புகளையும் தடுக்கும் அம்சம் கொண்டது. கூலிங் க்ளாஸ்களின் வண்ணமும் முக்கியம். சாம்பல் நிற பூச்சு கொண்ட கூலிங் க்ளாஸ்கள் பிரகாசமான ஒளியை தடுப்பதுடன், நிறத்தை அப்படியே காட்டும் தன்மை கொண்டது என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.
Trending On Drivespark Tamil:

நீல வண்ண கண்ணாடிகள் கார் மற்றும் பைக் ஓட்டும்போது அணிவதை தவிர்க்க வேண்டும். மஞ்சள் வண்ண பூச்சுடைய கண்ணாடிகள் துல்லியமாக இருந்தாலும், வெளியில் பொருட்களின் வண்ணத்தை அப்படியே காட்டாது.

எதிரொலிப்பை தடுக்கும் அம்சம் கொண்ட கண்ணாடிகளை இரவு நேரத்திலும் பயன்படுத்த முடியும். மேலும், கண்ணாடியை விட பிளாஸ்டிக் ஆடிகள் எடை குறைவாகவும், நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.

கூலிங் க்ளாஸ் அணிந்து கார் ஓட்டிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டால், கண்களில் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தும் தவறானது. விபத்து ஏற்படும் தன்மையை பொறுத்தே காயங்கள் ஏற்படும். சிலருக்கு விண்ட்ஷீல்டு உடைந்து கண்ணாடி துகள்கள் சிதறும்போது ஓட்டுனரின் கண்களை பாதுகாக்கிறது.

ஏர்பேக் விரிவடையும்போது சரியாக ஓட்டுனர் அமர்ந்திருந்தால், கண்ணாடி அணிந்திருந்தாலும், கண்ணுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதே இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள் சொல்லும் முடிவாக இருக்கிறது.

கண்களை பாதுகாக்க கூலிங் க்ளாஸ் பயன்படுத்துவது நல்லது என்று சொல்லியிருக்கிறோம். ஆனால், அவை தரமானவையாக இருத்தல் மிக அவசியம். தரமற்ற கண்ணாடிகள் கண்களை பாதுகாப்பதைவிட்டு, கருவிழியில் பாதிப்புகளை ஏற்படுத்தும். கண் பார்வை மங்கி போதல், கண் புரை உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

கார் ஓட்டுபவர்கள் கூலிங் க்ளாஸ் வாங்கும்போது கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின்னர் அணிந்து கொள்வது சாலச் சிறந்தது.
Trending On Drivespark Tamil:

பெரும்பாலும் விமானத்தை இயக்கும் பைலட்டுகள் கூலிங் க்ளாஸ் அணிந்திருப்பதை பார்த்திருக்கிறோம். பைலட்டுகளுக்கு கூலிங் க்ளாஸ் என்பது ட்ரேட் மார்க்ப சின்னம்போல் பாவிக்கப்படுகிறது. பறந்து கொண்டிருக்கும்போது, சூரிய ஒளி, இரவு நேரத்தில் பிரகாசமான விளக்குகள் மற்றும் பாதிப்பு தரும் கதிர்வீச்சுகளிலிருந்து கண்களை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அணிந்து செல்கின்றனர் என்பது கொசுறுத் தகவல்!


Click it and Unblock the Notifications








