இதெல்லாம் பண்ணா ஒரு பைசா கூட இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்காது! கவனமா இருங்க மக்களே!

விபத்தில் சிக்கும் வாகனங்களுக்கு வாகன உரிமையாளர் பெற்ற இன்சூரன்ஸ் மூலம் கிளைம் கிடைக்கும். இதனால் வாகன உரிமையாளர் பொருளாதார நஷ்டம் இல்லாமல் அந்த வாகனத்தை சரி செய்து கொள்ள முடியும். இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் இந்த க்ளைம் கிடைப்பதில் பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது. பலருக்கும் இது குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். இன்சூரன்ஸ் கிளைம் பெறுவதற்கான விதிமுறைகள் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

புதிதாக வாகனம் வாங்கும் போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல்வேறு விதமான இன்சூரன்ஸ் திட்டங்களை சொல்லி குறிப்பிட்ட இன்சூரன்ஸ் எடுத்தால் வாகனம் விபத்தில் சிக்கும் போது அதிகமான கிளைம் கிடைக்கும் என பல்வேறு விதமான வார்த்தைகளை பேசி இன்சூரன்ஸ் எடுக்க வைப்பார்கள். ஆனால் வாகனம் விபத்தில் சிக்கி கிளைம் செல்லும் போது பல கிளைம்கள் ரிஜெக்ட் செய்யப்படுகின்றன.

insurance claim

இப்படி இன்சூரன்ஸ் கிளைம் ரிஜெக்ட் ஆவதற்கு இன்சூரன்ஸ் பெற்றவர்களுக்கு இது குறித்த சரியான வழிமுறை தெரியாததே மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இன்சூரன்ஸ் பெற சில முக்கியமான விதிமுறைகளையும், வழிகளையும் நாம் பின்பற்ற வேண்டும். இதை பின்பற்றினாலே இன்சூரன்ஸ் கிளைம் எந்த நேரத்திலும் ரிஜெக்ட் ஆகாமல் இருக்கும். அதே நேரம் அதிக அளவிலான பணமும் இன்சூரன்ஸ் கிளைம் மூலம் கிடைக்கும்.

முதலில் பல வாடிக்கையாளர்கள் செய்யும் தவறு இன்சூரன்ஸ் எடுக்கும் போது அது என்ன மாதிரியான சேவைகளை எல்லாம் வழங்குகிறது என்பதை தெரியாமல் எடுப்பது தான். அதனால் இன்சூரன்ஸ் எடுக்கும் போதே தெளிவாக இன்சூரன்ஸில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் தவறாகும் இதெல்லாம் தவறாகாது என தெளிவான புரிதலை கொண்டிருக்க வேண்டும்.

insurance claim

ஒவ்வொரு இன்சூரன்ஸ் கம்பெனியும் ஒவ்வொரு மாதிரியான விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதனால் நீங்கள் இன்சூரன்ஸ் எடுக்கும் போது இந்த விதிமுறைகள் என்னென்ன என்பதையும் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக என்னென்ன மாதிரியான பாதிப்புகளுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற விபரத்தையும் நீங்கள் தெளிவான புரிதலோடு தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்சூரன்ஸ் பாலிசி வழங்கும்போது சொல்லப்பட்ட விதிமுறைகளின் கீழ் மட்டுமே இன்சூரன்ஸ் கிளைம் பெற முடியும். பாலிசியில் இல்லாத விஷயங்களுக்கு கிளைம் பெற முடியாது. அதேபோல சரியான நேரத்தில் இன்சூரன்ஸ் கிளைம்க்கு விண்ணப்பிக்க வேண்டியதும் அவசியமாகிறது. வாகனம் விபத்தில் சிக்கி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் கிளைம் செய்ய விண்ணப்பித்தால் அதன் காரணமாக கூட ரிஜெக்டாக வாய்ப்பு இருக்கிறது.

insurance claim

அடுத்ததாக இன்சூரன்ஸ் கிளைம் ரிஜெக்டாக மிகப்பெரிய காரணம் தவறான தகவல்கள் மற்றும் சில முக்கியமான தகவல்களை வழங்காமல் இருப்பதும் இன்சூரன்ஸ் கிளைம் ரிஜெக்டாவதற்கு காரணமாக இருக்கிறது. வாகனம் விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தெளிவான தகவல்களும் விபத்தில் விபத்து ஏற்படுத்திய நபர்கள் குறித்த தெளிவான தகவல்களும் இடம் பெற்று இருக்க வேண்டும். துல்லியமான தகவல் இருந்தால் விரைவாக கிடைக்கும்.

மது போதையில் வாகனம் ஓட்டியவருக்கு கண்டிப்பாக இன்சுரன்ஸ் கிளைம் கிடைக்காது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மது போதை, ட்ரக்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துக்களால் ஒருவர் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கினால் அவருக்கு எந்தவிதமான இன்சூரன்ஸ் பணமும் கிடைக்காது. இது மட்டுமல்லாமல் இதை செய்பவருக்கு அரசு அபராதமும் விதிக்கும்.

அதேபோல இன்று வாகனங்களை பல இளைஞர்கள் மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சாலையில் வாகனம் செல்லும் போது மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என சட்ட விதிமுறையை மீறி பல்வேறு மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளன. இப்படியாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அந்த வாகனத்திற்கும் கிளைம் கிடைக்காது.

அதேபோல தவறான பயன்பாட்டிற்காக வாகனங்கள் பயன்படுத்தும் போது விபத்தில் சிக்கினாலும் அதற்கு கிளைம் கிடைக்காது. உதாரணமாக சொந்த பயன்பாட்டிற்காக காரை வாங்கி அதில் டிராவல்ஸ் நடத்தி வந்தால் டிராவல்ஸ் நடத்தி வரும் போது அந்த வாகனம் விபத்தில் சிக்கினால் அதை காரணமாக கூறியும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்களுக்கு கிளைம் தராமல் ரிஜெக்ட் செய்ய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனம் வாங்கும் பலர் இன்சூரன்ஸ் எடுக்கும் போது அதை சரியாக படிக்காமல் அது குறித்து தெளிவான புரிதல் இல்லாமல் இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். இதனால் அவர்கள் கிளைம் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை அனுபவிக்கிறார்கள். இதனால் நீங்கள் வாகனம் ஆகும்போது இன்சூரன்ஸ் எடுத்தால் நிச்சயம் அது குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொண்டு இன்சூரன்ஸ் எடுப்பது நல்லது.

More from DriveSpark

Article Published On: Friday, May 17, 2024, 7:00 [IST]
English summary
Insurance claim tips avoid car insurance rejection
மேலும்... #எப்படி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X