அடிக்கடி காரை கழுவினால், காரின் கலர் மங்கிப்போகுமா? உண்மை என்ன?
வாகனப் பெயிண்ட் மீது அடிக்கடி தண்ணீர் ஊற்றி கழுவுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து கார் ஆர்வலர்கள் அடிக்கடி விவாதிக்கின்றனர். வழக்கமான சுத்தம் செய்வது வாகனத்தின் சேதத்திற்கு வழிவகுக்கும் என்பது பற்றிய பல குழப்பங்கள் இருக்கிறது. இதற்கு பின்னால் பல உண்மைகளும் பல்வேறு விதமான பொய்களும் அடங்கியுள்ளது. பலர் இது குறித்து பல்வேறு விதமான கருத்துக்கை தெரிவித்து வருகிறார்கள். உண்மையில் காரை அடிக்கடி தண்ணீர் ஊற்றி கழுவினால் காரின் நிறம் மங்கும் வாய்ப்புள்ளதா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நவீன கார் பெயிண்ட் தன்னை தானே மீட்டுக்கொள்ளும் தன்மை கொண்டது. உற்பத்தியாளர்கள் வாகன பெயிண்டின் ஆயுளை அதிகம் செய்ய மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, கார்களில் ஒரு கிளியர் கோட் லேயர் இருக்கும், இது பெயிண்ட் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்த லேயர் வழக்கமான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வதை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு கட்டுக்கதை என்னவென்றால், அடிக்கடி தண்ணீர் ஊற்றி வாகனத்தை கழுவுவது இந்த பாதுகாப்பு லேயரை அகற்றும் என கூறுகிறார்கள். இது உண்மையில்லை. சரியான தயாரிப்புகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி வாகனத்தை கழுவுவதன் மூலம் வாகன கலரை நீண்ட நாட்களுக்கு பராமரிக்க முடியும். கார் கழுவுவதற்காக பிரத்தியேக சோப்புகளைப் பயன்படுத்துவது மற்றும் கடுமையான இரசாயனங்களைத் தவிர்ப்பது மூலம் காரை நீண்ட காலம் கலர் மங்காமல் வைக்க முடியும்.
மைக்ரோஃபைபர் துணியால் கார்களை துடைப்பது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பொருட்கள் காரில் ஏற்படும் கீறல்களைத் தடுக்கின்றன. மென்மையான துணிகளைப் பயன்படுத்தினால் காரை துடைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். அதே நேரம் நுண்ணிய கீறல்களை ஏற்படுத்தும் பாலிஸ்டர் மற்றும் காட்டன் துணிகளை பயன்படுத்துவதைத் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

நீர் புள்ளிகளைத் தடுக்க சரியாக காரை துடைத்தல் முக்கியமானது. அப்படி துடைக்கும் போது ஏற்படும் கோடுகளைத் தவிர்க்க சுத்தமான, மென்மையான துணிகள் அல்லது ஏர் டிரையர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். தண்ணீரை துடைக்காமல் காற்றில் உலர விடுவது, வாகனத்தின் மேற்பரப்பில் தண்ணீரில் உள்ள கெமிக்கல் படிமங்களை விட்டுவிடும். இது புள்ளிகளை ஏற்படுத்தும்.
உங்கள் காரை வேக்ஸிங் கூடுதல் பாதுகாப்பை சேர்க்கும். இது காரின் பளபளப்பை பராமரிக்க உதவுகிறது, மற்றும் அசுத்தங்களுக்கு எதிராக ஒரு கவசம் போல செயல்படுகிறது. வழக்கமான வேக்ஸிங் செய்வது நீங்கள் அடிக்கடி காரை கழுவும் போது உங்களுக்கு நல்ல ரிசல்டை ஏற்படுத்தித்தரும்.

பறவையின் எச்சம், மரத்திலிருந்து விழும் குப்பைகள், சகதிகள், காற்றில் பறக்கும் மாசு மற்றும் தூசு போன்ற சுற்றுச்சூழல் கூறுகள் காரின் கலருக்கு தீங்கு விளைவிக்கும். வழக்கமான இடைவெளிகளில் காரை கழுவுதல் இந்த அசுத்தங்கள் வாகனத்தின் கலரை சேதப்படுத்தும் முன் அகற்ற உதவுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், உங்கள் காரைக் கழுவுவதை, சரியாகச் செய்தால் பெயிண்ட்டை அடிக்கடி சேதப்படுத்தாது. சரியான தயாரிப்புகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தினால் அது உங்கள் வாகனம் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது. வழக்கமான பராமரிப்பு காரின் தோற்றத்தையும் மதிப்பையும் பாதுகாக்க தான் உதவுகிறது.
பலர் சொல்லும் படி அடிக்கடி காரை சுத்தம் செய்தால் காரின் கலர் பாதிக்கும் என்பது புரளி தான். ஆனால் காரை சுத்தம் செய்ய சரியான தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். நாம் வீட்டில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் சோப்புகளை பயன்படுத்து, நாம் பயன்படுத்தும் ஷாம்புகளை பயன்படுத்துவது கார் கலர் சேதமாக வாய்ப்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனால் நீங்கள் உங்கள் வாகனத்தை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது தான். சொல்லப்போனால் நீங்கள் அடிக்கடி காரை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் தினந்தோறும் கூட சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்யும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









