மாஞ்சா நூல் வடிவில் வரும் எமன்: மோட்டார்சைக்கிளில் செல்பவர்களே உஷார்

கோடை காலம் துவங்கியவுடன் சென்னையில் பட்டம் விடும் விளையாட்டுகள் ஆங்காங்கே களைகட்டியுள்ளன. எனவே, மோட்டார்சைக்கிளில் செல்பவர்கள் மிகவும் உஷாராக செல்ல வேண்டியது அவசியம்.

ஒரு சிலருக்கு சந்தோஷத்தை கொடுக்கும் இந்த பட்டம் விடும் விளையாட்டு மோட்டார்சைக்கிளில் செல்லும் பலரின் உயிருடனும், அவர்கள் குடும்பத்தின் எதிர்காலத்துடனும் விளையாடி விடுகிறது. சென்னையில் மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். சிலர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன் மெரீனா கடற்கரைக்கு பைக்கில் பெற்றோருடன் சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு பலியான சம்பவம் நெஞ்சை உலுக்கியது. ஒன்று அறியாத அந்த அப்பாவி பிஞ்சு தங்கள் கண்ணெதிரே துடிதுடித்து இறந்ததை பார்த்த பெற்றோரின் மனது என்ன பாடுபட்டிருக்கும்.

இதுபோன்ற சம்பவங்களால் சென்னையில் மோட்டார்சைக்கிளில் செல்பவர்களுக்கு பட்டம் விடும் விளையாட்டு என்றால் பெரும் அலர்ஜியாக இருக்கிறது. குறிப்பாக, வடசென்னை பகுதியில் பட்டம் விடும் விளையாட்டு வழக்கம்போல் அதிகரித்துள்ளது.

சிந்தாதிரி பேட்டை, சவுகார்பேட்டை, வண்ணாரப் பேட்டை ஆகிய பகுதியில் பட்டம் விடுவதற்கு பயன்படும் மாஞ்சா நூல் தயாரிப்பதையே 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாக கொண்டுள்ளனர்.

போட்டிகளில் பட்டம் விடும் கயிறை அறுபடாமல் இருப்பதற்காக நூலை உறுதியாக்க வேண்டுமென்பதற்காக பல நச்சுப் பொருட்களை கொண்டு பட்டம் விடும் மாஞ்சா நூலை தயாரிக்கப்படுகிறது. அரோட்டா மாவை நன்றாக காய்ச்சி அதில் ட்யூப்லைட், கண்ணாடிகளை பொடியாக்கி அதில் கலக்குகின்றனர்.

இந்த கலவையுடன் வஜ்ரம், மயில்துத்தம், சப்பாத்திக் கள்ளி ஆகியவற்றின் சாறுகளை கலக்கி நூலின் மது தடவி மாஞ்சா நூல் தயாரிக்கின்றனர். இந்த நச்சுக் கலவையால்தான் மாஞ்சா கயிறு அறுத்தவரின் உடலில் விஷம் பரவி உயிரை காவு வாங்குகிறது.

சென்னையில் இந்த விளையாட்டுக்கு தடை விதித்திருந்தாலும் சென்னையில் ஆங்காங்கே தற்போது பட்டம் விடும் போட்டிகள் நடந்து வருகின்றன. மாஞ்சா நூல் விற்பவருக்கும், பட்டம் விடுபவருக்கும் ரூ.500 அபராதம் அல்லது 6 மாத சிறை என்று தண்டனைகள் இருந்தாலும் இந்த விஷயத்தில் போலீசார் மேலும் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சென்னைவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் தேவையின்றி ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கலாம். எது எப்படி இருந்தாலும் மோட்டார்சைக்கிளில் செல்லும்போது மிதமான வேகத்தில் கவனமாக செல்ல வேண்டிய தருணம் இது.

எங்களது ஃபேஸ்புக் ஃபேன் பக்கத்தில் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்

More from DriveSpark

Article Published On: Thursday, March 29, 2012, 10:18 [IST]
English summary
Chennai have been witnessing many deaths with the sharp 'manja' string used for flying kites causing fatal injuries. With the summer being a kite flying season, two-wheeler riders are advised to be very careful to not get injured while passing through such areas.
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+