தரையிலிருந்து உதவி கோருபவர்கள் ஹெலிகாப்டருக்கு காட்ட வேண்டிய குறியீடுகள்!

By Saravana

சென்னையின், பல பகுதிகள் மழை வெள்ளத்தின் கோரப் பிடியிலிருந்து வேகமாக மீண்டு வருவது சற்று ஆறுதலான விஷயமாகியிருக்கிறது. இருப்பினும், புறநகரின் பல பகுதிகள் இன்னமும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், வீடுகளில் சிக்கியவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவிப்பவர்களை, ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், தரையிலிருந்து உதவி கோருபவர்கள், ஹெலிகாப்டரில் வரும் மீட்புப் படையினருக்கு சில குறியீடுகள் மூலமாக எளிதாக உதவி குறித்த தகவலை தெரிவிக்க இயலும். அந்த குறியீடுகள் பற்றியும், அதற்கான சிறிய விளக்கங்களையும் தரையிலிருந்து மீட்புப் பணி மேற்கொள்பவர்கள் தெரிந்து வைத்திருந்தால், எளிதாக உதவ முடியும். அதுபற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 முக்கிய குறியீடுகள்

முக்கிய குறியீடுகள்

மொத்தம் 5 குறியீடுகள் ஹெலிகாப்டர் மீட்புப் பணிகளின்போது பயன்படுத்தப்படுகிறது. அவற்றிற்கான விளக்கங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

மீட்பு உதவி

மீட்பு உதவி

படத்தில் உள்ளது போல ஆங்கில எழுத்தான V வடிவிலான குறியீட்டை கீழே இருந்து காண்பித்தால், மீட்பு உதவி தேவைப்படுகிறது என்று அர்த்தம்.

அவசர மருத்துவ உதவி

அவசர மருத்துவ உதவி

ஆங்கில எழுத்தான X என்ற ஆங்கில எழுத்தை பயன்படுத்தினால், தரையிலிப்பவர்களுக்கு காயம் அல்லது அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதை குறிக்கிறது.

புரியவில்லை

புரியவில்லை

ஹெலிகாப்டரில் இருக்கும் மீட்புப் படையினர் சைகை மூலமாக கேட்கும் கேள்விகளுக்கு புரியவில்லை என்றால், ஆங்கில எழுத்தான N வடிவிலான குறியீட்டை காண்பிக்கலாம்.

புரிந்துகொண்டோம்...

புரிந்துகொண்டோம்...

ஆங்கில எழுத்தான Y வடிவில் எழுதி காண்பித்தால், மீட்புப் படையினரின் கேள்வியை புரிந்து கொண்டோம் என்று பதிலளிப்பதாக அர்த்தம்.

வழிகாட்டுதல்...

வழிகாட்டுதல்...

கடைசி முக்கிய குறியீடு, உதவி அல்லது மீட்புக்கான இடத்தை அம்புகுறி குறியீடு மூலம் மேலே இருப்பவர்களுக்கு காட்டுவதேயாகும். இதன்மூலம், எந்த திசையில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதையும், அங்கு செல்வதற்கான திசையையும் இந்த அம்புகுறி மூலமாக காட்ட முடியும்.

உணவு பொருட்கள் தேவை

உணவு பொருட்கள் தேவை

உணவு பொருட்கள் தேவைக்கு இரண்டு கைகளையும் அசைத்து காட்டினால் போதும். ஹெலிகாப்டரில் வருபவர்கள் புரிந்து கொள்வார்கள்.

 குறியீடுகளை காட்டும் வழிமுறைகள்

குறியீடுகளை காட்டும் வழிமுறைகள்

மீட்புப் பணிக்கு வரும் ஹெலிகாப்டருக்கு மரங்கள் அல்லது மறைவான இல்லாத இடங்கள், வெட்ட வெளியிலிருந்து குறியீடுகளை காட்டினால் உடனடியாக மீட்புப் பணிகளை செய்ய இயலும். வீட்டு மொட்டை மாடியிலிருந்து குறியீடு காட்டினால் நலம் தரும்.

 தன் கையே தனக்கு உதவி..

தன் கையே தனக்கு உதவி..

அட்டை அல்லது காகிதங்கள் எதுவும் இல்லை. எழுதுவதற்கும் ஒன்றுமில்லை என்பவர்கள், முந்தைய ஸ்லைடுகளில் கண்ட குறியீடுகளை கைகள் மூலமாகவே சைகையை காட்டி உணரச் செய்யலாம். இதுதான் கடைசி ஆயுதம்.

Via - Nambikai Raj, Facebook Post

More from DriveSpark

Article Published On: Friday, December 4, 2015, 11:00 [IST]
English summary
Here are five important ground-to-air emergency code symbols and their meanings.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+