போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத விபரம்!
போக்குவரத்து விதிமீறல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இதனால், விபத்துக்களும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொபைல்போனில் பேசிக்கொண்டு வண்டி ஓட்டுபவர்களாலும், சாலையை கடப்பவர்களாலும் அதிக விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன.
இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்து விதிமீறல்களுக்கான விதிகளை சற்றே கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும் பின்பற்றப்படும் திருத்தப்பட்ட பொதுவான போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான நடைமுறையில் உள்ள அபாரத விபரங்களை இங்கே காணலாம்.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அபராதமாக ரூ.300 விதிக்கப்படும்.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ.300.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
முறையான ஆவணங்கள் இல்லாவிட்டால் ரூ.100.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
இருசக்கர வாகனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவரை பின்புறத்தில் ஏற்றினால் ரூ.100.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
போக்குவரத்துக்கு தடங்கல் ஏற்படுத்தினால் ரூ.100.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தினால் ரூ.100.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
தவறான பாதையில் போக்குவரத்து சிக்னலை கடக்க முயன்றால் ரூ.100

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றால் ரூ.100.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
மியூசிக்கல் ஹாரனை ஒலித்துக் கொண்டே தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.500

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
டிரைவிங்கின்போது மொபைல்போனில் பேசினால் ரூ.100
(டிரைவருக்கு மட்டுமில்லை, ரோட்ல குறுக்கே வர்றவங்களுக்கும்...5000 ரூபாய் போடுங்க... புண்ணியமா போகும்)

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
ஒரு கையால் வாகனத்தை தாறுமாறாக ஓட்டினால் ரூ.500.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
போக்குவரத்து போலீஸின் சமிக்ஞையை மீறினால் ரூ.200.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
போலீஸ் அதிகாரியிடம் தவறான தகவல் அளித்தால் ரூ.200.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
ஆட்டோ ரிக்ஷாவில் மீட்டருக்கு மேல் பணம் பிடுங்கினால் ரூ.50.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
எல்எல்ஆர் எனும் பழகுனர் உரிமம் இருந்தாலும், "L" போர்டு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
ஹெல்மெட் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ.100.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
கவனக்குறைவாக ரிவர்ஸ் எடுத்தால் ரூ.100.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
ஒலிப்பான் தடை செய்யப்பட்ட பகுதியில் ஹாரன் அடித்தால் ரூ.100.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
கருப்பு கண்ணாடி கார்களுக்கு ரூ.100

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
முறையான நம்பர் பிளேட் இல்லாவிடில் ரூ.100 (ஆட்டோரிக்ஷாக்களுக்கு ரூ.50)

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி சென்றால் ரூ.200.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
உடல் குறைபாடு மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் டிரைவிங் செய்தால் ரூ.100.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
அனுமதி இல்லாமல் ரேஸ் ஓட்டினால் ரூ.300.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2,000.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
பாரக்கிங் லைட் இல்லாத காருக்கு ரூ.100, ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.50

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
ஒரு வழிப்பாதையில் எதிர்திசையில் சென்றால் ரூ.100, ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.50

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
அனுமதி இல்லாத இடத்தில் யு-டர்ன் போட்டால் ரூ.100 ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.50.

போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத விபரம்
சாலையில் தடம் மாறி சென்றால் ரூ.100, ஆட்டோரிக்ஷாவுக்கு ரூ.50.

Click it and Unblock the Notifications