காரில் இந்த பிரச்சனையெல்லாம் வருதா? இதான் காரணமா இருக்கும் உடனே மாத்திடுங்க!

ஒவ்வொரு கார் உரிமையாளரும் கிளட்ச் பிளேட்டை எப்போது மாற்றுவது என்று தெரியாமல் குழம்பி வருகிறார்கள். இந்த முக்கியமான கருவி இன்ஜின் சக்தியை கியர்பாக்ஸ் மற்றும் வீல்களுக்கு மாற்றுகிறது. காலப்போக்கில், அது தேய்ந்து, கியர் மாற்றுவதில் சிக்கல்கள், காரை இழுப்பதில் சிரமம் மற்றும் பர்னிங் கிளட்ச் போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

டிரைவிங் பழக்கம், சாலை கண்டிஷன்கள் மற்றும் வாகனச் சுமை ஆகியவற்றைப் பொறுத்து கிளட்ச் பிளேட்டை மாற்றுவதற்கு சரியான காலக்கெடு என எதுவும் இல்லை. இருப்பினும், சில பொதுவான அறிகுறிகள் கிளட்ச் பிளேட் ஃபெயிலியர் ஆவதை குறிக்கின்றன. இதை சரியாக கண்டுபிடித்துவிட்டால் கிளட்ச் பிளேட் ஃபெயிலியர் ஆகாமல் தடுக்கலாம்.

கியர்களை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டால், கியர் மாற்றும் போது சத்தம் வருதல் அல்லது நழுவுதல் போன்றவை நிகழும். இது கிளட்ச் பிளேட் மோசமானதை குறிக்கலாம். அதேபோல், உங்கள் கார் அதிக எடையை இழுக்க சிரமப்பட்டால், குறிப்பாக ஏற்றமான பகுதியில் சிரமப்பட்டால், இதுவும் ஒரு குறிகாட்டியாக இருக்கலாம்.

கிளட்சை அதிகமாக அழுத்தம் பெறும் போது தீபிடித்து எரியும் வாசனை வரும். இது எரிந்த கிளட்ச் பிளேட்டின் மற்றொரு தெளிவான அறிகுறியாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உடனடியாக கிளட்ச் பிளேட்டை மாற்றுவது மிக அவசியம். இல்லை என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் கிளட்ச் பிளேட் பாதிக்கப்படலாம்.

இந்தியாவில், ஒரு காரின் கிளட்ச் பிளேட் பொதுவாக 50,000 முதல் 80,000 கிமீ வரை நீடிக்கும். இருப்பினும், மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால், உங்கள் கிளட்ச் பிளேட்டை உடனடியாகச் சரிபார்ப்பது நல்லது. இது ஒரு சராசரி ஆயுட்காலம் மட்டுமே கட்டாயமாக இந்த நேரத்தில் கிளட்ச் பிளேட்டை மாற்றவேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் சோதனை செய்து கொள்ளலாம்.

உங்கள் கிளட்ச் பிளேட்டின் ஆயுளை நீட்டிக்க, கிளட்சை மெதுவாக ரிலீஸ் செய்ய வேண்டும். டக் டக் என கிளட்சை விடுவது இன்ஜினை தட்ட செய்யும். இதனால் கிளட்ச் மீது தேவையற்ற அழுத்தம் மற்றும் விரைவான சேதம் ஏற்படுத்தும். இந்த இடத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

வாகனத்தை ஓட்டும் போது கிளட்சை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். தேவையில்லாமல் திரும்பத் திரும்ப கிளட்சை அழுத்தி ரிலீஸ் செய்வது கிளட்ச் பிளேட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். சில நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தினால், கியரை நியூட்டலுக்கு மாற்றி கிளட்சை விடுவிக்கவும். இதனால் அந்த கிளட்ச் பிளேட் பாதிப்பு ஏற்படாது.

உங்கள் காரில் அதன் அதிகபட்ச கொள்ளளவுக்கு அதிகமாக எடையை ஏற்றுவதும் கிளட்ச் பிளேட்டில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சுமை வரம்புகளுக்குள் வைத்திருப்பது வேகமாக கிளட்ச் பிளேட் சேதமாவதை தடுக்க உதவுகிறது. அதிகமான எடையுடன் வாகனம் பயணித்தால் விரைவில் கிளட்ச் பிளேட் சேதமாகிவிடும்.

ஒரு கிளட்ச் பிளேட்டை மாற்றுவது காஸ்ட்லியான செலவாக இருக்கும். எனவே, எதிர்காலங்களில் ஏற்படும் அதிக செலவுகளைத் தவிர்க்க, கிளட்ச் பிளேட்டை கவனித்து சரியாக பயன்படுத்தி அதன் ஆயட்காலத்தை அதிகரிக்க உதவி செய்ய வேண்டும். அதே நேரத்தில் சேதமான கிளட்ச் பிளேட்டை உடனடியாக மாற்றுவதையும் உறுதி செய்வது அவசியம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலமும், கிளட்ச் பிளேட் ஃபெயிலியர் ஆவதன் அறிகுறிகளைப் பற்றி அறிந்திருப்பதன் மூலமும், நீங்கள் சாஃப்டான டிரைவிங் அனுபவத்தை பெற உறுதிசெய்கிறது, இதனால் உங்கள் வாகனத்தின் ஆயுளை நீட்டிக்கலாம். தவறாக செய்து மீண்டும் தேவையில்லாமல் செவை அதிகரித்துவிடாதிர்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 28, 2024, 11:00 [IST]
English summary
Identifying when to replace a clutch plate is crucial for vehicle maintenance. Signs include gear shifting problems, difficulty in pulling, and a burning smell. Tips for extending its lifespan and cost considerations are also discussed.
மேலும்... #car tips #auto tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X