மெக்கானிக்கே தேவையில்லை! இந்த விஷயங்களை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணீங்கன்னா ஏசில பிரச்சனையே வராது!
இந்தியாவில் தற்போது குளிர் காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அடுத்த ஒரு சில வாரங்களில் இந்தியாவில் கோடை வெயில் வெளுத்து வாங்கும். வட இந்தியா முதல் தென் இந்தியா வரை கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கப்போகிறது. இப்படியான கோடை வெயில் நேரங்களில் கார்களில் பயணிக்கும் போது ஏசியை கட்டாயமாகப் பயன்படுத்துவோம்.
இனி கார்களில் ஏசி பயன்பாடு அதிகமாகப்போகிறது. இதனால் கோடை வெயில் துவங்கும் முன்னரே நாம் ஏசி சரியாக வேலை செய்கிறதா என செக் செய்து கொள்வது நல்லது. இல்லை என்றால் ஏசி பழுதாகி உங்களுக்குச் சிரமத்தைக் கூட ஏற்படுத்திவிடும். இப்படியாக ஏசியை எப்படி எளிதாகப் பராமரிப்பது, கோடைக்கு எப்படி காரின் ஏசியை தயார் செய்வது எனக் காணலாம்.

ஏர் ஃபில்டர்
கார் ஏசியில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைக்குக் காரணம் என் ஏர் ஃபில்டர் தான். ஏர் ஃபில்டரை சுத்தமாக வைத்திருப்பது ஏசியின் செயல்பாட்டிற்கு முக்கியமான விஷயம். வாரம் ஒரு முறையாவது உங்கள் காரின் ஏசி ஏர் ஃபில்டரை கழட்டி அதைச் சுத்தம் செய்து காயவைத்து மீண்டும் பொருத்திக்கொள்ளுங்கள். இதனால் கார் ஏசியில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் சரியாகும்.
காரின் சுத்தம்
எப்பொழுதும் காரின் உட்புறத்தைச் சுத்தமாக வைத்திருங்கள். நீங்கள் ஏசியின் ஏர் ஃபில்டரை சுத்தமாக வைத்திருந்தாலும், காரின் உட்புறம் தூசு அடைந்து இருந்தால் ஏசி செயல்பாட்டில் இருக்கும் போது அந்த தூசு எல்லாம் ஏசிக்குள் ஏறி ஏர் ஃபில்டரில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் எப்பொழுதும் காரின் உட்புறத்தைச் சுத்தமாக வைத்திருங்கள்.

இன்ஜின் ரேடியேட்டர் பாதுகாப்பு
காரின் இன்ஜின் ரேடியேட்டரையும் சரியாக பராமரிக்க வேண்டும். அதுவும் ஏசியின் செயல்பாட்டைப் பாதிக்கும். சரியான பாராமரிப்பின்றின காரின் இன்ஜின் அதிகமாகச் சூடானால் அந்த சூடு ரேடியேட்டர் வழியாக ஏசி கன்டென்சரை பாதிக்கும். இதனால் காருக்குள் ஏற்படும் ஏசியின் தரம் குறையும். மிக மெதுவாக கார் கூலிங் ஆகும். அல்லது கூலிங் ஆகாமலேயே இருக்கும்.
கம்பிரஷரில் கவனம்
ஒரு காரின் ஏசி கம்பிரஷன் காரின் இன்ஜின் உடன் நேரடியாக பெல்ட் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். அதிகமான வெயில் மற்றும் வெப்பம் காரணமாகச் சரியான லுப்ரிகேஷன் இல்லாமல் கம்பிரஷர் குறைவான திறனில் இயங்க வாய்ப்புள்ளது. இதனால் கோடை காலம் துவங்கும் முன்னரே இந்த பெல்ட் ஹோஸ்களை எல்லாம் செக் செய்து கொள்வது சிறந்தது.

சத்தம்
காரிலிருந்து வரும் சத்தங்களை வைத்தே காரில் பிரச்சனை இருக்கிறதா இல்லையா என செக் செய்து விட முடியும். ஏசி கம்பிரஷரிலிருந்து ஸ்டிரேஞ்சான சத்தம் வருவது நல்லதல்ல. கம்பிரஷரில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மட்டுமே இப்படியான சத்தம் வரும். இதை உடனடியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னர் சில நாட்கள் கழித்து காரை சர்வீஸ் சென்டர் கொண்டு சென்று அதிகப் பணத்தைச் செலவு செய்து பிரச்சனையைச் சரி செய்ய வேண்டியது வரும்.
பைக்லைன் கிளீனிங்
காரின் ஏசி கேஸ் பைப் லைன்களில் கசிவுகள் இருந்தால் ஏசி சிறப்பாக வேலை செய்யாது. இதனால் காரின் ஏசி கேஸ் பைப்லைன்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது. அவசியம். வாரம் ஒரு முறை அதை நீங்களே சுத்தம் செய்து கொள்ளலாம். இதனால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.
லூப்ரிகேஷன்
காரின் ஏசி கம்பிரஷர், பைப்லைன்கள் டிரைவ் பெல்ட் ஆகிய விஷயங்களை அவ்வப்போது சுத்தம் செய்து லூப்ரிகேஷன் செய்து வைப்பது சிறந்தது.

ரீசர்குலேஷன்
காரின் ஏசியில் ரீசர்குலேஷன் ஆப்ஷன் இருக்கும். இதே முடிந்த நேரங்களில் எல்லாம் பயன்படுத்திக்கொள்ளுங்கள். காரின் ஏசி கம்பிரஷர்க்கு வெளியில் உள்ள காற்றைக் குளிர்விப்பதை விட காருக்குள் ஏற்கனவே குளிராக இருக்கும் காற்றை எடுத்து மீண்டும் குளிர்விப்பது சுலபமாக இருக்கும். ஆனால் கம்பிரஷரின் வேலையைக் குறைக்க முடியும். அதன் ஆயுளும் அதிகமாகும்.
அதிக சூடான நேரத்தில் ஏசி வேண்டாம்
உங்கள் கார் நீண்ட நேரமாக நேரடியாக வெயிலில் நிறுத்தப்பட்டிருந்தால் உங்கள் காருக்குள் இருக்கும் காற்று அதிக சூடாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் காரை எடுத்தால் உடனடியாக ஜன்னல்களை மூடி ஏசியை ஆன் செய்யாமல் காரின் ஜன்னல்களைச் சிறிது நேரம் திறந்துவிட்டுப் பயணித்து காருக்குள் வெப்பக் காற்று குறைந்த பிறகு ஏசியை ஆன் செய்யலாம். இதனால் ஏசியின் வாழ்நாள் சிறப்பாக இருக்கும். இது எல்லாம் ஒரு பழக்கமாக கடைபிடிக்கலாம்.


Click it and Unblock the Notifications









