பைக்கில் நீண்ட தூர பயணம் போறீங்களா... அப்ப கண்டிப்பா இதப் படிங்க!!

வார இறுதி அல்லது விடுமுறையை கழிக்க பைக்கில் நீண்ட தூரம் டரிப் சென்று வருவது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.இதுபோன்று, பைக்கில் நீண்ட தூரம் செல்பவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடனும் ,கூடுதல் முன்னேற்பாடுகளுடன் செல்வது மிக மிக மிக அவசியம்

நீண்ட தூர பயணம் செல்பவர்கள் மிகுந்த திட்டமிடுதலுடன் செல்ல வேண்டும். இதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு ஸ்லைடரிலும் வழங்கியுள்ளேன்.

(புதிய கார்களின் விபரங்களை தெரிந்து கொள்ள இங்கே செய்யுங்கள்)

தோசைக்கல் டயரா?

தோசைக்கல் டயரா?

உங்களது பயணத்தை சுகமானதாக்குவதற்கு டயர்களின் பங்கு மிக முக்கியம். எனவே, டயர்கள் அதிக தேய்மானம் கொண்டதாக இருந்தால் மாற்றிவிடுங்கள். பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் வேண்டாம்.

பிரேக் ஷூ

பிரேக் ஷூ

கிளட்ச், பிரேக் ஷூ ஆகியவை நன்றாக வேலை செய்கிறதா என்பதை பரிசோதித்து விடுங்கள்.

எலக்ட்ரிக்கல் பிரச்னை

எலக்ட்ரிக்கல் பிரச்னை

ஹெட்லைட், இன்டிகேட்டர், டேஞ்சர் விளக்குகள் சரியாக இயங்குகிறதா, எலக்ட்ரிக்கல் பிரச்னை எதுவும் இல்லையா என்பதை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, ஹெட்லைட் டிம், பிரைட் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

எஞ்சின் ஆயில்

எஞ்சின் ஆயில்

எஞ்சின் ஆயிலை சோதிப்பது அவசியம். சரியில்லையென்றால் மாற்றிவிடுங்கள்.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

மோட்டார்சைக்கிளின் ப்ரேம், சஸ்பென்ஷன் நன்றாக இருக்கிறதா? பார்த்து விடுவது நல்லது.

டூல்ஸ் கிட்

டூல்ஸ் கிட்

பஞ்சர் மற்றும் ஸ்பார்க் பிளக்கை சரிபார்க்க உதவும் உபகரணங்கள் அடங்கிய டூல்ஸ் கிட்டை எடுத்துச் செல்வது அவசியம்.

பாரம் வேண்டாம்

பாரம் வேண்டாம்

மெல்லிய ஆடைகள் மற்றும் தடிமனனான ஆடைகள் இரண்டையும் எடுத்துச் செல்வது அவசியம். முடிந்தவரை எடையை குறைத்து எடுத்துச் செல்லுங்கள்.

பேலன்ஸ்

பேலன்ஸ்

பையில் பொருட்களை வைக்கும்போது கனமான பொருட்களை கீழேயும், எடை குறைந்த பொருட்களை மேலேயும் அடுக்கி எடுத்துச் செல்லுங்கள். இதனால், பைக்கின் பேலன்ஸ் அதிகரிக்கும்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

வாகன பதிவு சான்று, மாசுக்கட்டுப்பாட்டு சான்று, ஓட்டுனர் உரிமம் போன்றவற்றையும் மறக்காமல் கையில் எடுத்து வைத்துக் கொண்டு புறப்படுங்கள்.

போக்குவரத்து விதிகள்

போக்குவரத்து விதிகள்

பிற மாநிலம் அல்லது அடுத்த நாட்டு எல்லையை கடக்க வேண்டியிருந்தால் அந்த பகுதியின் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் ஹெல்மெட் அவசியமா உள்ளிட்ட விபரங்களை அறிந்து செல்வது மிக முக்கியம்.

ரூட் மேப்

ரூட் மேப்

கையில் ஒரு ரூட் மேப் இருக்க வேண்டும்.

ஸ்கேல்

ஸ்கேல்

எரிபொருள் அளவை அறிய உதவும் ஸ்கேல் கையில் வைத்துக்கொள்வதும் அவசியம். ரிசர்வ் விழுந்துவிட்டால் உடனடியாக வழியிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிவிடுங்கள்.

வானிலை

வானிலை

பயணம் செல்லும் நாட்களின்போது தட்பவெப்பம் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே ஒரு ஐடியாவோடு செல்வது அவசியம். கையில் ஒரு சிறிய பாக்கெட் ரேடியோ இருந்தால் உதவிகரமாக இருக்கும்.

பட்ஜெட்

பட்ஜெட்

உங்கள் பயணத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்து ஒரு பட்ஜெட்டை போட்டு, அதைவிட கொஞ்சம் கூடுதலான தொகையை எடுத்துச் செல்வது அவசியம். கையில் அதிக பணத்தை எடுத்துச் செல்லாமல் டெபிட், கிரெடிட் கார்டுகளாக இருந்தாலும் நல்லது.

உடல்நிலை

உடல்நிலை

பயணத்திற்கு உங்களது உடல்நிலை மற்றும் மனநிலை சிறப்பாக இருப்பது ரொம்ப முக்கியம். எனவே, உடல்நிலை, மனநிலையை கருத்தில்கொண்டே பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.

எனர்ஜி பார்

எனர்ஜி பார்

கையில் எனர்ஜி பார் மற்றும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

முதலுதவி பெட்டி

முதலுதவி பெட்டி

முதலுதவி சிகிச்சைக்கான மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டியும் அவசியம் இருத்தல் அவசியம்.

தங்குமிடம்

தங்குமிடம்

இரவில் எங்கு தங்கவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். பாதுகாப்பான இடமா என்பதும் முக்கியம்.

ஒருவேளை...

ஒருவேளை...

எதிர்பாராதவிதமாக விபத்து நடந்தால், உங்களை பற்றிய விபரங்கள் எளிதில் தெரியும் வகையில், சிறிய டைரி அல்லது அட்டைகளை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுஙகள்.

சிகிச்சை விபரம்

சிகிச்சை விபரம்

சிகிச்சை ஏதேனும் மேற்கொண்டு வந்தால் அந்த விபரங்களும் முழுமையாக எழுதி கையில் வைத்துக்கொள்வது முக்கியம்.

தகவல் தெரிவியுங்கள்

தகவல் தெரிவியுங்கள்

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை வீட்டிலோ அல்லது நண்பர்களிடத்திலோ அவ்வப்போது தெரியப்படுத்திவிடுங்கள். ஒருவேளை, திட்டமிட்ட பாதையில் செல்ல இடையூறு வந்து மாற்று வழியில் சென்றால் அதையும் வீட்டுக்கு தெரியப்படுத்துங்கள்.

கேமரா

கேமரா

உங்கள் பயணத்தின் பதிவுகளை படம் பிடிக்க கண்டிப்பாக கேமரா ஒன்றையும் எடுத்துச்செல்லுங்கள்.

மது அருந்தாதீர்

மது அருந்தாதீர்

கண்டிப்பாக மது அருந்திவிட்டு மோட்டார்சைக்கிளை ஓட்டாதீர்கள்.

டிப்ஸ்... டிப்ஸ்

டிப்ஸ்... டிப்ஸ்

இந்த செய்தித் தொகுப்பில் இடம்பெற்ற அடிப்படையான தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 படங்கள் உதவி

படங்கள் உதவி

மோடூர்ஸ் ரைடிங் குழுவில் பிரபலமானவரும், ஆங்கில எடிட்டர் ஜோபோ குருவில்லாவின் சகோதரருமான ஜோ என்று அழைக்கப்படும் ஜோ ஜோசப்பின் பயணங்களின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஸ்லைடரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, September 16, 2013, 15:14 [IST]
English summary
Planning to go for a long bike trip? Here we'll explain you some of the points to keep in mind before you resume a long trip.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+