ரொம்ப நாளா காரை ஒரே இடத்துல பார்க் பண்ணா இப்படியெல்லாம் பிரச்சனை வருமா?

நீண்ட காலமாக ஒரே இடத்தில் உங்கள் வாகனத்தை பார்க்கிங் செய்வது உங்கள் வாகனத்திற்கு பல்வேறு விதமான சேதத்தை ஏற்படுத்தும், குறிப்பாக அத்தியாவசிய திரவங்களை கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்சனைதான் . ஒரு கார் நீண்ட காலம் செயலற்ற நிலையில் இருக்கும்போது, ​​எண்ணெய், கூலெண்ட் மற்றும் பிரேக் திரவம் போன்ற திரவங்கள் சிதைந்து அல்லது ஆவியாகலாம். நீங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் போது இது சிக்கலை ஏற்படும் மேலும் கடுமையான சிக்கல்க்ள் ஏற்படவும் வழிவகுக்கும்.

எஞ்சின் பாகங்களை லுப்ரிகேட் செய்வதற்கு இன்ஜின் ஆயில் முக்கியமானது. காலப்போக்கில், அது சேதமாகி அதன் செயல்திறனை இழக்கலாம். உங்கள் கார் பல மாதங்களாக பயன்படுத்தபடாமல் நிறுத்தப்பட்டிருந்தால், இன்ஜின் ஆயில் இன்ஜினிற்கு போதுமான பாதுகாப்பை வழங்காமல் போகலாம், இதனால் இன்ஜின் தேய்மானம் அதிகரிக்கும்.

Long-Term Parking Tips

கூலெண்ட்கள் உங்கள் இன்ஜினின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரு காரை நீண்ட காலம் பயன்படுத்தாமல் நிறுத்தினால், கூலெண்ட் மாசுபடலாம் அல்லது ஆவியாகலாம். இதன் விளைவாக, நீங்கள் மீண்டும் காரை ஓட்டும்போது காரின் இன்ஜின் அதிக வெப்பமடையும். இது இன்ஜினின் ஆயுலை குறைக்கும்.

பிரேக்கிங் சிஸ்டத்திற்கு பிரேக் ஆயில் இன்றியமையாதது. இது காலப்போக்கில் காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, அதன் செயல்திறனைக் குறைக்கும். நீண்ட காலமாக காரை பயன்படுத்தாமல் பார்க்கிங் செய்வதால் இந்த ஆபத்து அதிகரிக்கிறது, இது உங்கள் வாகனத்தின் பிரேக்கிங் செயல்திறனை சமரசம் செய்கிறது.

Long-Term Parking Tips

கியர் பகுதியில் உள்ள ஆயில் கியர் பகுதியில் உள்ள கருவிகள் தேய்மானத்தை தடுக்கிறது மற்றும் அந்த பகுதியை குளிர்விக்கிறது. அதிக நேரம் பயன்படுத்தாமல் இருந்தால், அது சேதமாகலாம் அல்லது கசிவு ஏற்படலாம். நீங்கள் மீண்டும் வாகனம் ஓட்டத் துவங்குகும் போது இது கியர் மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட வழிவகுக்கும்.

எரிபொருள் காலப்போக்கில் செயல் திறன் குறைந்து போகும்., குறிப்பாக பல மாதங்களுக்கு ஒரு டேங்கில் எரிபொருள் இருந்தால். அந்த பழைய எரிபொருள் இன்ஜெக்டர் பகுதியை அடைத்து, காரை ஸ்டார்ட் செய்யும் போது சிக்கல்களை ஏற்படுத்தும். எரிபொருள் இல்லாமல் நீண்ட காலம் காரை ஒரே இடத்தில் பார்க்கிங்கின் போது இந்த சிக்கல்களைத் தடுக்க உதவும்.

Long-Term Parking Tips

நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாவிட்டால், பேட்டரிகள் காலப்போக்கில் சார்ஜை இழக்கின்றன. இன்ஜினை அவ்வப்போது ஸ்டார்ட் செய்யாமல் நீண்ட நேரம் நிறுத்துவது பேட்டரி செயலிழக்க வழிவகுக்கும். உங்கள் காரைத் அடிக்கடி ஸ்டார்ட் செய்வது அல்லது பேட்டரியை தனியாக கழட்டி விடுவது வாகனத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.

டயர்கள் நீண்ட நேரம் நிலையாக இருந்தால் டயரில் பாதிப்புகளை உருவாக்கலாம். காரின் எடை டயரின் ஒரு பகுதியில் தொடர்ந்து அழுத்துவதால் அதிக பகுதியை ஒருே இடம் தாங்கி இது நிகழ்கிறது. உங்கள் காரை எப்போதாவது நகர்த்துவது அல்லது டயரை அழுத்த விடாமல் நிறுத்துதாவல் இந்த சிக்கலைத் தடுக்கலாம்.

இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க, உங்கள் வாகனம் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தாலும், அடிக்கடி பராமரிப்புச் சோதனைகளைச் செய்வது அவசியம். ஆயில்கள் டாப் அப் செய்வது அல்லது அது நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வது உங்கள் காரை சிறப்பாக வைத்திருக்க உதவும். அப்பொழுது தான் தேவையில்லாத செலவுகளை தவிர்க்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நீண்டகாலமாக காரை பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கார் உரிமையாளர்களுக்கு இதில் இருக்கும் பிரச்சனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது தெரியாமல் பராமரிப்பில்லாமல் காரை ஒரே இடத்தில் நிறுத்தி அதிகமான நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. இது மேலே சொன்ன டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Sunday, July 28, 2024, 16:00 [IST]
English summary
Long-term parking can degrade car fluids and components, leading to potential issues. Regular maintenance is crucial to prevent damage.
மேலும்... #car tips #auto tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X