கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
உங்களிடம் நீண்ட தூரம் பயணிக்க ஒரு நல்ல கார் இருக்கிறதா? அந்த காரில் நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்க நல்ல மியூசிக் சிஸ்டம் இருக்கிறதா இதை விட வேறு என்ன வேண்டும் ? ஒரு நல்ல காலைப் பொழுது உங்கள் காரை எடுத்துக்கொண்டு நீண்ட தூர பயணத்தை உங்களுக்கு பிடித்த பாடலைக் கேட்டுக் கொண்டே பயணித்தால் சொர்க்கம் என்பது அதுதான். ஆனால் அதே நேரத்தில் சில ஆபத்துகளும் உள்ளன.
பலருக்கு நீண்ட தூரம் கார்களில் பயணிக்க பிடிக்கும். இப்படியாக நீண்ட தூரம் கார்களில் பயணிக்கும் போது நமக்கு அலுப்பு ஏற்படாமல் இருக்க நமக்கு பிடித்த பாடல்களை நமக்கு மனதிற்கு பிடித்த மியூசிக் நாம் கேட்டுக் கொண்டே பயணித்தால், எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணித்துக் கொண்டே இருக்கலாம். இந்த நாள் எப்பொழுது தான் வரும் என்று நம் மனம் ஏங்கிக் கொண்டே இருக்கும்.

உங்களிடம் நல்ல கார் இருக்கிறது, நல்ல மியூசிக் சிஸ்டம் இருக்கிறது, என்ற ஒரே காரணத்திற்காகவே நீங்கள் அதிக சத்தத்தில் காரில் பயணம் செய்யலாம் என நினைத்து விடக்கூடாது. அதிக சத்தமுடன் பாடல் கேட்டு கொண்டே காரில் பயணித்தால் அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏன் நீங்கள் பயணிக்கும் பயணம் விபத்தில் சிக்ககூட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக காரில் செல்லும்போது ஏசி வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக அனைத்து ஜன்னல்களையும் மூடி தான் வைத்திருப்போம். இதனால் காருக்குள் வெளியில் உள்ள சத்தம் உள்ளே கேட்பது குறைவாக தான் இருக்கும். இதனால் சின்ன சின்ன சத்தங்கள் காருக்குள் கேட்க வாய்ப்பு குறைவுதான். இந்த நேரத்தில் காரில் பாடல்களை மிக அதிக சத்தமாக வைத்தால் வெளியில் உள்ள எந்த சத்தமும் காருக்குள் இருக்கும் டிரைவருக்கு கேட்காமல் போக வாய்ப்புள்ளது.

முற்றிலுமாக மூடப்பட்ட காராக இருப்பதால் காருக்குள் அதிக சத்தம் ஸ்பீக்கரில் இருந்து வரும் போது, அது நேரடியாக டிரைவரின் காதுக்குள் இருக்கும் சென்சிடிவான செல்களை பாதிக்கிறது. இதனால் அவருக்கு காருக்கு வெளியே உள்ள சத்தத்தை கேட்கும் திறன் குறையும். தொடர்ந்து இதுபோல அதிக சத்தம் உடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தால் நிரந்தரமாக இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் காருக்குள் நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்பது ஆபத்தான விஷயமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த பாடல்கள் அதிகம் சத்தத்துடன் ஒலிக்கும் போது உங்கள் கவனத்தையும் திசை திருப்ப வாய்ப்புள்ளது. நீங்கள் கார் ஓட்டி சென்று கொண்டிருக்கும் போது இப்படியாக கவன சிதறல் ஏற்பட்டால் இதனால் உங்கள் கார் விபத்தில் சிக்ககூட வாய்ப்பு உள்ளது.

இன்றைய துள்ளல் இசை கொண்ட பாடல்கள் எல்லாம் ஈசியாக கவனத்தை திசை திருப்பி விடுகின்றன. உங்கள் மனதிற்கு நெருக்கமான பாடல் ஒலித்தால் நீங்கள் உங்களையே மறந்து நீங்கள் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையே மறந்து அந்த பாட்டுடன் லயத்துவிடுவீர்கள். இதனால் சாலையில் இருந்து உங்கள் கவனம் திசை மாற ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன.
அதிக சத்தத்துடன் பாடல் கேட்டு சென்று கொண்டிருக்கும் போது உங்களுக்கு பின்னால் வரும் வாகனம் ஹாரன் அடித்தாலும் காரைக்குள் இருக்கும் உங்களுக்கு அது கேட்காமல் போக வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் முந்தும் போது நீங்கள் காரை திருப்பி விட்டால் உங்கள் கார் விபத்தில் சிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
இதனால் நீங்கள் காரில் செல்லும்போது அதிக சத்தத்தில் பாடல்களை கேட்டுக் கொண்டே பயணம் செய்வது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும், குறைவான சத்தத்தில் உங்கள் கவனத்தை திசை திருப்பாதவாறு அதே நேரம் உங்களுக்கு தூக்கமும் வராதவாறு துள்ளலான பாடல்களை குறைவான சத்தத்தில் கேட்டு பயணித்தால் மட்டுமே பயணம் இனிதாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ஓட்டும்போது பாதுகாப்பாக ஓட்ட வேண்டியது அவசியம். எதற்காக சீட் பெல்ட் அணிவது உள்ளிட்ட விஷயங்களை நாம் செய்தாலும், இது போன்ற சின்ன சின்ன விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த அதிக சத்தம் கொண்ட பாடல்கள் கூட உங்கள் கவனத்தை திசை திருப்பி உங்கள் வாகனம் விபத்தில் சிக்க வாய்ப்பு ஏற்படுத்தலாம். இதனால் கார் ஓட்டும் போது குறைவான சத்தத்திலேயே பாடல் கேளுங்கள்.


Click it and Unblock the Notifications









