தெரியாதனமா வாங்கிட்டு அவதிப்படுபவர்கள் நிறைய பேர்! ஸ்பீடு பிரேக்கரில் இதை ஃபாலோ பண்ணுங்க
வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car) நிறுவனங்கள் இந்தியாவிற்கு வராததற்கு முக்கியமான காரணம், நம் நாட்டின் சாலைகளின் தரம் ஆகும். இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு விரைவுச்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன என்றாலும், இன்னும் பெரும்பாலான குறு நகரங்கள் மற்றும் கிராம புறங்களில் சாலைகளின் தரம் மோசமாகவே உள்ளது. இதனாலேயே, விலையுயர்ந்த கார்களை வாங்க நம் நாட்டில் செல்வந்தர்கள் நிறைய பேர் பயப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, நம் நாட்டு சாலைகளில் ஸ்பீடு பிரேக்கர்கள் (Speed Breakers) சிறிய மலை அளவிற்கு உயரமாக அமைக்கப்படுகின்றன.
இதனால், தாழ்வான ஸ்போர்ட்ஸ் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நம் நாட்டில் மிகவும் குறைவாக உள்ளது. பணம் படைத்தவர்கள் முடிந்தவரையில் ரேஞ்ச் ரோவர், லேண்ட் க்ரூஸர் போன்ற நன்கு உயரமான எஸ்யூவி கார்கள் (SUV Cars)-ஐ வாங்கவே விரும்புகின்றனர். ஆனால், உண்மையில் தாழ்வான ஸ்போர்ட்ஸ் கார்களையும் சரியாக ஓட்டினால் ஸ்பீடு பிரேக்கர்களில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஏற்றி இறக்க முடியும்.

ஸ்போர்ட்ஸ் கார்கள் ஏன் மிகவும் தாழ்வாக உருவாக்கப்படுகின்றன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். ஸ்போர்ட்ஸ் கார்களின் அடையாளமே அவற்றின் அதிவேகமான இயக்கம் ஆகும். அதிவேகத்தில் செல்லும்போது எந்தவொரு தடுமாற்றமும் இன்றி, கார் முழுவதுமாக டிரைவரின் கண்ட்ரோலில் இருக்க வேண்டுமென்றால், காரை தாழ்வாக உருவாக்க வேண்டி உள்ளது.
காரின் உடல் எந்த அளவிற்கு தரைக்கு அருகாமையில் உள்ளதோ அந்த அளவிற்கு அதன் நிலைத்தன்மை சிறப்பானதாக இருக்கும். ஆனால், அவ்வாறான கார்களை பல வெளிநாடுகளில் கூட ஸ்பீடு பிரேக்கர்களில் ஏற்றி இறக்குவது பலருக்கு பெரும் சவாலாக உள்ளது. பலர் தங்களது விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை இந்த வகையில் சேதமாக்கி கொண்டுள்ள நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன.
அதனை தவிர்க்க, அந்த நேரத்தில் நிச்சயமாக காரை மெதுவாக ஓட்ட வேண்டும். இரண்டாவதாக நாம் செய்ய வேண்டியது, காரை ஏறக்குறைய 45 டிகிரி கோணத்தில் திருப்பி ஸ்பீடு பிரேக்கரில் ஏற்றி இறங்க வேண்டும். இதன் மூலமாக, காரின் முன் மற்றும் பின் சக்கரங்கள் விரைவாகவே ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிவிடும் என்பதால், காரின் அடிப்பகுதி கொஞ்சம் கூடுதல் உயரத்துக்கு செல்லும்.

இவ்வாறு ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கும்போது காரின் 4 சக்கரங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கும். முன் சக்கரங்களில் ஒன்று ஏறி இறங்கியதும் உடனடியாக சக்கரங்களை நேர்திசைக்கு கொண்டுவந்த பின் 2வது முன் சக்கரத்தை ஏற்ற வேண்டும். இதற்கெல்லாம் உங்களுக்கு ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டிய அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும்.
குறிப்பாக, வாகனங்கள் அதிகம் செல்லும் சாலைகளில் இவ்வாறு ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறக்குவதை சில வினாடிகளில் செய்யும் அளவிற்கு டிரைவிங் திறன் உங்களிடம் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தாழ்வான ஸ்போர்ட்ஸ் கார்களை இங்கு கொண்டுவந்து சிரமப்படுவதை விட, அந்தந்த நாட்டு சூழலுக்கு ஏற்ற கார் வாங்குவது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டும்போது ஸ்பீடு பிரேக்கர்களில் அடிப்படாமல் தப்பிக்க இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். இதற்கு உங்களிடம் நல்ல கார் டிரைவிங் திறன் இருப்பதுடன், மேற்கூறப்பட்டவற்றை சாலையில் செய்ய காலியான சாலையும் வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலையில் மெதுவாக ஸ்பீடு பிரேக்கரில் ஏற்றி இறக்க போதுமான நேரம் இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








