கார் என்ஜினில் மெயின் பிரச்சனையே இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது!! மைலேஜ் அதிகம் கிடைக்க இதை செக் பண்ணுங்க!

கார் வாங்கிய புதியதில் கிடைத்த என்ஜின் பவர் இப்போது இல்லையே என எப்போதாவது யோசித்து உள்ளீர்களா? ஒரு சிலருக்கு வேறொரு காரை ஓட்டுவது போன்ற உணர்வு கூட ஏற்படலாம். காரின் என்ஜினில் காலப் போக்கில் ஏற்படும் இந்த மாறுதல்களுக்கு சில காரணங்கள் உள்ளன.

எரிபொருள் சுத்திகரிப்பானில் ஏற்படும் அடைப்பு: டேங்கில் இருந்து எரிபொருளை சுத்திகரித்து எரிபொருள் நிரப்பி வழியாக என்ஜினிற்கு வழங்கும் முக்கியமான பணியை ஃப்யுல் சுத்திகரிப்பான் மேற்கொள்கிறது. ஆதலால், ஃப்யுல் ஃபில்டரில் அழுக்கு சேர்வது வாடிக்கையாகி விடுகிறது. அவ்வாறு சேரும் அழுக்குகள் காலப் போக்கில் ஃப்யுல் ஃபில்டரை அடைத்துவிடுகின்றன.

causes of engine power loss

எரிபொருள் நிரப்பியில் ஏற்படும் அடைப்பு: ஃப்யுல் ஃபில்டர் தனது பணியை சிறப்பாக செய்யாத பட்சத்தில் மாசு துகள்கள் எரிபொருள் நிரப்பிக்கு சென்று அடைப்பை ஏற்படுத்துகின்றன. அந்த அழுக்குகள் என்ஜினின் எரிக்கும் குடுவைக்குள் எரிபொருளுடன் கலந்து செல்லும்போது என்ஜினின் செயல்திறன் பாதிக்கிறது. ஃப்யுல் இன்ஜெக்டரில் ஏற்படும் அழுக்குகளை நீக்க சில க்ளீனர்கள் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன.

காற்று வடிக்கட்டியில் ஏற்படும் அடைப்பு: என்ஜினுக்கு எரிபொருள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு காற்றும் அவசியம். அத்தகைய காற்றை வடிக்கட்டி அனுப்பும் ஃபில்டரில் அடைப்பு ஏற்படும்போது, என்ஜினிற்கு போதிய அளவிலான காற்று செல்ல முடியாமல் போகிறது. காரின் ஏர் ஃபில்டரை சுத்தம் செய்வது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமல்ல.

causes of engine power loss

அசுத்தமான எக்ஸாஸ்ட் குழாய்: மேற்கூறப்பட்ட இடங்களில் அடைப்பு ஏற்பட்டால் காரின் என்ஜின் தனது முழு திறனில் செயல்படாது. அதேநேரம், என்ஜின் தன்னிடம் வரும் மாசுக்களை எரித்து எக்ஸாஸ்ட் குழாய்க்கு அனுப்பும்போது, எக்ஸாஸ்ட் குழாயிலும் அடைப்பு ஏற்படுகிறது. இன்றைய கால கார்களில் எக்ஸாஸ்ட் குழாயில் சென்சார்கள் வழங்கப்படுகின்றன. எக்ஸாஸ்ட் குழாயில் அடைப்பை சென்சார்கள் கண்டறிந்தால் தானாக என்ஜினின் பணி தடைப்படுகிறது.

பழுதான ஸ்பார்க் பிளக்: மேற்கூறப்பட்டவை அனைத்தும் வெளியில் இருந்து ஏற்படும் பிரச்சனைகள் ஆகும். ஆனால், சில மெக்கானிக்கல் பிரச்சனைகளினாலும் கார் என்ஜினின் செயல்திறன் சிறப்பாக இல்லாமல் போகலாம். குறிப்பாக, என்ஜின் குடுவைக்குள் நெருப்பை பற்ற வைக்கும் ஸ்பார்க் பிளக் பழுதாகும்போது, கார் ஸ்டார்டிங் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

causes of engine power loss

சென்சார் பிரச்சனைகள்: இன்றைய கால மாடர்ன் கார் என்ஜின்கள் பல்வேறு சென்சார்களை கொண்டுள்ளன. என்ஜின் சிஸ்டத்தின் வெப்பநிலையை ஒரே அளவில் பேணுவதில் இருந்து, உமிழப்படும் மாசு அளவை கண்காணிப்பது வரையில் பலவற்றிற்கு சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்று முறையாக செயல்படாமல் போகும்பட்சத்தில் என்ஜினின் செயல்திறன் பாதிக்கிறது.

மற்ற பிரச்சனைகள்: மேற்கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் தான் ஒரு காரின் என்ஜினின் செயல்திறன் குறைவதற்கு பெரும்பாலான நேரங்களில் முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. இவை இல்லாமல், சேதமடைந்த எரிபொருள் நிரப்பும் பகுதி, முறையற்ற இக்னிஷன் காயில், பழுதான EGR வால்வு, பழுதான டர்போசார்ஜர் உள்ளிட்டவையும் சில சமயங்களில் காரணங்களாக அமைகின்றன.

causes of engine power loss

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் மட்டுமின்றி, எந்தவொரு வாகனத்திற்கும் என்ஜின் தான் இதயம் போன்றது. அது பழுதாகும் (அ) முறையாக செயல்படாமல் போகும்பட்சத்தில், உங்களது பயணம் அனுபவம் சிறப்பாக இல்லாமல் போகிறது. என்ஜின் அமைப்பில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக களையெடுக்க முயல்வது அவசியம். ஏனெனில், என்ஜின் பழுதுகள் பெரிய செலவை இழுத்துவிடக் கூடியவை.

More from DriveSpark

Article Published On: Sunday, December 10, 2023, 23:34 [IST]
English summary
Main causes of car engine power loss check all tips here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X