வெறும் ரூ50 ஆயிரம் சம்பளம் வாங்குறவங்க எல்லாம் கார் பத்தி கற்பனை கூட பண்ண கூடாது! ஏன் தெரியுமா?
கார் வாங்குவது பல மனிதர்களில் கனவாக இருக்கிறது. ஒரு சாதாரண இந்திய குடிமகனுக்கு தன் வாழ்வில் ஒரு காரையாவது சொந்தமாக வாங்க விட வேண்டும் என்பது மிகப் பெரிய கனவு தான். இன்று மார்க்கெட்டில் ரூ4 முதல் 5லட்சத்துக்கு குறைவான புதிய கார் என்பதை இல்லை இவ்வளவு விலை கொடுத்து கார் வாங்கி அதற்கு இஎம்ஐ கட்டும் அளவுக்கு இங்கு பல மனிதர்கள் நிலை இல்லை.
இந்தியாவில் பெரும்பாலான குடும்பம் நிரந்தர மாத வருமானத்தை வைத்து தான் அவர்களது அன்றாட செலவுகளையே செய்து வருகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் அவர்களது வருமானத்தை வைத்து ஒரு காரை தேர்வு செய்வது என்பது மிக கடினமான விஷயம் தான். இந்தியாவில் பெரும்பாலான மக்களின் மாத வருமானம் என்பது ரூபாய் 50 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கிறது.

இப்படியான நபர்கள் எந்த காரை வாங்கலாம், அவர்களது வருமானத்தில் சொந்தமாக கார் வாங்கும் முடிவு எடுப்பது சரியா அவர்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற காரை தேர்வு செய்வது எப்படி என்ற விவரங்களை தான் நாம் காண போகிறோம். இதற்கான ஒரு சிறிய கணக்கீடையும் நாம் இங்கே தெரிந்து கொள்ள போகிறோம். இதன்படி கார் வாங்கினால் நிச்சயம் எந்த பிரச்சினையும் இல்லாமல் தப்பிக்க முடியும்.
இப்பொழுது கேள்வி என்னவென்றால் உங்களுக்கு ரூபாய் 50,000 சம்பளம் இருந்தால் உங்கள் காரை எந்த பட்ஜெட்டில் வாங்கலாம் என்பதுதான் உங்கள் சம்பளம் ரூபாய் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வர இருந்தால் நீங்கள் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான காரை வாங்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் ரூபாய் 45000 குறைவாக உங்கள் சம்பளம் இருந்தால் நீங்கள் செகண்ட் ஹேண்டில் கார் வாங்குவதுதான் யோசிக்க வேண்டும். புதிய கார் வாங்குவதை யோசிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் புதிய கார் வாங்கினால் இஎம்ஐ செலுத்த முடியாமலோ அல்லது காரை பராமரிக்க முடியாமலோ திணறுவார்கள்.
புதிய கார்களுக்கு வரிகள் அதிகமாக இருப்பதால் அதை ரூ45,000 குறைவாக சம்பளம் வாங்கும் அவர்களால் செலுத்த முடியாது. நீங்கள் பார்க்கும் விலையை விட கார் ரோட்டிற்கு வரும்போது ரூ40ஆயிரம் வரை அதிகமான விலைக்கு போகும். ஆனால் நீங்கள் செகண்ட் ஹேண்டில் கார் வாங்கினால் முதலில் நீங்கள் என்ன விலை பேசுகிறீர்களோ அதே விலையில் தான் காரையும் வாங்குவீர்கள். அதனால் செகன்ட்கார் தான் ரூ45 ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் வாங்குபவர்களுக்கு சிறந்தது.

ரூ50 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்கினால் அவர்களது சம்பளத்திற்கு ஏற்ப காரை தேர்வு செய்ய முடியும். ரூபாய் 5 முதல் 6 லட்சம் வரையிலான கார்களை அவர்களால் தேர்வு செய்ய முடியும். காரை தேர்வு செய்யும் முன்பு நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் எவ்வளவு பணம் செலுத்துகிறோம் என்ற விபரம் தான் நீங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் காரை இஎம்ஐ செலுத்தி முடிக்க ஒரு சூத்திரம் ஒன்று இருக்கிறது.
இந்த சூத்திரம் என்னவென்றால் 20-4-10. இந்த சூத்திரத்தை பின்பற்றி புதிய காரை வாங்கினால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இஎம்ஐ செலுத்தி விட முடியும். 20-4-10 இந்த சூத்திரத்தின் விளக்கம், நீங்கள் கார் வாங்கும் போது காரின் விலையில் இருந்து 20% நீங்கள் முன் பணமாக செலுத்த வேண்டும். அதாவது காரின் விலை ரூ5 லட்சமாக இருந்தால் நீங்கள் குறைந்தது ரூ1 லட்சமாவது கையில் இருந்து முன்பணமாக செலுத்தி இருக்க வேண்டும்.
அடுத்ததாக 4 என்றால் நீங்கள் இந்த காருக்காக வாங்க போகும் கடனை 4 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும். அதற்கு தகுந்தார் போல் மாத இஎம்ஐ செலுத்த வேண்டும். அடுத்த 10 என்றால் 10% அதாவது உங்கள் மாத வருமானத்தில் நீங்கள் செலுத்தும் இஎம்ஐ 10% ஆக மட்டுமே இருக்க வேண்டும். அப்படி என்றால் ரூ50,000 சம்பளம் வாங்கும் ஒருவர் மாதம் ரூ5000 மட்டுமே காருக்கான இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.
அப்படிப்பட்டால் நீங்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான காரை 20 சதவீத முன் பணத்துடன் வாங்கிவிட்டு அதற்கு 4 ஆண்டுகளுக்கு மாதம் 5000 இஎம்ஐ செலுத்தினால் கடனை அடைக்க முடியாது. அதனால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது ஒரு விஷயம் இருக்கிறது.
உங்கள் மாத வருமானத்தில் 10% எவ்வளவு என கணக்கிட்டு அதை இஎம்ஐயாக செலுத்த வேண்டும் அந்த இஎம்ஐ 4 ஆண்டுகள் செலுத்தினால் எவ்வளவு கடனடையும். அதற்காக எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என கணக்கிட்டு அவ்வளவு முன் பணத்தையும் செலுத்தி நீங்கள் காரை வாங்க வேண்டும்.
உதாரணமாக ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான காரை ரூபாய் 50,000 சம்பளம் வாங்கும் ஒருவர் சொந்தமாக வாங்க வேண்டும் என்றால் அவர் முன்பணமாக ரூபாய் 3 லட்சம் செலுத்த வேண்டும். அப்பொழுது தான் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் மாதம் ரூபாய் 5000 செலுத்தி இந்த காரை அவர் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இதனால் புதிதாக கார் வாங்கும்போது சரியாக திட்டமிட்டு கணக்கிடுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான இஎம்ஐ செலுத்தி நீங்கள் காரை வாங்க வேண்டுமென்றால் அதிக முன் பணம் கொடுத்து காரை வாங்க வேண்டும். அதிக பண்புடன் கொடுத்து காரை வாங்கினால் உங்களுக்கு கார் பராமரிப்பதற்கு போதுமான பணம் ஒவ்வொரு மாதமும் கையில் இருக்கும் இதனால் காரை நீங்கள் சிறப்பாக பராமரித்து நீண்ட காலம் காரை சிறப்பாக பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications









