அமெரிக்காவில் மொபைல்போனால் விபத்துக்கள்: ஆண்டுக்கு 5000 பேர் பலி

சமீபத்தில் வெளியான ஆய்வில் அமெரிக்காவில் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது மொபைல்போனில் பேசியபடியும், எஸ்எம்எஸ் அனுப்பியபடியும் வாகனம் ஓட்டிய 5,000 பேர் கடந்த 2009ம் ஆண்டு விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, ஆண்டுதோறும் 5,000பேர் மொபைல்போன் பேசியதால் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழப்பதாக அந்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மற்றொரு விஷயமும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.
மேற்கண்ட ஆய்வில் டிரைவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு வந்தவர்கள் மொபைல்போனில் பேசியதால் டிரைவருக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு ஏராளமான விபத்துக்கள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கார் அல்லது இருசக்கர வாகனத்தில் உடன் செல்வோர் வாகனம் ஓட்டுபவருக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் மொபைல்போனில் பேசாமல் இருப்பது சாலச் சிறந்தது.


Click it and Unblock the Notifications








