லேட் பண்ணாதீங்க... விடிஞ்சதும் பைக்ல இந்த விஷயங்களை பண்ணீருங்க! இல்லாட்டி ரொம்ப பிரச்னை ஆயிரும்!

ஒரு வழியாக சுட்டெரிக்கும் கோடை காலம் (Summer) முடிந்து, தென் மேற்கு பருவமழை (South West Monsoon) காலம் வந்து விட்டது. இது பைக் ஓட்டுவதற்கு சிறந்ததொரு காலம் என்பதால், பைக் காதலர்கள் குஷியாக தொடங்கி விட்டனர். ஆனால் பருவமழை காலங்களில் உங்கள் பைக்கிற்கு கூடுதல் கவனம் தேவைப்படும்.

பருவமழை காலங்களில் சாலைகள் வழுக்கும் தன்மையுடயதாக மாறி விடும் என்பதால், பைக் ஓட்டுவதில் மட்டுமல்லாது, பைக்கை பராமரிப்பதிலும் அதிக சிரத்தை எடுத்து கொள்ள வேண்டும். பருவமழை காலங்களில் பைக்குகளை எப்படி பராமரிக்க வேண்டும்? என்பதை இந்த செய்தியின் மூலம் நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்.

Monsoon Two-wheeler Maintenance Useful Tips

அடிக்கடி சுத்தம் பண்றது நல்லது: மழைக்காலங்களில் உங்கள் பைக்கின் பல்வேறு பகுதிகளில் சேறும், சகதியும் படிந்து விடும். குறிப்பாக செயின் போன்ற பாகங்கள் இதனால் பாதிக்கப்படலாம். முழு செயின் கவருடன் வரும் பைக்குகளுக்கு இதனால் பிரச்னையில்லை. ஆனால் முழு செயின் கவர் இல்லாத பைக்குகளில் நிச்சயமாக பிரச்னை ஏற்படும்.

எனவே ஒவ்வொரு 500 கிலோ மீட்டருக்கும் ஒரு முறை செயினை சுத்தம் செய்து விடுங்கள். அதேபோல் பைக்கின் இன்ஜின் பாகத்திலும் சேறு படியலாம். இது இன்ஜின் குளிர்ச்சியடையும் திறனை பாதிக்கலாம். எனவே அதனையும் அவ்வப்போது சுத்தம் செய்து விடுங்கள். ஒட்டுமொத்தமாக மழைக்காலங்களில் பைக்கை சுத்தமாக வைத்திருப்பது நன்மை பயக்கும்.

Brake

பிரேக் முக்கியம் பிகிலு: மழைக்காலங்களில் பைக் பிரேக்குகள் விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். டிரம் பிரேக் அல்லது டிஸ்க் பிரேக் எதுவாக இருந்தாலும், மழை நீரால் பாதிக்கப்படலாம். மழைக்காலங்களில் பிரேக்குகள் தங்களது திறனை இழப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

எனவே ஒவ்வொரு பயணத்தையும் தொடங்குவதற்கு முன்பும் பிரேக்குகளை பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. அதேபோல் மழைக்காலங்களில் எப்படி பிரேக் பிடிக்கிறோம்? என்பதும் கூட மிகவும் முக்கியமானதுதான். ஏபிஎஸ் பிரேக் வசதி இருந்தாலும் கூட, சடன் பிரேக் பிடிப்பதை தவிர்ப்பது சிறந்தது.

அப்படியானால் அதற்கு ஏற்ற வகையில் நீங்கள் பைக்கை ஓட்ட வேண்டும். மழைக்காலங்களில் எப்போதும் பைக்கை மெதுவாக ஓட்டுங்கள். மற்ற வாகனங்களிடம் இருந்து சீரான இடைவெளியை கடைபிடிப்பது நன்மை பயக்கும். ஈரமான சாலைகளில் சடன் பிரேக் பிடித்தால், பைக் விபத்தில் சிக்கலாம் என்பதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

டயர்கள் மேல கவனமா இருங்க: மழைக்காலங்களில் சாலைகள் அதிகமாக வழுக்கும் என்பதால், வயர்களை நல்ல வடிவம் மற்றும் கண்டிஷனில் வைத்து கொள்வது அவசியம். டயர் சேதமடைந்த கண்டிஷனில் இருந்தால், உடனடியாக மாற்றி விடுங்கள். அதேபோல் டயர்களில் காற்று சரியான அளவில் இருப்பதும் அவசியம்தான். காற்று சரியான அளவில் இருந்தால் மட்டுமே நல்ல 'க்ரிப்' கிடைக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாங்கள் இங்கே கூறியுள்ள வழிமுறைகளை எல்லாம் பின்பற்றினால், மழைக்காலங்களில் உங்கள் பைக் பயணம் மிகவும் சுகமானதாக இருக்கும். அத்துடன் பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்பது உறுதி. இதனுடன் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முழுமையாக பின்பற்றி, மழைக்கால ட்ரிப்களை என்ஜாய் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, June 9, 2023, 23:23 [IST]
English summary
Monsoon two wheeler maintenance useful tips
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+