வேகமா, வேண்டாம்பா.. அலறும் பார்முலா ஒன் முன்னாள் சாம்பியன்

Accident
"வாகனங்களில் 90 கிமீ வேகத்துக்கு மேல் செல்வது பாதுகாப்பற்றது," என்று பார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் டேமன் ஹில் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கான வேக அளவு மணிக்கு 130 கிமீ ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரபல பார்முலா ஒன் கார் பந்தய வீரர் டேமன் ஹில்லும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போது வழக்கறிஞராக பணிபுரியும் அவர் கூறுகையில்," வாகனங்களில் 90 கிமீ வேகத்துக்கு மேல் சென்றாலே பாதுகாப்பற்றது.

மேலும், தற்போது நெடுஞ்சாலைகளி்ல் மணி்க்கு 110 கிமீ வேக அளவு பின்பற்றப்படுகிறது. இந்த வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் நெருக்கடிகளும், மன அழுத்தமும் நிறைந்ததுதான்.

ஆனால், நெடுஞ்சாலைகளில் மணிக்கு 130 கிமீ வேகத்தை நிர்ணயித்தால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும், வாகன ஓட்டிகளுக்கும் இது நெருக்கடியையும் கொடுக்கும்.

ரேஸ் டிராக்கில் மணிக்கு 320கிமீ வேகத்தில் ஓட்டியிருக்கிறேன். ஆனால், சாதாரண சாலைகளில் 55 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும்போது மிகுந்த நெருக்கடிகள் இருப்பதை உணர்கிறேன். மிதமான வேகத்தில் செல்வது சிறந்தது," என்றார்.

நம்ம ஊர் சாலைகளில் 50 கிமீ வேகத்தை தாண்டினால் ஆபத்துத்தான். எது எப்படியாயினும் மித வேகம் மிக நன்று..!

More from DriveSpark

Article Published On: Tuesday, July 3, 2012, 15:10 [IST]
English summary
Former Formula One champion Damon Hill is an advocate is claiming the motorway speed limit should be cut to 55mph. Mr Hill, who won 22 Grand Prix and a Formula One world championship, said he hardly ever drives about 70mph because it is 'too stressful.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+