மோட்டார்சைக்கிள்களின் உடற்கூறு வகைகள் பற்றிய விபரங்கள்!!

By Saravana

அனேகம் பேருக்கு மோட்டார்சைக்கிள்களை பற்றிய விஷயங்களை அதிகம் அறிந்திருந்து வைத்திருப்பர். ஆயினும், சில அடிப்படை விஷயங்களில் முழுமையாக தெளிவு இருக்காது. புதிய பைக் அறிமுகமாகும்போதும், பைக் வாங்குவதற்கு தேர்வு செய்யும்போது அந்த பைக்கின் வகைகளை பற்றிய குழப்பம் ஏற்படுவதுண்டு.

எனவே, சிறப்பம்சங்கள் மற்றும் பயன்பாட்டை பொறுத்து பைக்குகளை எளிதாக தேர்வு செய்யும் விதமாக பாடி டைப் எனப்படும் உடற்கூறு வடிவமைப்பின் அடிப்படையில் எந்த ரகத்தில் அழைக்கப்படுகிறது என்ற அடிப்படையான தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

கம்யூட்டர் பைக்

கம்யூட்டர் பைக்

கம்யூட்டர் பைக் அல்லது மாஸ் மார்க்கெட் பைக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பைக்குகள் அடிப்படை ரகத்தை சேர்ந்தவை. எளிய வடிவமைப்பு, அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டவையாக இருக்கின்றன. அதேவேளை, பெர்ஃபார்மென்ஸ் என்பதை எதிர்பார்க்க முடியாது. இந்த ரக பைக்குகள்தான் அதிகம் விற்பனையாகின்றன. இதில், சற்று கூடுதல் சிறப்பம்சங்களுடன், கூடுதல் எஞ்சின் திறன் கொண்ட பைக்குகளை எக்ஸிகியூட்டிவ் கம்யூட்டர் பைக் என்று அழைக்கின்றனர்.

உதாரணம்: ஹீரோ ஸ்பிளென்டர், பஜாஜ் பிளாட்டினா மற்றும் டிஸ்கவர், ஹோண்டா ட்ரீம் யுகா

நேக்டு பைக்

நேக்டு பைக்

நேக்டு ஸ்ட்ரீட் பைக்குகள் நடைமுறையில் பயன்படுத்துவதற்கு ஏதுவான அம்சங்களையும், நல்ல பெர்ஃபார்மென்ஸ் கொண்டவையாகவும் இருக்கும். தினசரி பயன்பாடு மற்றும் பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளுக்கு சிறப்பானதாக இருக்கும். அதேவேளை, இந்த பைக்குகளில் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்காது என்பதால், ஆடை இல்லாமல் திறந்த மேனி கொண்ட நேக்டு பைக்காக வர்ணிக்கப்படுகிறது. 150சிசி முதல் 1000 சிசி வரை திறன் கொண்ட எஞ்சின்களுடன் இவை கிடைக்கின்றன.

உதாரணம்: யமஹா எஃப் இசட் - 16, கேடிஎம் டியூக் 390, ஹோண்டா சிபி 1000ஆர்

செமி ஃபேர்டு ஸ்போர்ட்ஸ் பைக்

செமி ஃபேர்டு ஸ்போர்ட்ஸ் பைக்

ஏரோடைனமிக்ஸ் மற்றும் கவர்ச்சியான தோற்றம் என இரண்டிற்கும் ஏற்ற வகையில் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கும். மோசமான சாலைகள் மற்றும் நகர்ப்புற சாலைகள் என இரண்டிற்கும் சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கும் என்பது இதன் கூடுதல் அம்சமாக இருக்கின்றன. கம்யூட்டர் பைக்குகள் மற்றும் சில நேக்டு பைக்குகளை விட சற்று கூடுதல் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் நெடுஞ்சாலைகளில் செல்ல ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

உதாரணம்: யமஹா ஃபேஸர், பஜாஜ் பல்சர் 220, ஹீரோ கரீஷ்மா

ஃபுல் ஃபேர்டு ஸ்போர்ட்ஸ் பைக்

ஃபுல் ஃபேர்டு ஸ்போர்ட்ஸ் பைக்

பைக்கின் பெர்ஃபார்மென்ஸ் குறையாமல் காற்றை எளிதாக கிழித்துக் கொண்டு செல்லும் வகையில், முன்புறத்திலும், பக்கவாட்டிலும் பெரும்பாலான பாகங்கள் முழுவதுமாக ஃபேரிங் பேனல்களுடன் மூடப்பட்டிருக்கும். இந்த பைக்குகளில் பெரும்பாலும் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். பவரை பொறுத்து 150சிசி முதல் 1,000சிசி வரை இந்த வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகள் கிடைக்கின்றன.

உதாரணம்: யமஹா ஆர்15, ஹோண்டா சிபிஆர் 150ஆர் உள்ளிட்ட பைக்குகளை கூறலாம்.

க்ரூஸர் பைக்

க்ரூஸர் பைக்

நெடுந்தூர பயணங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் மிக சொகுசாக செல்வதற்கு ஏற்ற அம்சங்களுடன், சற்று பவர்ஃபுல் எஞ்சின் கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன. இவற்றின் இருக்கையும் மிகவும் தாழ்வாக இருக்கும். மேலும், நெடுந்தூர பயணங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில், பல்வேறு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து தரப்படுகின்றன. அதேவேளை, போக்குவரத்து மிகுதியான நேரங்களில் இந்த பைக்கின் கையாளுமை சற்று சிரமமாக இருக்கும்.

உதாரணம்: ஹார்லி டேவிட்சன் சூப்பர்லோ, ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு, பஜாஜ் அவெஞ்சர்

ஸ்போர்ட்ஸ் டூரர்

ஸ்போர்ட்ஸ் டூரர்

சொகுசு, பெர்ஃபார்மென்ஸ் என இரண்டிலும் குறை வைக்காத பைக்குகள் இவை. ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் இருப்பது போன்ற ரைடிங் பொஷிசன் கொண்ட குரூஸர் பைக்குகளாக இவை வடிவமைக்கப்படுகின்றன. சிறந்த தொழில்நுட்ப வசதிகள் மற்றும் நெடுந்தூர பயணங்களுக்கு சிறப்பானவையாக இருக்கும்.

உதாரணம்: பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஆர்டி

 ஆஃப்ரோடு / சாகச பைக்

ஆஃப்ரோடு / சாகச பைக்

பெரும்பாலான ஆஃப் ரோடு அல்லது சாகசம் செய்ய பயன்படும் பைக்குகள், சாதாரண சாலை மற்றும் கரடு முரடான சாலைகளில் செல்லும் வகையில் பிரத்யேக வடிவமைப்பை கொண்டிருக்கின்றன. மேலும், அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும், கீழே தவறி விழுந்தாலும் அதிக பாதிப்புகள் ஏற்படா வண்ணம் வடிவமைக்கப்படுகின்றன. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சஸ்பென்ஷன் உள்ளிட்ட பாகங்கள் மிகவும் உறுதியானதாக இருக்கும்.

உதாரணம்: ஹீரோ இம்பல்ஸ், டிரையம்ஃப் டைகர், பிஎம்டபிள்யூ 1200 ஜிஎஸ்

சூப்பர் பைக்

சூப்பர் பைக்

அதிக சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்களைத்தான் சூப்பர் பைக்குகள் என்று குறிப்பிடுகிறோம். இந்த பைக்குகளில் பொருத்தப்படும் எஞ்சின்கள் 1000சிசி அல்லது அதற்கு மேலும் திறன் கொண்டதாக இருக்கும். சாலையில் பயன்படுத்தத்தக்க மாடல்களாகவும் இருக்கின்றன. ரேஸ் பைக்குகளைவிட சற்று கூடுதல் எரிபொருள் சிக்கனம், சொகுசு மற்றும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் வகையிலான அம்சங்களை கொண்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் விட இவற்றின் அலாதியான சப்தம் இளசுகளை தூண்டுவதாக இருக்கிறது.

உதாரணம்: பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர், சுஸுகி ஹயபுசா, யமஹா ஆர்1, டுகாட்டி 1199 பானிகேல் எஸ்

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2013, 10:44 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+