மழை காலத்தில் இந்த வசதிகள் எல்லாம் உங்க காரில் கண்டிப்பா இருக்கணும்! ஏன்னு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவ மழை (Monsoon) தீவிரமடைந்து கொண்டுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், உங்கள் காரில் ஒரு சில வசதிகள் (Car Features) இருந்தால், உங்கள் பயணம் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் இருக்கும். அந்த வசதிகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள்: இது மழை காலங்களில் மிகவும் அவசியமான ஒரு வசதியாகும். இது கண்ணாடியில் மழை நீர் விழுவதை தானாகவே கண்டறிந்து, அதற்கேற்ப வைப்பர்களை இயங்க வைக்கிறது. கனமழை கொட்டும்போது, உகந்த பார்வையை இந்த வசதி உறுதி செய்கிறது.

Rain-Sensing Wipers

ஹைட்ரோபோபிக் கண்ணாடி பூச்சு: இது உங்கள் காரின் விண்டுஸ்க்ரீனில் செய்யப்படும் ஒரு கோட்டிங் ஆகும். மழை நீர் துளிகளை விரட்ட இது உதவி செய்கிறது. இதன் மூலம் வைப்பர் பயன்பாட்டை பெரிதும் நம்பாமல், மழை செய்யும் சமயங்களில் உங்கள் பார்வையை இது மேம்படுத்துகிறது.

ஏபிஎஸ்: பிரேக்கிங் செய்யும்போது, ​​குறிப்பாக ஈரமான சாலைகளில் சக்கரங்கள் லாக் ஆவதை ஏபிஎஸ் வசதி தடுக்கிறது. எனவே உங்களால் காரை மிக எளிமையாக கட்டுப்படுத்த முடியும். கட்டுப்பாடடை அதிகரிப்பதுடன், கார் சறுக்குவதையும் ஏபிஎஸ் வசதி குறைக்கிறது. எனவே வழுக்கும் தன்மையுடைய சூழல்களில் கார் ஓட்டுவதை இது பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

ABS

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்: காரின் நான்கு சக்கரங்களுக்கும் இன்ஜின் சக்தியை வினியோகம் செய்யும் பணியை, ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உறுதி செய்கிறது. இதன் மூலம் ஈரமான சாலைகளில் சிறந்த இழுவை மற்றும் க்ரிப் ஆகியவற்றை இது வழங்குகிறது. அத்துடன் சவாலான வானிலை நிலவும் சூழல்களில் வாகனம் ஓட்டும்போது, நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டையும் இது மேம்படுத்துகிறது.

ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம்: சக்கர சுழற்சியை ஒழுங்குபடுத்துவதன் மூலம், டயர்களுக்கும், சாலை மேற்பரப்புக்கும் இடையில் இழுவையை பராமரிக்க இது உதவி செய்கிறது. அத்துடன் ஈரமான சாலைகளில் ஆக்ஸலரேஷன் செய்யும்போது, கார் கட்டுப்பாட்டை இழப்பதையும் இது தடுக்கிறது. சிறந்த நிலைத்தன்மை மற்றும் க்ரிப் ஆகியவற்றை இது உறுதி செய்கிறது.

Traction Control System

தண்ணீரை உறிஞ்சாத அப்ஹோல்ஸ்ட்ரி: உங்கள் காரின் இருக்கைகள் ஈரப்பதத்தை உறிஞ்சுவதை இது தடுக்கிறது. எனவே மழை காலங்களில் உங்கள் காரின் இருக்கைகளை சுத்தம் செய்து பராமரிப்பதை இது மிகவும் எளிமையாக்குகிறது. இதன் மூலம் உங்கள் காரின் இன்டீரியர் மழை காலங்களில் தூய்மையாக இருக்கும்.

மழை கால்வாய்கள்: உங்கள் காரின் விண்டோக்கள் பகுதியளவு திறந்திருக்கும்போது, மழைநீர் கேபினுக்கு உள்ளே நுழைவதை தடுக்க இந்த மழை கால்வாய்கள் உதவி செய்கின்றன. இதன் மூலம் உங்கள் காரின் இன்டீரியர் ஈரம் ஆகாமல், புத்துணர்ச்சியான காற்றை உங்களால் உற்சாகமாக அனுபவிக்க முடியும்.

அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ்: மழை காலங்களில் வெள்ளம் சூழ்ந்த சாலைகளை சமாளிக்க வேண்டுமென்றால், உங்கள் காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் அதிகமாக இருக்க வேண்டும். கரடு முரடான ஆஃப் ரோடு நிலப்பரப்புகளில் பயணம் செய்யும்போதும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழை காலங்களில் இந்த வசதிகள் எல்லாம் உங்கள் காரில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் மழை நீரால் ஏற்படும் சவால்களை நீங்கள் மிகவும் எளிமையாக சமாளிக்க முடியும். இந்த வசதிகள், உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாகவும், சௌகரியமானதாகவும் மாற்றுகின்றன என்பதால், நீங்கள் முக்கியத்துவம் வழங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 26, 2023, 14:48 [IST]
English summary
Must have car features during monsoon from hydrophobic glass coating to rain gutters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X