நியூஇயர் கொண்டாடும் போது இதை மட்டும் செய்யாதீங்க! அப்புறம் யாராலயும் உங்கள காப்பாத்த முடியாது
2024 ஆம் ஆண்டு புத்தாண்டு இன்னும் ஓரிரு நாட்களில் வரப்போகிறது. இந்த புத்தாண்டை கொண்டாட நாம் எல்லாம் தயாராகி வருகிறோம். இந்த புத்தாண்டில் பலர் தங்கள் கார்களில் பொத இடங்களுக்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இப்படியாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நீங்கள் வாகனங்களில் செய்யக்கூடாத விஷயங்கள் என்ன? செய்யக்கூடிய விஷயங்கள் என்ன என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
சரியாக திட்டமிடுங்கள்: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பலருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. இன்று வரை பெருநகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது பார்ட்டிகள் அதிக அளவில் நடக்கிறது. இப்படியாக நீங்கள் மதுவுடன் புத்தாண்டை கொண்டாட விரும்பினால் நீங்கள் மது அருந்தும் இடத்திலிருந்து பத்திரமாக உங்களுக்கு வீட்டிற்கு வர உங்கள் குழுவிலேயே மது அருந்தாத டிரைவர் ஒருவர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மது போதையில் வாகனம் ஓட்டாதீர்கள்: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது முற்றிலும் தவறாகும். மது போதையில் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். அதனால் நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தி இருந்தால் உங்கள் வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
சாலையில் பாதுகாப்பான பயணம்: என்னதான் புத்தாண்டு நேரத்தில் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் அதிகமாக ஈடுபட்டாலும், அந்த நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக தான் இருக்கும். அதனால் நீங்கள் சாலையில் வாகனம் ஓட்டும்போது சக வாகன ஓட்டிகளை கணித்து வாகனம் ஓட்டுகள். சாலையில் மற்ற வாகன ஓட்டிகள் மதுபோதையில் வந்து உங்கள் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

காரை சரியான பார்க்கிங்கில் நிறுத்துங்கள்: பலருக்கு காரை சாலையில் நிறுத்தும் பழக்கம் இருக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்து செல்லும் பலர் காலையில் உள்ள வாகனங்களை சேதப்படுத்தி செல்லும் நிகழ்வு அடிக்கடி நடந்துள்ளது. அதனால் நீங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உங்கள் வாகனத்தை சரியான பார்க்கிங்கில் நிறுத்துங்கள். இதன் மூலம் உங்கள் வாகனம் தேவையில்லாமல் சேதமாவது தவிர்க்கப்படும்.
இரவு நேர பயணத்தை தவிருங்கள்: புத்தாண்டை நீங்கள் தனியாக பிரைவேட் இடத்தில் கொண்டாட திட்டமிட்டு இருந்தால் இரவு 8 மணிக்கு முன்பே நீங்கள் கொண்டாடும் இடத்திற்கு சென்று விடுங்கள். இரண்டு மணி வரை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து விட்டு பின்னர் வேண்டுமானால் நீங்கள் வீட்டிற்கு திரும்பலாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் சாலையில் அதிகமான நபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடும். இதனால் உங்களுக்கு போக்குவரத்து நெருக்கடி இருக்கலாம்.

சன்ரூஃப் வழியாக எட்டி பார்க்காதீர்கள்: இன்று விற்பனைக்கு வரும் பல வாகனங்களில் சென்று சென்ற வசதி இருக்கிறது. பலர் இதை மனிதர்கள் வெளியே எட்டிப் பார்ப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வசதி என்ன தவறாக புரிந்து கொள்கிறார்கள். குறிப்பாக புத்தாண்டு நேரங்களில் இதில் எட்டிப் பார்த்தபடியே பயணம் செய்வது என்பது ஒரு பொழுதுபோக்காக இருக்கிறது. இது முற்றிலும் தவறு, இது வாகனம் விபத்தில் சிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.
பைக்குகளில் வீலிங் வேண்டாம்: புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுசாலைகளில் பைக்குகளில் பயணிக்கும் பலர் வீலிங் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் புத்தாண்டு கொண்டாட வந்திருக்கும் பலரது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வார்கள். இது பெரும் ஆபத்தான விஷயமாகும். இதுபோன்ற செயல்களை நிச்சயம் செய்யாதீர்கள்.

இந்த டிப்ஸ்களை எல்லாம் பின்பற்றினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு நிம்மதியாகவும் சிறப்பாகவும் இருக்கும். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இந்த புத்தாண்டை நீங்கள் கொண்டாட முடியும் புத்தாண்டு நேரங்களில் அதிகமான சாலை விபத்துக்கள் நடக்கிறது. அதனால் இதை மனதில் வைத்து நீங்கள் இந்த புத்தாண்டை உங்கள் வாகனங்களில் பயணிக்கும் போது பாதுகாப்பாக பயணித்து சிறப்பாக கொண்டாடுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புத்தாண்டு என்பது ஒரு கொண்டாட்டத்திற்கான விஷயம்தான் என்றாலும் அதில் கவனமாக இருக்க வேண்டும் பலர் வாகனங்களில் வித்தைக்காட்டி புத்தாண்டை கொண்டாடி அந்த வாகனம் விபத்தில் சிக்கி உயிரிழப்பு கூட ஏற்பட்டுள்ளது. பலருக்கு கை கால் உடைந்துள்ளது இப்படியான மோசமான விளைவுகளுடன் புத்தாண்டை நீங்கள் கொண்டாட வேண்டுமா ஒரு முறை யோசித்துப் பார்த்து பாதுகாப்பாக இருங்கள்.


Click it and Unblock the Notifications









