காசு மட்டும் காரணம் கிடையாது! மேனுவல் கியர் கார்களை மக்கள் அதிகம் தேர்வு செய்ய இதுவும் காரணம்!

இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் மேனுவல் கியர் உடன் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனையும் வழங்கி வருகின்றனர். வாகனம் ஒட்டுவதற்கு மேனுவல் கியரை விட ஆட்டோமெட்டிக் கியர் தான் சுலபமாக இருக்கும். இருந்தாலும் மக்கள் பலர் மேனுவல் கியர் காரையே தேர்வு செய்கின்றரன். இதற்கான காரணம் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.

பலர் மேனுவல் கியர் காரை விட ஆட்டோமெட்டிக் கியர் கொண்ட கார்கள் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் மேனுவல் கியர் காரைதேர்வு செய்கிறார்கள் என நினைத்து வருகின்றனர். இது ஒரு காரணமாக இருந்தாலும் இது மட்டுமே காரணம் அல்ல, காசு இருந்தாலும் மக்கள் பலர் மேனுவல் கியர் காரை தேர்வு செய்வார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இரக்கிறது ஒவ்வொன்றாக காணலாம் வாருங்கள்.

automatic vs Manual Gear cars

என்கேஜ்மென்ட்

வாகனம் ஒட்டும் போதும் டிரைவரை மேனுவல் கியர் கார்கள் தான் அதிக என்கேஜாக வைத்துள்ளது. ஆட்டோமெட்டிக் கியர் கார்களில் டிரைவர் என்கேஜ்மென்ட் குறைவு, அதனால் டிரைவிங்கை ஒரு பயணமாக மட்டுமல்லாமல் ஒரு அனுபவமாக உணர நினைப்பவர்கள் மேனுவல் கியர் காரையே தேர்வு செய்கிறார்கள்.

அதிக கண்ட்ரோல்

ஆட்டோமெட்டிக் கியர் கார்களில் கிளட்ச், கியர் எல்லாம் இருக்கும், ஆனால் நீங்கள் டிரைவிங் செய்யும் கண்டிஷன்களுக்கு ஏற்ப அது தானாக செயல்படும் அதிக கண்ட்ரோலை தேடும் வாடிக்கையார்களுக்கு மேனுவல்கள் கியர் தான் அதிக கண்ட்ரோலை தரும். இதுவும் மேனுவல் கியர் காரை மக்கள் தேர்வு செய்ய முக்கிய காரணம்.

automatic vs Manual Gear cars

பெர்ஃபார்மென்ஸ்

மேனுவல் கியர் காரில் அதி்க பெர்ஃபார்மென்ஸை ஓட்டுநரால் பெற முடியும். முக்கியமாக வாகனங்களை முந்தும் நேரங்களில் கியரை குறைந்து இழுவையை அதிகரித்து முந்த முடியும். ஆட்டோமெட்டிக் கியர் கார்களில் உடனடியான பெர்ஃபார்மென்ஸை பெற முடியாது. இதுவும் மேனுவல் கியரை மக்கள் தேர்வு செய்ய முக்கியமான காரணம்.

மலை பயணத்திற்கு ஏற்றது

மலை பகுதிகளில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் மேனுவல் கியர் இருந்தால் தான் தேவையான இடத்தில் கியரை குறைந்து இழுவையை அதிகரிக்க முடியும். மேனுவல் கியர் கார்களில் இதை எளிதாக செய்ய முடியும் என்னதான் ஆட்டோமெட்டிக் கார்களில் கியரைமாற்ற பெடல் ஸ்விஃப்டர் போன்ற விஷயங்கள் வழங்கப்பட்டாலும் அதுமேனுவல் கியர் போல செயல்படாது என்பதால் மேனுவல் கியரை சிலர் தேர்வு செய்கிறார்கள்.

automatic vs Manual Gear cars

ஆஃப்ரோடு பயணம்

ஆஃப்ரோடு பயணம் செய்யும் விரும்பிகள் பலர் ஆட்டோமெட்டிக் கியர் கார்களை விட மேனுவல் கியர் கார்களைஅதிகம் தேர்வு செய்கிறார்கள். இதற்கும் மலை பகுதி பயணத்திற்கு மக்கள் தேர்வு செய்யும் அதே காரணம் தான். ஆஃப்ரோடு பயணம் செய்யும் விரும்பிகள் இந்தியாவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறைவான பராமரிப்பு செலவு

ஆட்டோமெட்டிக் கியர் கார்கள் என்னதான் சுலபமாக கார் ஓட்ட உதவினாலும் பராமரிப்பு செலவு என்று வந்துவிட்டால் மேனுவல் கியர் கார்கள் ஆட்டோமெட்டிக் கியர் கார்களை விட குறைவான பராமரிப்பு செலவு கொண்டது. இதுவும் மேனுவல் கியர் காரை மக்கள் தேர்வு செய்ய முக்கியமான காரணம்.

நம்பகதன்மை

காலம் காலமாக மக்கள் மேனுவல் கியர் பாக்ஸில் பழகிவிட்டனர். அவர்களுக்கு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பழக்கம்இல்லை என்பதால் எதற்கு தேவையில்லாத தலைவலி என சிலர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களை தேர்வு செய்துவிடுகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேனுவல் கியர் கார்கள் ஆட்டோமெட்டிக் கியர் கார்களைவிட விலை குறைவாக இருப்பது மட்டும் மக்கள் அதை தேர்வு செய்வதற்கான காரணம் இல்லை. மாறாக பல்வேறு காரணங்கள் இருக்கிறது. இருந்தாலும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. விரைவில் அதை வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயரும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 19, 2025, 18:35 [IST]
English summary
Not only cost why people prefer manual transmissions over automatic
மேலும்... #auto tips #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X