ஒரு காரை பார்க் பண்ணுறதுக்கு பின்னாடி இவ்வளவு டெக்னாலஜி வேலை செய்யுதா?
சமீப காலமாக ஆட்டோமொபைல் துறையில் தொழில்நுட்பங்கள் புகுந்து வருகிறது. இது ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. முக்கியமாக ரைடிங் அனுபவத்தை மிக சுலபமாக மாற்றி வருகிறது. இதில் முக்கியமானது வாகனங்களை மிகக் குறுகலான இடத்தில் பார்க் செய்வது என்று மிகப் பெரிய விஷயமாகவே இல்லை. இதற்கு என்னென்ன தொழில்நுட்பங்கள் எல்லாம் உதவுகின்றன என்ற விரிவான விபரங்களை தான் காண போகிறோம்.
இன்று பலருக்கு கார் ஓட்டுவது என்பது அலாதி பிரியமான ஒரு விஷயமாக இருக்கும் ஆனால் கார் ஓட்டுவதில் இருக்கும் பெரிய சிக்கல் அந்த காரை சரியான இடத்தில் பார்க் செய்வது தான் முக்கியமாக அதிக கூட்டம் நிறைந்த அதிக டிராபிக் நிறைந்த சாலைகளில் ஆங்காங்கே இருக்கும் பார்க்கிங்களில் மிகக் குறுகலான இடம்தான் கிடைக்கும். அங்கே சரியாக கார் ஓட்டி பார்க்கிங் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் எல்லாம் இந்த பார்க்கிங் தலைவலி கார் வைத்திருக்கும் மக்களுக்கு நன்றாக தெரியும். இருக்கும் இடத்தில் தங்கள் காரை சரியாக பார்க் செய்வது என்பது ஒரு கலை தான். சரியாக திட்டமிட்டு வாகனத்தை பார்க் செய்ய வேண்டும். என்பது பலருக்கும் தலைவலியான ஒரு விஷயமாகவே இருக்கிறது.
காரை பார்க் செய்வதை விட பெரிய விஷயம் சரியாகப் செய்யப்பட்ட காரை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுப்பது இந்த இரண்டுமே கார் டிரைவர்களுக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுக்கும் விஷயம் தான். பலர் காரில் இருக்கும் டென்ட்டுகள், ஸ்கிராட்ச்சுகள் எல்லாம் இப்படியாக பார்க்கிங்களில் இருந்து வாகனத்தை வெளியில் எடுக்கும் போது அல்லது பார்க்கிங் உள்ளே வாகனத்தை விடும்போதோ ஏற்பட்டதாக தான் இருக்கிறது.

ஆனால் இந்த பிரச்சனைக்கு எல்லாம் தீர்வாக தொழில்நுட்பங்கள் தற்போது வேகமாக வந்துவிட்டன. டிரைவிங் செய்யும் போது ஏற்படும் சிக்கல்களை அறிந்து அந்த சிக்கல்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்பங்கள் தற்போது ஆட்டோமொபைலில் உட்பகுத்தப்பட்டு வருகின்றன. இதில் மிகக் குறுகலான இடத்தில் பார்க்கிங் செய்வதற்கான தொழில்நுட்பமும் வந்துவிட்டது.
வாகனம் தயாரிப்பாளர்கள் இப்படியான தொழில்நுட்பங்களை தங்கள் வாகனங்களில் புகுத்தி அதன் மூலமாக விற்பனையை அதிகரிக்க முடிவு செய்து வருகின்றார்கள். இப்படியாக அனைத்து வாகனங்களிலும் தற்போது முக்கியமான மூன்று தொழில் நுட்பங்கள் இருக்கிறது இந்த மூன்று தொழில்நுட்பங்கள் உங்கள் வாகனத்தில் இருந்தால் உங்கள் வாகனத்தை எந்தவிதமான தலைவலியும் இல்லாமல் சுலபமாக செய்ய முடியும்.

360 டிகிரி கேமரா: 360 டிகிரி கேமரா தற்போது விற்பனையாகி வரும் கார்களில் மிக முக்கியமான தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு தொழில்நுட்பமாக இருக்கிறது. இந்த கேமராவை ஆன் செய்தால் உங்கள் காரை சுற்றி என்ன இருக்கிறது என்பதை காருக்கு மேலே ஒரு கேமரா வைத்து பார்த்தது போன்ற ஒரு லுக்கே உங்களுக்கு கொடுத்து விடும். இதன் மூலம் நீங்கள் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது கவனமாக எடுக்க முடியும்.
இந்த தொழில்நுட்பதற்காக வாகனத்தை சுற்றி ஆங்காங்கே கேமராக்கள் வைக்கப்பட்டு அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை தொழில்நுட்ப முறையில் ஒன்றிணைத்து ஒரே நேரத்தில் வாகனத்தின் மேலே இருந்து பார்க்கும் விதமாக வடிவமைத்திருக்கிறார்கள். விலை உயர்ந்த கார்களில் காருக்கு அடியில் இருப்பது காரின் முன் பக்கம் கீழ் பகுதியில் இருக்கும் விஷயங்களை கூட கண்காணிப்பதற்கு கேமராக்கள் வந்து விட்டன.
பார்க்கிங் சென்சார்: இன்று குறைந்த விலை கார்களில் கூட இந்த பார்க்கிங் சென்சார் என்பது பொருத்தப்படுகிறது. சில பழைய வாகனங்களில் இந்த சென்சார்கள் இல்லை என்றாலும் தற்போது வெளி மார்க்கெட்டில் இப்படியான சென்சார்கள் விற்பனையாகி வருகிறது. அதை வாங்கி உங்கள் வாகனங்களில் பொருத்திக் கொள்ளும் வசதியும் தற்போது இருக்கிறது. இன்று இந்த சென்சார் இல்லாத காரை இல்லை என்று சொல்லிவிடலாம்.
இந்த சென்சார் பொருத்தப்பட்ட வாகனங்களில் குறிப்பிட்ட வாகனத்திற்கு அருகே வேறு வாகனங்கள் மோதும் விதமாக வந்தால் உடனடியாக அந்த சென்சார்கள் அதை உணர்ந்து டிரைவரை எச்சரிக்கும் வகையில் இது செட்டப் செய்யப்பட்டுள்ளது. இது இருந்தாலும் ரிவர்ஸ் எடுக்கும் போது வாகனத்தை திருப்பும் போது ஏற்படும் ஸ்கிராட்சுகளில் இருந்து தப்பிக்க முடியும்.
பார்க்கிங் கேமராக்கள்: இன்று விற்பனைக்கு வரும் வாகனங்களில் பார்க்கிங் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இது 360 டிகிரி கேமராவிற்கும் பயன்படுகிறது. இந்த கேமராக்கள் இருந்தால் வாகனத்தை ரிவர்ஸ் இருக்கும் போதும் முன்பக்கம் பார்க் செய்யும் போதும் இடிக்காமல் இருக்க அது உதவுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது வாகனத்தின் பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இதனால் வாகனத்தின் பார்க்கிங் விஷயத்தில் அதிகமான தொழில்நுட்பத்தை உற்பத்தி வருகின்றன. மேலே சொன்ன தொழில்நுட்பங்கள் உள்ள கார்களை நீங்கள் வாங்கினால் பார்க்கையிலே எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுலபமாக பார்த்து செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications









